வித்யாபாலனை விட 'பெஸ்ட்' நயன்தாரா: கம்முலா 'கலகல' பாராட்டு!

சென்னை: வித்யாபாலனை விட, நயன்தாரா சிறந்த நடிகை எனப் பாராட்டியுள்ளார் கஹானிப் பட டைரக்டர் சேகர் கம்முலா.

சேகர் கம்முலா டைரக்‌ஷனில், வித்யாபாலன் நடித்து பரபரப்பாக பேசப்பட்ட இந்தி படமான கஹானியின் தமிழ் ரீமேக்கான 'நீ எங்கே என் அன்பே' படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் தயாராகியுள்ளது. இதிலும் நயன் தான் ஹீரோயின்.

கஹானியில், அமெரிக்காவில் இருந்து வந்து, மும்பையில் காணாமல் போன கணவரை தேடும் கர்ப்பிணி பெண்ணாக வித்யாபாலன் நடித்து இருந்தார்.ஆனால், அனாமிகாவிலும், நீ எங்கே என் அன்பே படத்திலும் நயன்தாரா கர்ப்பிணியாக இல்லாமல், இயல்பான தோற்றத்தில் நடித்திருப்பதாகச் சொல்லப் படுகிறது. நயந்தாராவுக்காக கர்ப்பிணிக் கதாபாத்திரத்தை மாற்றி கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், சென்னை வந்த கஹானி டைரக்டர் சேகர் கம்முலாவிடம் இது குறித்துக் கேட்கப்பட்டது. இப்பேட்டியின்போது நடிகர் வைபவ், இசையமைப்பாளர் மரகதமணி ஆகிய இருவரும் உடன் இருந்தனர்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் தான் மாற்றினேன்....

நான் தான் மாற்றினேன்....

கேள்வி: கஹானி படத்தின் ரீமேக்கில், கர்ப்பிணியாக நடிக்க நயன்தாரா மறுத்ததாக பேசப்பட்டதே, அது உண்மையா?

பதில்: நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்க மறுக்கவில்லை. நான்தான் கதாபாத்திரத்தை மாற்றி அமைத்தேன்.

சவாலான வேடம்...

சவாலான வேடம்...

கேள்வி:எதற்காக அந்த கதாபாத்திரத்தை மாற்றி அமைத்தீர்கள்?

பதில்:தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிக்காகவும் அந்த கதாபாத்திரத்தை மாற்றினால் பொருத்தமாக இருக்கும் என்று கருதினேன். கர்ப்பிணி வேடத்தை சாதாரணமாக மாற்றி நடிக்க வைப்பது ஒரு சவாலான விஷயமாக எனக்கு தோன்றியது.

நயன் தான் சிறந்த நடிகை...

நயன் தான் சிறந்த நடிகை...

கேள்வி:ஒரே கதையில் வித்யாபாலனை கர்ப்பிணியாகவும், நயன்தாராவை இயல்பான தோற்றத்திலும் நடிக்க வைத்து இருக்கிறீர்கள். இரண்டு பேரில் யார் சிறந்த நடிகை?

பதில்:வித்யாபாலனை விட, நயன்தாரா சிறந்த நடிகைதான். அவர் இந்த படத்தில் நடித்தது, அதிர்ஷ்டம். கர்ப்பிணியாக நடித்தால் சுலபமாக அனுதாபத்தை சம்பாதித்துவிட முடியும். ஆனால், சாதாரண தோற்றத்தில் ஒரு பெண் நடித்து அனுதாபம் சம்பாதிப்பது, சுலபம் அல்ல. அதில், நயன்தாரா வெற்றி பெற்று இருக்கிறார்.

சொந்தக்குரல் இல்லை...

சொந்தக்குரல் இல்லை...

கேள்வி:நயன்தாராவுக்கு வேறு ஒருவர் குரல் கொடுத்து இருக்கிறாரே...சொந்த குரலில் அவர் பேசாதது ஏன்?

பதில்:சொந்த குரலில் பேச வேண்டும் என்று நயன்தாராவிடம் நான் கேட்கவில்லை. அவரும் என்னிடம் சொல்லவில்லை.

அது வதந்தி தான்....

அது வதந்தி தான்....

கேள்வி:நீங்கள் டைரக்டு செய்த லீடர் தெலுங்கு படத்தை தமிழில் ரஜினிகாந்தை வைத்து எடுக்கப்போவதாக ஒரு பேச்சு அடிபட்டதே?

பதில்:அது வெறும் வதந்திதான். ஆனால், அந்த படத்தை தமிழில் எடுத்தால் ரஜினிகாந்துக்கு மட்டுமே அது பொருத்தமாக இருக்கும். இதுபற்றி நான் ரஜினிகாந்துடன் இன்னும் பேசவில்லை' என இவ்வாறு சேகர் கம்முலா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X