»   »  சேரனுடன் காதலா? நவ்யா

சேரனுடன் காதலா? நவ்யா

Subscribe to Oneindia Tamil

எனக்கு எதையும் மறைத்துப் பேசத் தெரியாது, ஒளிமறைவில்லாமல் பேசக் கூடிய, பழகக் கூடிய பெண் நான் என்கிறார் நவ்யா நாயர்.

அழகிய தீயே, தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய அழகிய தேவதை நவ்யா நாயர். சில நடிகைகளைப் பார்த்தால் அழகாகத் தெரியும், சிலரைமீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும். இதில் நவ்யா 2வது வகை. அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாத அபார அழகி.

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி நவ்யாவுக்கு பெ>ய பிரேக் கொடுத்தது. அதன் பின்னர் மளமளவென்று நடிக்க ஆரம்பித்தார். ஆனால் சேரனுடன்சேர்ந்து நடிக்க ஆரம்பித்ததும் நவ்யா நாயரின் மார்க்கெட்டில் பெரிய பிரேக் விழுந்து விட்டது.

ஆடும் கூத்து படத்தில் முதலில் இருவரும் இணைந்து நடித்தனர். இப்போது மாயக்கண்ணாடி படத்தில் நடித்து வருகின்றனர். ரொம்ப நாட்களாகஇந்தப் படம் வளர்ந்து வருகிறது. கூடவே சேரனையும், நவ்யாவையும் இணைத்து வந்திகளும் வளர்ந்து வருகின்றன.

இருவரையும் இணைத்து நிறைய செய்திகள் வருகிறதே, என்ன மாதிரியான நட்பு உங்களோடது என்று நவ்யாவிடம் கேட்டால் புன்னகை தவழவிளக்குகிறார் நவ்யா.

எனக்கு அவர் நல்ல நண்பர். அவர் அனைவருடனும் நட்பாக பழகுவார். என்னுடனும் அப்படித்தான் பழக்குகிறார். நானும் யாரிடமும் சகஜமாகபேசும் குணம் கொண்டவள். எதையும் மறைத்துப் பேசத் தெ>யாது, வெளிப்படையாக, ஒளிவுமறைவில்லாமல் பேசக் கூடிய, பழகக் கூடிய பெண்நான்.

இருவரும் நல்ல நண்பர்கள், யாரையும் நான் காதலிக்கவில்லை. எனக்கு உண்மையில் அதற்கு நேரமே இல்லை. சினிமாவில் நான் சாதிக்கவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நல்ல கேரக்டர்களைத் தேடித் தேடி நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறிய நவ்யா அப்படியேபிளாஷ்பேக்கிற்குப் போனார்.

நான் நடிக்க வந்தது 16 வயதில். இப்போது ஆறு வருடங்களாகி விட்டது (அப்ப நவ்யா வயசு 22!). நிறையப் படங்களில் நடித்தாகி விட்டது.ஆனாலும் திருப்தி வரவில்லை. இன்னும் நிறையப் படங்களில், நல்ல நல்ல கேரக்டர்கள் செய்ய வேண்டும்.

கல்லூரியில் படித்தபோது, முடித்து விட்டு கல்யாணமாகி செட்டிலாகி விட வேண்டும் என்பதுதான் எனது யோசனையாக இருந்தது. ஆனால்எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. நடிக்க வந்து விட்டேன். இதை விதி என்றுதான் சொல்ல வேண்டும் என்றார் நவ்யா.

விதி என்பதை சந்தோஷமா சொல்றாரா இல்லை சோகமாக சொல்கிறாரா?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil