Neelima Rani - மார்பை பற்றி யாராவது பேசினால் அதைத்தான் சொல்ல தோன்றும்.. நீலிமா ராணி கொடுத்த பதிலடி

சென்னை: நடிகை நீலிமா ராணி வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பிறகு சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து அதில் ஃபேமஸ் ஆனார். தொடர்ந்து நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் அவருக்கு இரண்டு குழந்தைகள். இந்தச் சூழலில் அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் நீலிமா ராணி சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அதனையடுத்து ஒரு சில தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவே தோன்றி நடித்துவந்தார். இப்படிப்பட்ட சூழலில் சின்னத்திரையிலும் அறிமுகமானார் நீலிமா ராணி. சின்னத்திரை அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.

Neelima Rani Interview Goes Trending on Internet


நெடுந்தொடர்கள்: தொடர்ந்து சின்னத்திரையில் பல நெடுந்தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார் நீலிமா. அப்படி அவர் நடித்த ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், அத்திப்பூக்கள், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவை. முக்கியமாக நீலிமா ராணிக்கு மெட்டி ஒலியும், கோலங்கள் நெடுந்தொடரும் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

தமிழ் திரைப்படங்களில்: ஒருபக்கம் சீரியல்களில் பிஸியாக நடித்துவந்த அவர் மறுபக்கம் திரைப்படங்களிலும் தலை காண்பிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல ஆகிய படங்களில் அவர் நடிப்பதற்கான ஓரளவு ஸ்பேஸ் கிடைத்தது. கடைசியாக அவர் ஆகஸ்ட் 16 1947 படத்தில் கௌதம் கார்த்திக்கிறகு அம்மாவாக நடித்தார். படத்தில் சிறிது நேரமே வந்தாலும் அவரது நடிப்பு கவனிக்கும்படி அமைந்தது குறிப்பிடத்தக்கது.

குடும்பம்: நிலீமா ராணி காதலித்து திருமணம் செய்துகொண்டவர். அவருக்கு மொத்தம் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கணவர் பெயர் இசைவாணன். இசைவாணன் திரைத்துறையில் இல்லாவிட்டாலும் திரைப்படம் தயாரிக்க ஆசைப்பட்டார். இதற்காக நீலிமா ராணியும், அவரும் இணைந்து ஒரு படத்தை தயாரித்தனர். ஆனால் அந்தப் படம் பாதியிலேயே நின்றது. அதன் காரணமாக கிட்டத்தட்ட நான்கு கோடி ரூபாய் கடன் ஆனது. அதை சமீபத்தில்தான் அடைத்து முடித்தோம் என ஒரு பேட்டியில்கூட நீலிமா தெரிவித்திருந்தார்.

நச் பதிலடி: இந்நிலையில் அவர் தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், “என்னுடைய மார்பகங்களை பற்றி கமெண்ட் செய்யும்போது உடனே ஒன்று சொல்ல தோன்றும். அது என்னவென்றால், நான் இன்னும் எனது குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டு இருக்கேன். பரவாயில்லை. அவனுக்கு எல்லாம் பதில் சொல்ல என்ன ஆகப்போகுது என்று நினைத்து அந்த கமெண்ட்டை டெலிட் செய்துவிட்டு சம்பந்தப்பட்ட நபரை ப்ளாக் செய்துவிடுவேன்.

டைம் எடுக்கும்: அதேபோல் என்னுடைய வெயிட் பற்றியும் நெகட்டிவ்வாக கமெண்ட்ஸ் வரும். அதையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. எனக்கே தெரியும் வெயிட் குறைவதற்கு ஒரு டைம் எடுக்கும் என்று. முக்கியமாக இப்போ ஒரு இடத்தில் இருக்கோம். இதைவிட இன்னும் நல்ல நிலைக்கு செல்ல நேரம் எடுக்கத்தான் செய்யும். நான் இரண்டு குழந்தைகளை பெற்றவள். இரண்டு முறை எனது உடலில் பெரிய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அதையெல்லாம் புரிந்ததால்தான் நான் அமைதியாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X