»   »  சிம்புவுன் காதலா? நோ நோ :நயனதாரா பல்டி சிம்புவை நான் காதலிக்கவில்லை என்று நயனதாரா உட்டாலங்கடி பல்டிஅடித்துள்ளார்.வல்லவன் படத்திற்காக சிம்புவுடன் உதட்டுக் கடி போஸ் கொடுத்து பரபரப்பைஏற்படுத்தினார் நயனதாரா. அப்போதே இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டுவிட்டதாக செய்திகள் கசியத் தொடங்கின.அதை உறுதிப்படுத்துவது போல இருவரும் நெருக்கமாக பழகத் தொடங்கினார்.நயனதாரா எங்கே சென்றாலும் பின்னாலேயே சிம்புவும் போகத் தொடங்கினார்.நயனதாரா வெளிநாடு போனால் சிம்புவும் போய்விடுவார். இருவரும் ஒரே இடத்தில்தங்கியிருந்ததுவிட்டு திரும்பி வருவார்கள். இப்படிச் சுற்றியதால் அவர்கள் குறித்தகிசுகிசு நிஜமாகத் தொடங்கியது.இதை உறுதி செய்வது போல நாங்கள் ஒளிவுமறைவின்றி பழகுகிறோம், ஒருகணவரைப் போல என்னிடம் உண்மையாக பழகுகிறார் சிம்பு. எங்களுக்குள்கல்யாணம் என்று மடிவானால் இரு வீட்டாரும் அதற்கு எதிராக இருக்க மாட்டார்கள்என்று வெளிப்படையாக பேட்டி கொடுத்தார் நயனதாரா.இதைத் தொடர்ந்து இருவரும் காதலிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதேசமயம்,சென்னை அருகே ராகவேந்திரா கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்துகொண்டு விட்டதாகக் கூட செய்திகள் வெளியாகின.இந் நிலையில் ஆந்திராவில் ஷூட்டிங்குக்காகப் போயுள்ள நயனதாரா அங்குசெய்தியாளர்களிடம் பேசுகையில்,சிம்புவை நான் காதலிக்கவில்லை என்று பல்டி அடித்துள்ளார். அவர் கூறுகையில்,எனக்கும், சிம்பவுக்கும் துளிக் கூட காதல் இல்லை. இருவரும் நல்லநண்பர்களாகத்தான் நடந்து கொள்கிறோம். இதைப் போய் காதல் என்றால் எப்படி?எங்களுக்குள் ஒளிவுமறைவு கிடையாது. அந்த அளவுக்கு நன்றாக பழகுகிறோம்.இதை வைத்து இருவருக்கும் காதல் என்று கட்டி விட்டு விட்டார்கள்.உண்மையைச் சொல்வதானால் இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை.கல்யாணத்துக்கும் எனக்கு அவசரம் இல்லை. கஜினி படத்தில் நான் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்.அந்தப் படத்தில் சின்ன ரோலில் நடிக்கப் போய் இப்போது ஏகப்பட்ட பேர் சின்னரோல்களில் நடிக்க கூப்பிடுகிறார்கள். இதற்காக நான் யாரையும் குற்றம் சாட்டவிரும்பவில்லை என்றார் நயனதாரா.சிம்புவுடனான காதல் காரணமாக நயனதாராவை தமிழ் ஹீரோக்கள் அவாய்ட் செய்யஆரம்பித்துள்ளனர். இதனால் தமிழில் புதிய வாய்ப்புக்கள் இல்லாத நிலையில்உள்ளார்.இதனால் தான் இப்படி ஒரு பல்டியை அடித்துள்ளார் நயனதாரா என்கிறார்கள் விவரம்அறிந்தவர்கள்.இதற்கிடையே மீண்டும் விறுவிறுப்பாகியுள்ள வல்லவன் படப்பிடிப்பில், டி.ராஜேந்தர்கலந்து கொண்ட ஒரு பாடல் காட்சியை சிம்பு படமாக்கினார்.இந்தப் பாடலுக்கு நீங்கள்தான் டான்ஸ் ஆட வேண்டும் என்று அப்பாவைவலியுறுத்தியுள்ளார் சிம்பு. மகன் சொல்லைத் தட்டாமல் உடனேயே ஓ.கே. சொல்லிவிட்டார் தாடி .. ஸாரி, டாடி.இதையடுத்து அந்தப் பாடலை சுட்டார் சிம்பு. அந்தப் பாடலில் ராஜேந்தருடன் சிம்பு,நயனதாரா, ரீமா சென் ஆகியோர் ஆடியுள்ளனர்.முன்னதாக படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்த ராஜேந்தரின் காலில் விழுந்துஆசி பெற்றாராம் நயனதாரா.இதுக்கு என்ன காரணமோ?நண்பரின் தந்தை என்பதால் விழுந்திருப்பாரோ நயனா?

