”தம்பி தப்பு” வைரலானது ஏன்?.. குடும்பத்தையே அசிங்கமா பேசுறாங்க.. நட்டி நட்ராஜ் எமோஷனல்!
சென்னை: தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நடிப்பில் இந்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அவசர அவசரமாக வெளியாகி ஃப்ளாப் ஆன படம் தான் 'TN 2026' அந்த படம் விஜய் அரசியலையும் ரஜினிகாந்த் அரசியலையும் ட்ரோல் செய்யும் விதமாக உருவாகி இருந்ததாக கடும் விமர்சனங்கள் கிளம்பின.
தேர்தலுக்கு வராமல் கடைசியாக ஓடிப்போவது போன்ற காட்சிகள் இடம்பெற்ற நிலையில், ரசிகர்கள் ரொம்பவே காண்டாகி நட்டி நட்ராஜை திட்டத் தொடங்கினர்.

சில ஆபாச வார்த்தைகள் கமெண்ட்டுகளாக வந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக "தம்பி தப்பு" என நட்டி நட்ராஜ் போட்ட கமெண்ட் ஒரு புது படத்துக்கு டைட்டிலே வைக்கலாம் போல அந்த அளவுக்கு வைரலாகி விட்டது. இந்நிலையில், அதுதொடர்பாக யூடியூபர் இர்பான் கேட்ட கேள்விக்கு நட்டி நட்ராஜ் செம எமோஷனலாக விளக்கம் அளித்துள்ளார்.
வைரலான "தம்பி தப்பு": விஜய் நடித்த யூத் படத்தில் ஒளிப்பதிவு செய்து ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் தான் நட்டி நட்ராஜ். அதன் பின்னர் பாலிவுட் வரை ஒளிப்பதிவாளராக சென்று அசத்திய நட்டி நட்ராஜ் புலி படத்திற்கு மீண்டும் விஜய்க்காக ஒளிப்பதிவு செய்தார். அதன் பின்னர், சதுரங்க வேட்டை படத்தில் நடித்த அவர் அந்த படம் வெற்றியடைய தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவர் போட்ட "தம்பி தப்பு" கமெண்ட் ட்ரோல் மெட்டீரியலாகவும் வைரல் ஸ்டேட்மெண்ட்டாகவும் மீம் மெட்டீரியலாகவும் மாறியுள்ளது.
குடும்பத்தை அப்யூஸ் பண்றாங்க: "தம்பி தப்பு" என்கிற வார்த்தை இப்போ வைரலாகி விட்டது. அந்த வார்த்தையை எப்படி சொன்னீங்க என யூடியூபர் இர்பான் சமீபத்தில் நட்டி நட்ராஜிடம் எடுத்த பேட்டியின் போது கேள்வி எழுப்ப, சோஷியல் மீடியாவில் ரொம்பவே அசிங்கமாகவும் ஆபாசமான வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி என்னையும் என் குடும்பத்தையும் அப்யூஸ் பண்ணாங்க. ஃபேக் ஐடியில் வந்து இப்படி ஆபாசமாக பேசுவது தவறு என்பதை சுட்டிக் காட்ட பதிலுக்கு நானும் ஆபாசமாக பேசாமல் "தம்பி தப்பு" என்று தான் கமெண்ட் போட்டேன். ஆனால், அது இந்தளவுக்கு வைரலாகும் என நினைக்கவில்லை என்று பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications