பாவம் மோகன்லால் வசமா சிக்கிட்டாரு.. இதுக்கு பொட்டேட்டோ பொண்ணே தேவலாம்.. இர்பானை வறுக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகர் மற்றும் இயக்குநர் பிரித்விராஜ் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகியுள்ள படம் எம்புரான். இந்த படம் இவரது இயக்கத்தில் ஏற்கனவே வெளியான லுசிஃபர் படத்தின் இரண்டாம் பாகம். படத்தில் மோகன்லால் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது மட்டும் இல்லாமல் படத்தில் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளார்கள். படம் நாளை அதாவது மார்ச் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோஷனுக்காக படக்குழு தமிழ்நாட்டில் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்கள். இதில் இர்பான் எடுத்த பேட்டி இணையவாசிகள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து பார்க்கலாம்.

பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி செம ஹிட் அடித்த படம் லுசிஃபர். இந்த படத்தின் கதை, அரசியல் களத்தை மையமாக கொண்டு இருந்தாலும், படம் கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் காட்சிகள் உருவாக்கம், திரைக்கதை என அனைத்து அட்டகாசமாக இருந்ததால் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினர். மோகன்லாலுக்கு படத்தில் பல காட்சிகள் மாஸான காட்சிகள் வைக்கப்பட்டிருந்ததால் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர் என்று கூறலாம். இப்படி இருக்கும்போது, படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளியாக உள்ளது.

லுசிஃபர் 2 எம்புரான் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் புரோமோஷனுக்காக படக்குழு, தமிழ்நாட்டிலும் சில ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது. இதில் யூடியூபர் இர்பானுக்கு படக்குழு அளித்த பேட்டியில் இர்பான் கேட்ட கேள்விகள் மோசமாக இருந்ததாக இணையவாசிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து, ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Netizens Trolls Youtuber Irfan For Mohanlal and Prithviraj Empuraan Promotion Interview

மோகன்லால்: அதாவது, யூடியூபர் இர்பான் அவர் எடுத்த பேட்டியில் மோகன்லாலிடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறார். அதாவது, திரிஷயம் படத்தைப்போல் உங்கள் சொந்த வாழ்க்கையில் ஏதாவது சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா? என கேள்வி கேட்கிறார். இதைக் கேட்டதும், அருகில் இருந்த பிரித்விராஜ் , நிறைய பேரைக் கொன்றுள்ளார் என பதில் அளிக்கிறார். அவரது இந்த கேள்வி மோகன்லாலை ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. ஆனாலும் அதன் பின்னர், பிரித்விராஜ் நோக்கி ஒரு பார்வை பார்த்துவிட்டு, நான் இதுபோல செய்தால் என்னை போலீஸ் பிடித்துக் கொண்டு போய்விடும் என பதில் அளிக்கிறார். மேலும் இதெல்லாம் ஒரு கேள்வியா எனவும் இர்பானைப் பார்த்து கேட்கிறார் மோகன்லால்.

Netizens Trolls Youtuber Irfan For Mohanlal and Prithviraj Empuraan Promotion Interview

அவமானம்: இந்த பேட்டியை பார்த்த இணையவாசிகள், பேட்டியின் இந்த பகுதியை மட்டும் தனியே எடுத்து அதனை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள் இது மட்டும் இல்லாமல், இர்ஃபானை கடுமையாக ட்ரோல் செய்து வருகிறார்கள். இணைய வாசி ஒருவர், " சினிமாவுக்கு தேவை பப்ளிசிட்டி! மோகன்லால் எனும் நுண்ணுணர்வு கொண்ட மாபெரும் கலைஞன் கூட அந்த எழவுக்காக தான் இத்தனை அவமானங்களை சகித்து போக வேண்டியிருக்கிறது. Disgusting Interview Drama" என பதிவிட்டுள்ளார்.

Netizens Trolls Youtuber Irfan For Mohanlal and Prithviraj Empuraan Promotion Interview

ட்ரோல்: சில வாரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் தயாரித்த படமான ஸ்வீட் ஹார்ட் படத்தின் புரோமோஷனுக்காக பொடேடோ வுமனிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் யுவன் சங்கர் ராஜாவை நடத்திய விதம், அவரிடம் எழுப்பிய கேள்விகள் மிகவும் மோசமாக இருந்ததால் இணையவாசிகள் பொடேடோ வுமனை வறுத்து எடுத்து விட்டார்கள். குறிப்பாக பேட்டி எடுக்கத் தெரியாதவர்கள் இவ்வாறு பேட்டி என்ற பெயரில் திரைத்துறை ஆளுமைகளை அவமானப்படுத்தி வருகிறார்கள் என கண்டனங்களை முன் வைத்தனர். இப்போது அந்த பட்டியலில் இர்பான் புது வரவாக இணைந்துள்ளார்.

Take a Poll

பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எம்புரான். அதாவது லுசிபர் 2. ஏற்கனவே பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் தான் எம்புரான். மோகன்லால் தயாரித்து நடித்த இந்த லுசிபர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டும் இல்லாமல் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப் படமாக மாறியது. இப்படி இருக்கும்போது, எம்புரான் படத்தின் முதல் நாள் வசூல், முன்பதிவின் மூலம் ரூபாய் 50 கோடிகளைக் கடந்து விட்டதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எம்புரான் படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் நாளை அதாவது மார்ச் 27ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படி இருக்கும்போது, படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் டிக்கெட்டுக்கான முன்பதிவு தொடங்கியதில் இருந்து டிக்கெட்டுகள் மில்லியன் கணக்கில் விற்றுத் தீர்ந்துள்ளது. படத்திற்கு மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளதால் படம் வணிக ரீதியாக மலையாள சினிமாவில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மலையாள சினிமாவில் முதல் முறையாக ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாகும் முதல் படம் எம்புரான் படம் தான்.

வசூல் சாதனை: இப்படியான நிலையில் லுசிபர் 2 எம்புரான் படத்தின் முதல் நாள் வசூல் ரூபாய் 50 கோடிகளை கடந்து விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை படத்தின் டிக்கெட் முன்பதிவு அடிப்படையில் இந்த வசூல் தொகையை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மலையாள சினிமாவில் ஒரு படத்தின் முதல் நாள் வசூலில் ரூபாய் 50 கோடிகளை வசூல் செய்துள்ள படம் என்ற சாதனையை எம்புரான் படம் படைத்துள்ளது. இந்த படம் நாளை வெளியாக உள்ளதால், நாளைய நாள் முடியும்போது முதல் நாளின் மொத்த வசூல் என்பது தற்போது படக்குழு தரப்பில் இருந்து தெரிவித்துள்ளதை விட கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

படத்திற்கு தமிழ்நாட்டிலும் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால், படத்தின் மொத்த வசூலில் தமிழ்நாட்டின் வசூலும் முக்கிய அங்கம் வகிக்கும் எனலாம். ஏற்கனவே மலையாள சினிமாக்களுக்கு தமிழ் நாட்டில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், இந்த படத்தின் மொத்த வசூலில் தமிழ்நாடு கணிசமான அங்கம் வகிக்கும் என படக்குழு எதிர்பார்க்கிறது. மேலும் இந்த படம் மோகன்லால் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என கூறப்படுகிறது. காரணம், படத்தின் டிரைலரில் மோகன்லாலுக்கு மாஸான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், படத்தில் மாஸான காட்சிகள் அதிகம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X