வீட்ல ஒத்துக்கவே இல்லை.. நீ தானே என் பொன்வசந்தம் சீரியல் ஹீரோயின் தர்ஷனா அசோகன் பேட்டி!
சென்னை: குன்னூரில் பிறந்து வளர்ந்து பல் மருத்துவம் படித்து விட்டு, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நீ தானே என் பொன்வசந்தம் சீரியலில் ஹீரோயினாக மாறியுள்ள சின்னத்திரை நடிகை தர்ஷனா அசோகனின் சூப்பரான பேட்டி இரு பாகங்களாக வெளியாகி உள்ளது.
Recommended Video
படிப்பாளியான இவர் எப்படி நடிகையானார் என்பது குறித்தும், நீ தானே என் பொன்வசந்தம் சீரியல் பற்றியும் விரிவாகவும், சுவாரஸ்யமாகவும் இந்த பேட்டியில் பேசியுள்ளார்.
நீ தானே என் பொன்வசந்தம் சீரியலில் அனுவாக தமிழ் மக்களுக்கு அறிமுகமான தர்ஷனா, தனது மொத்த இயல்பையும் இந்த பேட்டியில் அழகாக வெளிப்படுத்தி உள்ளதை கண்டு ரசியுங்கள்.

நடிக்க வாய்ப்பு
சென்னையில் பல் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் போது, இன்ஸ்டாகிராமில் சில போட்டோஷூட்களை நடத்தி போட்டோக்களை பதிவிட்டதை பார்த்து தேடி வந்த வாய்ப்புத் தான் இந்த நீ தானே என் பொன்வசந்தம் சீரியல் என்றார் சின்னத்திரை நடிகை தர்ஷனா அசோகன்.

ஒத்துக்கவே இல்லை
ஆரம்பத்தில் வீட்டில் நடிக்க ஒத்துக்கவே இல்லை என்றும், சின்ன வயசுல இருந்து டிவி, சினிமாலாம் பார்க்கக் கூடாது என கண்டிப்புடன் வளர்க்கப் பட்டேன் என்றும் இந்த பேட்டியில் ஓப்பனாக பேசி உள்ளார் தர்ஷனா.
அழகும் அமைதியும் ஒருங்கே பெற்ற தமிழ்ப் பெண்ணாக தர்ஷனா, ஒவ்வொரு வார்த்தைகளையும் அடக்கத்துடனும் ஒரு வித பதட்டத்துடனும் பேசுவதை பார்ப்பதே அலாதியான அழகு என்றே சொல்லலாம்.
சிறந்த கண்டுபிடிப்பு
100 எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியலில் நடித்ததற்காக, சமீபத்தில் நடைபெற்ற ஜீ தமிழ் விருது விழாவில் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு என்கிற விருது கொடுக்கப்பட்டது குறித்தும் தர்ஷனா அழகாக பேசினார்.
ஜீ தமிழ் சீரியலான நீ தானே என் பொன்வசந்தம் சீரியலில் ஏகப்பட்ட புது வரவுகளும் சர்ப்ரைஸ்களும் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
பல்லை பிடுங்க
பல் மருத்துவம் படித்த நீங்கள், எப்போ நோயாளிகளின் பல்லை பிடுங்க போகிறீர்கள் என நகைச்சுவையாக கேட்டதற்கு, இப்போதைக்கு சீரியல் வாய்ப்புகள் ஒரு ஃப்லோவில் போய்ட்டு இருக்கு, அதற்கான நேரம் வந்தால், பார்த்துக் கொள்ளலாம் என அப்படியே எஸ்கேப் ஆன செம க்யூட்டான இரு பாகங்களையும் கண்டு ரசியுங்கள்!


Click it and Unblock the Notifications