சிம்புவுன் காதலா? நோ நோ :நயனதாரா பல்டி சிம்புவை நான் காதலிக்கவில்லை என்று நயனதாரா உட்டாலங்கடி பல்டிஅடித்துள்ளார்.வல்லவன் படத்திற்காக சிம்புவுடன் உதட்டுக் கடி போஸ் கொடுத்து பரபரப்பைஏற்படுத்தினார் நயனதாரா. அப்போதே இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டுவிட்டதாக செய்திகள் கசியத் தொடங்கின.அதை உறுதிப்படுத்துவது போல இருவரும் நெருக்கமாக பழகத் தொடங்கினார்.நயனதாரா எங்கே சென்றாலும் பின்னாலேயே சிம்புவும் போகத் தொடங்கினார்.நயனதாரா வெளிநாடு போனால் சிம்புவும் போய்விடுவார். இருவரும் ஒரே இடத்தில்தங்கியிருந்ததுவிட்டு திரும்பி வருவார்கள். இப்படிச் சுற்றியதால் அவர்கள் குறித்தகிசுகிசு நிஜமாகத் தொடங்கியது.இதை உறுதி செய்வது போல நாங்கள் ஒளிவுமறைவின்றி பழகுகிறோம், ஒருகணவரைப் போல என்னிடம் உண்மையாக பழகுகிறார் சிம்பு. எங்களுக்குள்கல்யாணம் என்று மடிவானால் இரு வீட்டாரும் அதற்கு எதிராக இருக்க மாட்டார்கள்என்று வெளிப்படையாக பேட்டி கொடுத்தார் நயனதாரா.இதைத் தொடர்ந்து இருவரும் காதலிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதேசமயம்,சென்னை அருகே ராகவேந்திரா கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்துகொண்டு விட்டதாகக் கூட செய்திகள் வெளியாகின.இந் நிலையில் ஆந்திராவில் ஷூட்டிங்குக்காகப் போயுள்ள நயனதாரா அங்குசெய்தியாளர்களிடம் பேசுகையில்,சிம்புவை நான் காதலிக்கவில்லை என்று பல்டி அடித்துள்ளார். அவர் கூறுகையில்,எனக்கும், சிம்பவுக்கும் துளிக் கூட காதல் இல்லை. இருவரும் நல்லநண்பர்களாகத்தான் நடந்து கொள்கிறோம். இதைப் போய் காதல் என்றால் எப்படி?எங்களுக்குள் ஒளிவுமறைவு கிடையாது. அந்த அளவுக்கு நன்றாக பழகுகிறோம்.இதை வைத்து இருவருக்கும் காதல் என்று கட்டி விட்டு விட்டார்கள்.உண்மையைச் சொல்வதானால் இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை.கல்யாணத்துக்கும் எனக்கு அவசரம் இல்லை. கஜினி படத்தில் நான் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்.அந்தப் படத்தில் சின்ன ரோலில் நடிக்கப் போய் இப்போது ஏகப்பட்ட பேர் சின்னரோல்களில் நடிக்க கூப்பிடுகிறார்கள். இதற்காக நான் யாரையும் குற்றம் சாட்டவிரும்பவில்லை என்றார் நயனதாரா.சிம்புவுடனான காதல் காரணமாக நயனதாராவை தமிழ் ஹீரோக்கள் அவாய்ட் செய்யஆரம்பித்துள்ளனர். இதனால் தமிழில் புதிய வாய்ப்புக்கள் இல்லாத நிலையில்உள்ளார்.இதனால் தான் இப்படி ஒரு பல்டியை அடித்துள்ளார் நயனதாரா என்கிறார்கள் விவரம்அறிந்தவர்கள்.இதற்கிடையே மீண்டும் விறுவிறுப்பாகியுள்ள வல்லவன் படப்பிடிப்பில், டி.ராஜேந்தர்கலந்து கொண்ட ஒரு பாடல் காட்சியை சிம்பு படமாக்கினார்.இந்தப் பாடலுக்கு நீங்கள்தான் டான்ஸ் ஆட வேண்டும் என்று அப்பாவைவலியுறுத்தியுள்ளார் சிம்பு. மகன் சொல்லைத் தட்டாமல் உடனேயே ஓ.கே. சொல்லிவிட்டார் தாடி .. ஸாரி, டாடி.இதையடுத்து அந்தப் பாடலை சுட்டார் சிம்பு. அந்தப் பாடலில் ராஜேந்தருடன் சிம்பு,நயனதாரா, ரீமா சென் ஆகியோர் ஆடியுள்ளனர்.முன்னதாக படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்த ராஜேந்தரின் காலில் விழுந்துஆசி பெற்றாராம் நயனதாரா.இதுக்கு என்ன காரணமோ?நண்பரின் தந்தை என்பதால் விழுந்திருப்பாரோ நயனா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்புவை நான் காதலிக்கவில்லை என்று நயனதாரா உட்டாலங்கடி பல்டிஅடித்துள்ளார்.

