மூத்த மகள் நான் சொன்னதை கேட்டா.. அக்‌ஷயா சொன்னதை நான் கேட்டேன்.. நெப்போலியன் சம்மந்தி பேட்டி!

சென்னை: நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் ஜப்பானில் நடைபெற்ற நிலையில், ஜப்பானுக்கே சென்று சரத்குமார், ராதிகா, மீனா, குஷ்பு, கார்த்தி, பாண்டியராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்தினர். அக்‌ஷயாவின் பெற்றோர்களை நெப்போலியன் எங்கேயும் காட்டவே இல்லையே என சேகுவேரா உள்ளிட்ட யூடியூப் பிரபலங்கள் கடுமையாக விமர்சித்த நிலையில், தற்போது அக்‌ஷயாவின் அம்மா மற்றும் அப்பா அளித்த பேட்டி அனைத்து கேள்விகளுக்கும் பதிலாக அமைந்துள்ளது.

நெப்போலியனின் மனைவி ஜெயசுதாவின் தந்தையும் நாங்களும் ஒரே ஊர்க்காரங்க. பல ஆண்டுகளாக நெப்போலியனின் மாமனார் எங்களிடம் நன்றாக பேசி பழகுவார். அவர் 3 ஆண்டுகளாக பேசி வந்த நிலையில் தான் அக்‌ஷயா தனுஷை திருமணம் செய்துக் கொள்ள சம்மதித்தார் என அக்‌ஷயாவின் அம்மா நெப்போலியன் மகனுக்கு தாங்கள் எப்படி பெண் கொடுத்தோம் என்கிற கதையை கூறியுள்ளார்.

nepolean son interview

மேலும், நெப்போலியன் சார் எங்களை ஒதுக்கி வைக்கவில்லை. ஏகப்பட்ட மோசமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. அங்கே வந்தவர்களுக்குத் தெரியும். அனைத்திலும், எங்களை முன்னிலைப்படுத்தி தான் நெப்போலியன் சாரும் அவரது மனைவியும் திருமணத்தை நடத்தினர் என்றார்.

இது அக்‌ஷயாவின் முடிவு: எங்களுக்கு 2 மகள்கள். மூத்த பெண்ணை என் இஷ்டப்படி உறவினருக்கே கட்டிக் கொடுத்தோம். ஆனால், அக்‌ஷயா தனுஷை திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக முடிவெடுத்தார். அவரது முடிவுக்கு தடை சொல்லாமல், நாங்கள் சம்மதித்தோம். அக்‌ஷயா தனுஷை ஹேப்பியாக வைத்திருக்கிறார். என்னோட பொண்ணு ஒருத்தரை சந்தோஷமாக வைத்திருப்பது தான் எனக்கு சந்தோஷமும் பெருமையும் என அக்‌ஷயாவின் அம்மா பேசியுள்ளார்.

நிச்சயத்துக்கு முன்பே ஐபோன் பரிசு: அக்‌ஷயாவை பெண் பார்த்த போதே தனுஷ் முதன்முதலில் ஐபோன் ஒன்றை அவருக்கு பரிசாக வழங்கினார். சிறு வயதில் இருந்தே எங்கள் மகள்களை கட்டுக்கோப்பாக வளர்த்தோம். வீட்டில் எங்களிடம் மட்டுமே டச் போன் இருக்கும். நிச்சயத்துக்கு முன்பே ஐபோன் பரிசாக கிடைத்த பின்னர் தான் அக்‌ஷயா தனுஷிடம் பேசத் தொடங்கினார் என அக்‌ஷயாவின் அம்மா கூறினார்.

மகளின் சந்தோஷம் என் சந்தோஷம்: இந்த பையனுக்கா உன் பொண்ணை கட்டிக் கொடுக்கிற என பலரும் தப்பாக பேசினர். கமெண்ட் அடித்தனர். சோஷியல் மீடியா கமெண்ட்டுகளை கூட கண்டுக் கொள்ளாமல் விட்டு விடலாம். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களே புரிந்துக் கொள்ளாமல் தப்புத் தப்பாக பேசினர். நிச்சயம் முடிந்து ஒரு மாதம் வெளியே தலைக்காட்டக் கூட முடியவில்லை. ஆனால், இதையெல்லாம் பார்த்தால் வாழ முடியாது என புரிந்துக் கொண்டோம். மகளின் சந்தோஷம் தான் எங்க சந்தோஷம் என அக்‌ஷயாவின் தந்தையும் தனுஷ் உடன் நடந்த திருமணம் பற்றி பிஹைண்ட்வுட்ஸுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

பெரிய இடம் என்கிற பந்தாவே இல்லை: நடிகர் நெப்போலியன் சார் பெரிய இடம் என்கிற பந்தாவே காட்டவில்லை. எங்களுடைய மனைவியை தங்கள் மகளாகவே பார்க்கிறார். குலதெய்வம் என சொல்கிறார். அவரும் அவர் மனைவியும் என் மகள் மீது அளவற்ற அன்புக் காட்டுகின்றனர். இதுவே எங்களுக்கு போதும் என இருவரும் கூறியுள்ளனர்.

பிசிக்கல் உறவு தான் வாழ்க்கையா?: ஆணும் பெண்ணும் பிசிக்கலாக உறவு கொண்டால் தான் வாழ்க்கையா? அதை தாண்டி அன்பால் இணைவது தானே உண்மையான இல்லற வாழ்க்கை. மாப்பிள்ளை எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பார். பெரியவர்களுக்கு அன்பும் மரியாதையும் அதிகமாகவே கொடுக்கும் நல்ல குணமுடையவர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Read more about: nepolean son பேட்டி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X