»   »  நயனதாராவின் சுய ஆய்வு!

நயனதாராவின் சுய ஆய்வு!

Subscribe to Oneindia Tamil

தனது தனிப்பட்ட வாழ்க்கை, திரையுலக வாழ்க்கை குறித்த சுய ஆய்வில் தீவிரமாகஇறங்கியிருக்கிறார் நயனதாரா.

எந்த வேகத்தில் தமிழ் சினிமாவில் உச்சத்திற்குச் சென்றாரோ அதே வேகத்தில் சர்ச்சைசிகரத்திலும் ஏறி கலகலத்தவர் நயனதாரா. ரஜினியின் ஜோடி என்ற அந்தஸ்தில் தமிழ்சினிமா நயனதாராவுக்கு பட்டுக் கம்பளம் விரித்து பட வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்தது.

ஆனாலும் வல்லவன் படத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் அதில் நடித்து முடியும்வரை அதிக படங்களை ஒப்புக் கொள்ள முடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு அவர்தள்ளப்பட்டார்.

ஒரு வழியவாக வல்லவனுடன் ஏற்பட்ட காதல், மோதலாகி இப்போது ஃப்ரீ பேர்ட்ஆகி விட்டார் நயனதாரா. சிம்புவுடனான நட்பின் வலையையும் மீறி அவர் நடித்ததலைமகன், ஈ ஆகிய படங்களில் நயனதாராவின் நடிப்பு மிளிர்ந்து ஒளிர்ந்தது.

2007ல் தான் ஒரு சிறந்த நடிகையாக அறியப்பட வேண்டும் என்ற உறுதியுடன்புத்துணர்ச்சியுடன் புதுப் படங்களில் நடிக்க காத்திருக்கிறார் நயனதாரா.

வித விதமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை அசத்த வேண்டும் என்ற ஒரேலட்சியம்தான் இப்போது நயனதாராவிடம் உள்ளதாம்.

இதுவரையிலான எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரையுலக வாழ்க்கை குறித்துஅலசி ஆராய்ந்து வருகிறேன். 2006ல் நடந்த அத்தனையையும் (சிம்புவையும் தான்!)மறந்து விட்டு புதிய நயனதாராவாக இந்த ஆண்டில் சிறப்பாக நடிப்பதே எனதுலட்சியம் என்கிறார் நயனா.

நடிகைகளுக்கு தென்னிந்திய சினிமாவில் திறமையைக் காட்டும் வகையிலானவாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படியே நடித்தாலும் ஏதாவது சர்ச்சையைக் கிளப்பிவிட்டு விடுகிறார்கள்.

உயிர் படத்தில் சங்கீதா அருமையாக நடித்திருந்தார். ஆனால் அது பெரும் சூட்டைக்கிளப்பி விட்டது. ஏன்தான் இப்படிச் செய்கிறார்களோ என்று வருத்தப்படுகிறார்நயனதாரா.

தெலுங்கில் நயனதாரா நடித்துள்ள யோகி படம் அவருக்கு தெலுங்குத் திரையுலகில்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாம். கன்னடத்தில் சக்கை போடு போட்டஜோகி படம்தான் யோகி என்ற பெயரில் தெலுங்கு பேசப் போகிறது. அடுத்தடுத்துதெலுங்கு, தமிழ் என மாறி மாறி நடிக்கத் திட்டமிட்டுள்ளாராம் நயனதாரா.

சிம்பு வம்புக்குப் பிறகு தனது செல்போன் எண், தனது உதவியாளர்களின் செல்போன்எண்களை டோட்டலாக மாற்றி விட்டார் நயனதாரா. இனிமேல் எனது திறமைகளைமுழுமையாக பார்க்கும் பாக்கியத்தை ரசிக்ரகள் பெறுவார்கள் என்றும் நயனதாரா படுஉற்சாகமாக பேசுகிறார்.

அசத்துங்க சேச்சி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil