இந்தியை மறுத்த நயனதாரா இந்தியில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்து விட்டார் நயனதாரா. வேக வேகமாக வளர்ந்து வந்த நயனதாரா, சிம்புவுடன் ஏற்பட்ட நட்புக்குப் பின்னர்தேங்கி நின்று விட்டார். இப்போது நயனதாராவின் கையில் தமிழில் வல்லவன் மற்றும்தலைமகன் மட்டுமே உள்ளன.தெலுங்கிலும் ஆரம்பத்தில் பிக் அப் ஆவது போல இருந்தது. ஆனால் இப்போதுஅங்கும் அதிக படம் இல்லையாம். இதனால் சொந்த ஊரான கேரளத்தில் மலையாளப்படங்களில் பிஸியாகிவிட்டார் நயன்ஸ்.இந் நிலையில் இந்தியில் தன்னைத்தேடி வந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறிவிட்டாராம் நயனதாரா. எல்லாம் வல்லவனின் ஆலோசனைப்படிதானாம்.இப்படி படமே இல்லாமல் இருந்தும், இந்தியை வேண்டாம் என்று கூறியதன் காரணம்என்னவோ என்று நயனதாராவிடம் கேட்டால்,யார் எனக்கு படம் இல்லை என்று சொன்னது. தமிழில் வல்லவன், தலைமகன் ஆகியபடங்களில் நடித்து வருகிறேன் (ரொம்ப காலமாக). ஜீவாவுடன் ஈ படத்திலும்நான்தான் ஹீரோயின். (ஆனா, எப்போ சூட்டிங்?)இது தவிர தெலுங்கில் 2 படங்கள் உள்ளன. நாகார்ஜுனாவுடன் பாஸ் என்ற படத்தில்எனக்கு மிக நல்ல ரோல்.மொத்தமாக கையில் 6 படங்கள் இருக்கு தெரியுமா என்று பழிப்பு காட்டியநயனதாராவிடம், இந்தியை வேண்டாம் என்று சொன்னது ஏன் என்று விடாப்பிடியாகமடக்கினோம்.இந்தியில் ராஜ்குமார் சந்தோஷி படம் எனக்கு வந்தது. ஆனால் கால்ஷீட் டைட்டாகஇருப்பதால் கொடுக்க முடியவில்லை. இதனால் அந்தப் படம் கைநழுவிப் போய்விட்டது.அதை விட தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் கவனம் செலுத்துவதே எனதுமுதன்மையான குறிக்கோள். இதனால் தான் இந்தியில் கை விடடுப்போன வாய்ப்பைஎண்ணி கவலைப்படவில்லை என்கிறார் நயனதாரா.வழக்கமாக இந்தியில் வாய்ப்பு வந்தால் இருக்கிற படங்களையெல்லாம் அப்படியேவிட்டுவிட்டு ஓடும் நடிகைகள் மத்தியில் நயனதாரா இந்திக்கு நோ சொல்லிவிட்டுதென்னிந்திய ரசிகர்களை தொடர்ந்து குளிர்விப்பது என்ற முடிவை எடுத்துள்ளார்.இந்தியில் தேறுவது ரொம்ப கஷ்டம், அங்கு எதற்கும் தயாராக இருக்க வேண்டும்..அது வேண்டாம் என்று வல்லவன் தான் அட்வைஸ் கொடுத்து நயன்ஸை நிறுத்தினார்என்கிறார்கள்.

By Staff

இந்தியில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்து விட்டார் நயனதாரா.

வேக வேகமாக வளர்ந்து வந்த நயனதாரா, சிம்புவுடன் ஏற்பட்ட நட்புக்குப் பின்னர்தேங்கி நின்று விட்டார். இப்போது நயனதாராவின் கையில் தமிழில் வல்லவன் மற்றும்தலைமகன் மட்டுமே உள்ளன.

தெலுங்கிலும் ஆரம்பத்தில் பிக் அப் ஆவது போல இருந்தது. ஆனால் இப்போதுஅங்கும் அதிக படம் இல்லையாம். இதனால் சொந்த ஊரான கேரளத்தில் மலையாளப்படங்களில் பிஸியாகிவிட்டார் நயன்ஸ்.

இந் நிலையில் இந்தியில் தன்னைத்தேடி வந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறிவிட்டாராம் நயனதாரா. எல்லாம் வல்லவனின் ஆலோசனைப்படிதானாம்.

இப்படி படமே இல்லாமல் இருந்தும், இந்தியை வேண்டாம் என்று கூறியதன் காரணம்என்னவோ என்று நயனதாராவிடம் கேட்டால்,

யார் எனக்கு படம் இல்லை என்று சொன்னது. தமிழில் வல்லவன், தலைமகன் ஆகியபடங்களில் நடித்து வருகிறேன் (ரொம்ப காலமாக). ஜீவாவுடன் ஈ படத்திலும்நான்தான் ஹீரோயின். (ஆனா, எப்போ சூட்டிங்?)

இது தவிர தெலுங்கில் 2 படங்கள் உள்ளன. நாகார்ஜுனாவுடன் பாஸ் என்ற படத்தில்எனக்கு மிக நல்ல ரோல்.

மொத்தமாக கையில் 6 படங்கள் இருக்கு தெரியுமா என்று பழிப்பு காட்டியநயனதாராவிடம், இந்தியை வேண்டாம் என்று சொன்னது ஏன் என்று விடாப்பிடியாகமடக்கினோம்.

இந்தியில் ராஜ்குமார் சந்தோஷி படம் எனக்கு வந்தது. ஆனால் கால்ஷீட் டைட்டாகஇருப்பதால் கொடுக்க முடியவில்லை. இதனால் அந்தப் படம் கைநழுவிப் போய்விட்டது.

அதை விட தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் கவனம் செலுத்துவதே எனதுமுதன்மையான குறிக்கோள். இதனால் தான் இந்தியில் கை விடடுப்போன வாய்ப்பைஎண்ணி கவலைப்படவில்லை என்கிறார் நயனதாரா.

வழக்கமாக இந்தியில் வாய்ப்பு வந்தால் இருக்கிற படங்களையெல்லாம் அப்படியேவிட்டுவிட்டு ஓடும் நடிகைகள் மத்தியில் நயனதாரா இந்திக்கு நோ சொல்லிவிட்டுதென்னிந்திய ரசிகர்களை தொடர்ந்து குளிர்விப்பது என்ற முடிவை எடுத்துள்ளார்.

இந்தியில் தேறுவது ரொம்ப கஷ்டம், அங்கு எதற்கும் தயாராக இருக்க வேண்டும்..அது வேண்டாம் என்று வல்லவன் தான் அட்வைஸ் கொடுத்து நயன்ஸை நிறுத்தினார்என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X