சுஷாந்த் சிங் மரணம்.. பாலிவுட்டில் நிலவும் நெப்போடிசம்.. மனம் திறந்து பேசிய ‘நட்டி’ நட்ராஜ்!
சென்னை: நடிகர் சுஷாந்த் சிங் மரண, அனுராக் கஷ்யப் உடன் ட்விட்டர் சண்டை உள்ளிட்ட பல விசயங்களை மனம் திறந்து பேசியுள்ளார் நடிகரும் பிரபல ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நட்ராஜ்.
Recommended Video
மன அழுத்தம் என்பது பற்றி தனக்கு தெரியாது என்றும், எப்போதுமே கலகலப்பாக இருக்க பழகி இருக்கிறேன். வேலை இருக்கும் நேரத்திலும், இல்லாத நேரத்திலும் மனதை ஒருநிலை படுத்தி வைத்தால், வீணான துயர சம்பவங்கள் நிகழாது என தத்துவார்த்மாக நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு அவர் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை, பாலிவுட்டில் நிலவி வரும் நெப்போடிசம் உள்ளிட்ட பல விசயங்கள் குறித்து விளாவரியாக இந்த வி கனெக்ட் பேட்டியில் பேசியுள்ளார்.
ஜப் வி மெட் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ள நட்டி அங்கே, ஓடும் குதிரைகளாக மட்டுமே நடிகர்கள் பார்க்கப்படுவார்கள் என்றும், கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
மேலும், தனது நண்பரும் பிரபல பாலிவுட் இயக்குநருமான அனுராக் கஷ்யப்பிடம் சமீபத்தில் ட்விட்டரில் செல்லமாக போட்டுக் கொண்ட சண்டை பற்றியும், தனது தவறை உணர்ந்து அனுராக் கஷ்யப் நட்டியிடம் கேட்ட மன்னிப்பு குறித்தும் கூறியுள்ளார்.
எந்த புராஜெக்ட் செய்தாலும், தன்னிடம் கலந்து ஆலோசித்தே அனுராக் கஷ்யாப் முடிவு செய்வார் என்ற ரகசியத்தை இந்த பேட்டியில் போட்டுடைத்துள்ளார்.
கடா மீசையுடன் பேட்ட ரஜினி போல இருக்கும் நட்டியை காண வீடியோவை க்ளிக் செய்யுங்க!


Click it and Unblock the Notifications











