5 வருஷத்துக்கு பிறகு கணவருடன் களமிறங்கிய நஸ்ரியா... சேர்ந்து நடிக்க இதுதான் காரணமாம்
Recommended Video
சென்னை: காதலர் தினத்தன்று வெளியாகிறது நஸ்ரியா நடித்துள்ள மலையாள படம் டிரான்ஸ். அன்வர் ரஷித் இயக்கி இருக்கும் இந்தப் படத்தின் ஸ்பெஷல், திருமணத்துக்கு பிறகு பகத் பாசிலும் நஸ்ரியாவும் ஜோடியாக நடித்திருப்பது.
மற்றொரு ஸ்பெஷல், சமீப காலமாக நடிப்பில் பிசியாகிவிட்ட இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இதிலும் நடித்திருப்பது. படம் பற்றி பேசினார் நஸ்ரியா!

வித்தியாசம்
திருமணத்துக்குப் பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருக்கீங்க..?
இதுக்கு முன்னால பெங்களூர் டேஸ் படத்துல நடிச்சிருந்தோம். அந்த படம் வந்து 5 வருஷம் ஆச்சு. எங்க கல்யாணம் முடிஞ்சும் அஞ்சு வருஷமாச்சு. பெங்களூர் டேஸ்-ல நடிக்கும்போது ஒண்ணா ஷூட்டிங்ல நடிச்சுட்டு, தனித்தனியா வீட்டுக்குப் போவோம். இப்ப ஒண்ணாவே ஷூட்டிங் போறோம், ஒண்ணாவே வீட்டுக்கு திரும்பறோம். அவ்வளவுதான் வித்தியாசம்.

நடிக்கக் கூப்பிடலை
ரெண்டு பேரும் இந்தப் படத்துல நடிக்க என்ன காரணம்?
எங்களை வேற எந்த படத்துலயும் சேர்ந்து நடிக்கக் கூப்பிடலைங்கறது ஒரு காரணம். நல்ல கதைகளும் கிடைக்கலை. அதோட இந்தப் படத்துல எங்க ரெண்டு பேருக்கும் கதையும் கேரக்டர் பிடிச்சிருந்தது. நாங்க சேர்ந்து நடிக்கிறதுக்கான காரணத்தை இந்த கதைக் கொடுத்தது. அதனால ஓகே சொன்னோம். மற்றபடி பெரிய காரணம் எதுவும் இல்லை.

ரசிகர்கள் ரியாக்சன்
அப்படியென்ன கேரக்டர்?
என்னன்னா... நான் இதுவரை பண்ணாத கேரக்டரை பண்ணியிருக்கேன். பகத் கேரக்டரும் புதுசா இருக்கும். இது போல ஒரு கேரக்டரை இதுக்கு முந்தைய படங்கள்ல அவர் பண்ணினதில்லை. அதனால படம் பார்த்துட்டு ரசிகர்கள் கொடுக்கிற ரியாக்சனை எதிர்பார்த்து காத்திருக்கோம். கண்டிப்பா டிரான்ஸ் எல்லோருக்கும் பிடிக்கும்னு நம்பறோம்.

சினிமாபற்றி பேசறதில்லை
படங்கள் பற்றி வீட்டுல பேசிக்குவீங்களா?
இல்லை. வீட்டுக்கு வந்தா பேசறதுக்கு மற்ற விஷயங்கள் இருக்கு. அதனால சினிமா பற்றி எப்பவும் பேசிக்கறதில்லை. பகத்துக்கும் இதுபற்றி பேசமாட்டார். அவர் எப்ப ஷூட்டிங் போறாரோ, அப்பதான் அதுபற்றி யோசிப்பார். நானும் அப்படித்தான். அதிகமாக நடிக்கலைன்னாலும் வீட்டிலயும் அவர்ட்ட அதுபற்றி பேசினா, நல்லா இருக்காது. எனக்கும் அதை கேட்கிறதுலயும் பேசறதுலயும் விருப்பம் இல்லை.

சோசியல் மீடியா
சோசியல் மீடியாவுல ரொம்ப ஆக்டிவா இருக்கீங்களே?
ரசிகர்களோட தொடர்புல இருக்க அது உதவுது. அதனால அதுல நான் ஆக்டிவா இருக்கேன். ஆனா, பகத் பாசில் அதுல அதிகமா இருக்க மாட்டார். சோசியல் மீடியாவை தனிப்பட்ட வாழ்க்கைக்கும் படங்களுக்கான புரமோஷனுக்கும் எப்படி பயன்படுத்திக்கணும்னு அவருக்குத் தெரியாது.


Click it and Unblock the Notifications











