»   »  நீபா கல்யாணத்துக்கு நோபா!

நீபா கல்யாணத்துக்கு நோபா!

Subscribe to Oneindia Tamil

பெருசு படத்தில் அறிமுகமான நீபா என்ற சண்முப்பிரியா சிறிது இடைவெளிக்குப் பின் மீண்டும் சித்தத்தைசூடாக்கி வெள்ளித் திரை ரசிகர்களை துள்ளி ஆட வைக்க வருகிறார்

முதல் படத்துக்குப் பின் காணாமல் போன நீபா சின்னத் திரைக்குப் போய்விட்டார். பந்தம் சீரியலில் கலக்கிக்கொண்டிருக்கும் நீபா, இப்போது கண்ணும் கண்ணும் படத்தில் நடித்து வருகிறார்.

நல்ல அழகுடன் படு கெட்டப்பாக இருக்கும் நீபா, சாதாரணப் பொண்ணு இல்லை. அவரோட அப்பா வாமனும்,அம்மா மாலினியும் டான்ஸ் மாஸ்டர்கள் தான். மெளன ராகம், சகலகலா வல்லவன் என நிறையப் படங்களுக்குடான்ஸ் அமைத்திருக்கிறார்கள்.

(மெளன ராகம் படத்தில் பனி விழும் நிலவு பாடலுக்கு விரக தாபத்தில் ஒரு ஜோடி ஆடுமே. அதில் நடித்தபெண் தான் மாலினி)

அதனால்தான் நீபாவுக்கும் சினிமா ஆசை பிறப்பிலேயே வந்து விட்டதாம். முதலில் பரதநாட்டியம் கற்றுக்கொண்டாராம். பிறகு சினிமாவுக்குத் தேவையான சிலுசிலு டான்ஸையும் கற்றுக் கொண்டாராம்.

டிவியில் நடித்துக் கொண்டே சினிமாவிலும் வாய்ப்பு தேடிய நீபாவுக்கு கண்ணும் கண்ணும் பட வாய்ப்புகிடைத்ததாம். சந்தோஷமாக நடித்து வரும் நீபாவுக்கு பரதத்தில் சாதனை படைக்க வேண்டும், பத்மினி, ஷோபனாஅளவுக்கு புகழ் பெற வேண்டும் என ஆசை, ஆசையாக இருக்கிறதாம்.

டிவியிலும் நடிப்பேன், சினிமாவிலும் நடிப்பேன், பரதத்திலும் அசத்துவேன் என அழகாக கூறுகிறார் நீபா. அதைவிட நீபா விடும் இன்னொரு ஸ்டேட்மெண்ட்தான் அசர அடிக்கிறது. பரதத்திற்காக தன்னையே அர்ப்பணிக்கப்போகிறாராம் நீபா. இதனால் கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன் என்றும் படு தை>யமாக கூறுகிறார்.

நீபா ஏம்பா இப்படி என்று கவலையோடு கேட்டால், ஆமாம், நடனம்தான் எனக்கு முக்கியம். கல்யாணம் ஆகிவிட்டால் என்னால் எந்த முடிவையும் சுதந்திரமாக எடுக்க முடியாது. கணவராக வருகிறவர் பரதம் பிடிக்கவில்லைஎன்று சொல்லி விட்டால் என்னாவது?

அதனால்தான் எனக்கு கல்யாணம் சரிவராது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். ஷோபனா மாதிரியே நானும்கல்யாணமே செய்து கொள்ளாமல் நடனத்திற்காக அர்ப்பணிக்கப் போகிறேன் என்கிறார் நீபா.

டெடிகேஷன்னா அது நீபாதான்!

Read more about: neeba no to marry

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil