»   »  புதிய கிசுகிசுவில் நயனதாரா!

புதிய கிசுகிசுவில் நயனதாரா!

Subscribe to Oneindia Tamil


எனக்கும் தெலுங்குப் படமான துளசி படத்தின் நாயகன் வெங்கடேஷுக்கும் இடையே எந்த உறவும் இல்லை. இருவரும் நல்ல நண்பர்கள், எங்களைப் பற்றி வரும் வதந்திகளில் உண்மை இல்லை என்று நயனதாரா கூறியுள்ளார்.

Click here for more images

கலக்கல் நாயகியாக அறிமுகமான நயனதாரா பின்னர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சங்கட நாயகியானார். வல்லவன் படத்திற்குப் பிறகு தமிழில் படங்களைக் குறைத்துக் கொண்ட நயனதாரா தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்துகிறார்.

தமிழில் தனுஷுடன் யாரடி நீ மோகினி, அஜீத்துடன் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

லேட்டஸ்டாக தெலுங்கில் வெங்கடேஷுடன் அவர் துளசி என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் மிதமிஞ்சிய கவர்ச்சியில் கலக்கியுள்ளார். வெங்கடேஷுடன் நெருக்கமாகவும் நடித்துள்ளார். இதனால் இருவரையும் இணைத்து வதந்திகள் கிளம்ப ஆரம்பித்து விட்டன.

(வெங்கடேஷ் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.)

இதுகுறித்து நயனதாராவிடம் கேட்டால், வெங்கடேஷ் ஒரு ஜென்டில்மேன். தொழில் பகுதி உடையவர், தொழிலுக்கு உண்மையாக இருப்பவர். அவருடன் நடிக்கும்போது மிகவும் பாதுகாப்பாகவும், செளகரியமாகவும் நான் உணர்கிறேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இதன் மூலம் எனது சிந்தனைகளும் நன்கு ஷேப் ஆகியுள்ளன என்றார்.

ரஜினி பற்றிப் பேசினால் நயனதாரா பிரகாசமாகி விடுகிறார். ரஜினி சார் கிரேட். அவருடன் யாரையும் ஒப்பிடவே முடியாது. அவருடன் நடிப்பது என்றால் என்னைப் போன்ற நடிகைகளுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். அவருடைய அடுத்த படத்தில் சிறிய காட்சியில் தோன்ற வேண்டும் என்றால் கூட நான் தயாராக இருக்கிறேன் என்றார் நயனதாரா.

நயனதாராவுக்குப் பிடிக்காத ஒரு விஷயம் என்னவென்றால் பத்திரிகைகளுக்கு அளிக்கும் பேட்டிதானாம். பேட்டி என்றாலே அவருக்கு நடுக்கமாகி விடுகிறதாம்.

ஏன் என்று கேட்டால், எனக்கு பத்திரிக்கைகள் என்றாலே கூச்சமாக இருக்கிறது. என்னை நடிக்கச் சொன்னால் ஓய்ந்து விழும் வரை நடிக்கத் தயார். ஆனால் பேட்டி வேண்டும் என்று கேட்டால் எனக்கு பேச்சே வருவதில்லை. பதட்டமாகி விடுவேன்.

எனது படம் நன்றாக ஓட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் பிரார்த்தனை செய்வேன் என்றார் நயனதாரா.

Read more about: nayanthara

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil