தனுஷ், அக்ஷயா திருமணம்.. தேம்பி தேம்பி அழுத அக்கா.. தேற்றமுடியாமல் தவித்த நெப்போலியன்
சென்னை: நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கும் கடந்த வாரம் ஜப்பானில் திருமணம் நடந்தது.ஜப்பானே வியந்து போகும் அளவிற்கு நடந்த இந்த திருமண வீடியோ இணையத்தில் டிரெண்டாகின்றன.சமூக வலைத்தளத்தில் இவர்களின் திருமணம் குறித்த பல விஷயங்கள் பேசுபொருளாகி உள்ள நிலையில், அக்ஷயாவின் அக்கா அளித்த பேட்டியில் தேம்பி தேம்பி அழுதுள்ளார்.
நெப்போலியன் மகன் தனுஷ் மற்றும் அக்ஷயா திருமணம் தான் தற்போது சோஷியல் மீடியாவில் பேசு பொருளாக உள்ளது. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனுஷ் இல்லற வாழ்க்கையில் எப்படி ஈடுபடுவார் என்றும், பணத்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்கி விட்டார்கள் என்றும் சிலர் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர், பெண் அக்ஷயாவிற்கே இந்த திருமணத்தில் முழு சம்மதம் இருக்கும் போது யாருக்கு என்ன பிரச்சனை என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

திருமணத்தில் சம்மதமானு கேட்டார்: இந்நிலையில் அக்ஷயாவின் சுபிக்ஷா யூடியுப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், அக்ஷயா எங்களுடைய செல்ல பெண்ணு அவள், அவள் எப்போதுமே ஒரு தைரியமான பெண், எந்த முடிவை எடுத்தாலும் அதை தைரியமாக எடுப்பாள்.அது போலத்தான் நான்கு வருஷமா நொப்போலியன் சார் வீட்டில் இருந்து பெண் கேட்டார்கள்.எங்களுக்கு தயக்கமான இருந்தது ஆனால், அக்ஷயா நல்ல ஆலோசனை செய்து நான் தனுசை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றார்.நாங்க நல்ல யோசி என்று சொன்னோம் ஆனால்,நான் தனுசை பத்தி தெரிந்து கொண்டேன் என்று சொல்லிவிட்டார். இதையடுத்து, நெப்போலியன் சாரும் உங்களுக்கு இந்த திருமணத்தில் சம்மதமாக என்று கேட்டார். நானும் என் கணவரும் அக்ஷ்யாவிற்கு ஒகே என்றால் எங்களுக்கும் சம்மதம் என்றோம்.
தேம்பி தேம்பி அழுத அக்கா: தொடர்ந்து பேசிய அவர், திருமணத்திற்கு முன், நானும் என் தங்கையும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வோம், அது இயல்பா எல்லா அக்கா, தங்கைக்கும் நடப்பது. திருமணத்திற்கு பிறகு நான் அவளை மிஸ் பண்ணென், ஆனால், என் கணவர் அம்மாவை பார்க்க வேண்டும் தங்கை பார்க்க வேண்டும் என்றால், உடனே என்னை அழைத்துவந்து வீட்டில் விட்டு விடுவார். இதனால் யாரை பிரிந்தது போல என தெரியவில்லை. ஆனால், இப்போது அக்ஷ்யா அமெரிக்காவில் வாழ போகிறாள், அவளை பிரிந்து எப்படி இருப்பேன் என்று தெரியவில்லை என அந்த பேட்டியில் தேம்பி தேம்பி அழுதார். இதையடுத்து, அங்கிருந்து ஊருக்கு கிளம்பும் போது கட்டிப்பிடித்து அழுத சுபிக்ஷாவை நெப்போலியன் தேற்றி நான் மகளை நன்றாக பார்த்துக்கொள்கிறேன் என்றர்.


Click it and Unblock the Notifications











