அடடே.. இது நல்லா இருக்கே.. நெப்போலியன் சம்மந்தி குறித்து இதுவரை தெரியாத விஷயம்!
சென்னை: தமிழ் சினிமாவில் இருக்கும் மூத்த நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். 80களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், வில்லன், கதாநாயகன் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி இருப்பார். இப்படி இருக்கையில் இவரது இரண்டு மகன்களில் ஒருவர் தனுஷ். தனுஷ் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். தனது மகனுக்கு இப்படி ஒரு பிரச்னை உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளவே தனது மகன் 10ஆவது வயதை எட்ட வேண்டி இருந்தது.
திமுகவில் இணைந்து மத்திய இணை அமைச்சராக இருந்த நெப்போலியன் தனது மகனுக்காக சினிமா, அரசியல் என இரண்டையும் விட்டு விட்டு மகனின் மருத்துவ தேவைகளுக்காக அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார். அப்படிப் போனவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது இந்தியாவுக்கு அவர் வந்து செல்கிறார். தனது மகனை பார்த்துக் கொள்வதற்காகவே மிகவும் கவனம் எடுத்து ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார் நெப்போலியன்.

கடந்த ஆண்டு தனது மகன் தனுஷ்க்கு ஜப்பானிலில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடத்தினார். தனது மகன் தனுஷ்க்கும் அக்ஷயா என்ற பெண்ணுக்கும் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள். குறிப்பாக, அவரது பேட்ச் மெட்ஸ் என்று சொல்லப்படுகிற நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.முதலில் நெப்போலியன் மகன் திருமணம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தி கொள்ளாத நடிகர் நெப்போலியன் மற்றும் அவரது குடும்பத்தினர், திருமண ஏற்பாடுகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினர்.
மூன்று மொழிகள்: இந்நிலையில் பிகைண்ட் வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு நெப்போலியனின் சம்மந்தி அதாவது அக்ஷயாவின் பெற்றோர் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்கள். அதாவது, அக்ஷயாவின் தாயார் தான் 9ஆம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும், தனது பள்ளிப்படிப்பை தான் மும்பையில் படித்ததால் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மூன்று மொழிகள் தனக்குத் தெரியும் என்று தெரிவித்துள்ளார். தனது சம்மந்தி நெப்போலியன் வீட்டில் அனைவரும் தன்னிடத்தில் நன்றாக பழகுவதாகவும், திருமணத்தின் போது நாங்கள் சிந்திய கண்ணீர் ஆனந்த கண்ணீர். ஒரு நல்ல குடும்பத்திற்கு எங்களது பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளோம் என்பதன் வெளிப்பாடுதான் அது.

அக்ஷயாவின் தீர்க்கமான முடிவு: இந்த திருமணம் முழுக்க முழுக்க அக்ஷயாவின் உறுதியால் நடைபெற்ற திருமணம். அக்ஷயா இந்த திருமணத்தில் மிகவும் உறுதியாக இருந்தார். அதனால்தான் இந்த திருமணம் நடைபெற்றது. நிச்சயத்தின் போது கூட எனது மகளுக்கு மருமகன் தனுஷ் ஐபோன் ஒன்றை பரிசாக கொடுத்தார்" என்று தெரிவித்தார்கள். இவர்களின் இந்த பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