வல்லவன் படத்திற்காக சிம்புவுடன் உதட்டுக் கடி போஸ் கொடுத்து பரபரப்பைஏற்படுத்தினார் நயனதாரா. அப்போதே இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டுவிட்டதாக செய்திகள் கசியத் தொடங்கின.

அதை உறுதிப்படுத்துவது போல இருவரும் நெருக்கமாக பழகத் தொடங்கினார்.

நயனதாரா எங்கே சென்றாலும் பின்னாலேயே சிம்புவும் போகத் தொடங்கினார்.நயனதாரா வெளிநாடு போனால் சிம்புவும் போய்விடுவார். இருவரும் ஒரே இடத்தில்தங்கியிருந்ததுவிட்டு திரும்பி வருவார்கள். இப்படிச் சுற்றியதால் அவர்கள் குறித்தகிசுகிசு நிஜமாகத் தொடங்கியது.

இதை உறுதி செய்வது போல நாங்கள் ஒளிவுமறைவின்றி பழகுகிறோம், ஒருகணவரைப் போல என்னிடம் உண்மையாக பழகுகிறார் சிம்பு. எங்களுக்குள்கல்யாணம் என்று மடிவானால் இரு வீட்டாரும் அதற்கு எதிராக இருக்க மாட்டார்கள்என்று வெளிப்படையாக பேட்டி கொடுத்தார் நயனதாரா.


இதைத் தொடர்ந்து இருவரும் காதலிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதேசமயம்,சென்னை அருகே ராகவேந்திரா கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்துகொண்டு விட்டதாகக் கூட செய்திகள் வெளியாகின.

இந் நிலையில் ஆந்திராவில் ஷூட்டிங்குக்காகப் போயுள்ள நயனதாரா அங்குசெய்தியாளர்களிடம் பேசுகையில்,

சிம்புவை நான் காதலிக்கவில்லை என்று பல்டி அடித்துள்ளார். அவர் கூறுகையில்,எனக்கும், சிம்பவுக்கும் துளிக் கூட காதல் இல்லை. இருவரும் நல்லநண்பர்களாகத்தான் நடந்து கொள்கிறோம். இதைப் போய் காதல் என்றால் எப்படி?

எங்களுக்குள் ஒளிவுமறைவு கிடையாது. அந்த அளவுக்கு நன்றாக பழகுகிறோம்.இதை வைத்து இருவருக்கும் காதல் என்று கட்டி விட்டு விட்டார்கள்.

உண்மையைச் சொல்வதானால் இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை.கல்யாணத்துக்கும் எனக்கு அவசரம் இல்லை.

கஜினி படத்தில் நான் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்.

அந்தப் படத்தில் சின்ன ரோலில் நடிக்கப் போய் இப்போது ஏகப்பட்ட பேர் சின்னரோல்களில் நடிக்க கூப்பிடுகிறார்கள். இதற்காக நான் யாரையும் குற்றம் சாட்டவிரும்பவில்லை என்றார் நயனதாரா.


சிம்புவுடனான காதல் காரணமாக நயனதாராவை தமிழ் ஹீரோக்கள் அவாய்ட் செய்யஆரம்பித்துள்ளனர். இதனால் தமிழில் புதிய வாய்ப்புக்கள் இல்லாத நிலையில்உள்ளார்.

இதனால் தான் இப்படி ஒரு பல்டியை அடித்துள்ளார் நயனதாரா என்கிறார்கள் விவரம்அறிந்தவர்கள்.

இதற்கிடையே மீண்டும் விறுவிறுப்பாகியுள்ள வல்லவன் படப்பிடிப்பில், டி.ராஜேந்தர்கலந்து கொண்ட ஒரு பாடல் காட்சியை சிம்பு படமாக்கினார்.

இந்தப் பாடலுக்கு நீங்கள்தான் டான்ஸ் ஆட வேண்டும் என்று அப்பாவைவலியுறுத்தியுள்ளார் சிம்பு. மகன் சொல்லைத் தட்டாமல் உடனேயே ஓ.கே. சொல்லிவிட்டார் தாடி .. ஸாரி, டாடி.

இதையடுத்து அந்தப் பாடலை சுட்டார் சிம்பு. அந்தப் பாடலில் ராஜேந்தருடன் சிம்பு,நயனதாரா, ரீமா சென் ஆகியோர் ஆடியுள்ளனர்.


முன்னதாக படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்த ராஜேந்தரின் காலில் விழுந்துஆசி பெற்றாராம் நயனதாரா.

இதுக்கு என்ன காரணமோ?

நண்பரின் தந்தை என்பதால் விழுந்திருப்பாரோ நயனா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil