பெற்றோரிடம் இதுவரை செக்ஸ் பற்றி பேசியது இல்லை, ஆனால்...: லேடி ரஜினி
மும்பை: செக்ஸ் பற்றி பெற்றோருடன் இதுவரை பேசியது இல்லை என்று பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் தபாங் 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. அவர் நடித்துள்ள காந்தானி ஷஃபாகானா படம் நாளை ரிலீஸாக உள்ளது.
அந்த படத்தில் கருத்தரிப்பு மையத்தை நடத்தும் பெண்ணாக நடித்துள்ளார் சோனாக்ஷி. இந்நிலையில் அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

செக்ஸ் கல்வி
பள்ளிகளில் செக்ஸ் கல்வி கட்டாய பாடமாக்கப்பட வேண்டும். நாமே கண்டுபிடித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலை இருப்பதாலேயே சில சமயம் பிள்ளைகள் வழி தவறி சென்றுவிடுகிறார்கள். சரியான நேரத்தில் இளம் பிள்ளைகளுக்கு செக்ஸ் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் பாதுகாப்பான முறையில் உறவு கொள்வார்கள்.

தயக்கம்
நான் என் பெற்றோரிடம் செக்ஸ் பற்றி இதுவரை பேசியது இல்லை. நான் மட்டும் அல்ல இந்தியாவில் உள்ள பலர் தங்களின் பெற்றோரிடம் செக்ஸ் பற்றி பேசியது இல்லை. ஏனென்றால் அது பற்றி பெற்றோரிடம் எப்படி பேசுவது என்ற தயக்கம் உள்ளது. அதனால் வெளியாட்களிடம் விபரம் கேட்கிறார்கள். ஆனால் செக்ஸ் பற்றிய விபரங்களை வெளியாட்கள் அல்ல வீட்டில் உள்ளவர்கள் தான் கற்றுத் தர வேண்டும்.

எதிர்பார்ப்பு
நான் நடித்துள்ள காந்தானி ஷஃபாகானா படத்தை என் பெற்றோர் பார்த்த பிறகு அவர்கள் என்னிடம் செக்ஸ் குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். என்ன சில ஆண்டுகள் லேட்டாகிவிட்டது, பரவாயில்லை என்று தெரிவித்துள்ளார் சோனாக்ஷி சின்ஹா. கருத்தரிப்பு மையம் நடத்தி செக்ஸ் பற்றி பேசும் பெண்ணாக நடிப்பது எளிது இல்லை, இருப்பினும் நடித்துள்ளார் சோனா.

விக்கி டோனார்
முன்னதாக ஆயுஷ்மான் குரானா நடிப்பில் விக்கி டோனார் என்ற பெயரில் வெளியான இந்தி படம் சூப்பர் ஹிட்டானது. ஹீரோவான ஆயுஷ்மான் குரானா கருத்தரிப்பு மையத்திற்கு சென்று விந்தணு தானம் செய்து சம்பாதிப்பார். இந்நிலையில் சோனாக்ஷி கருத்தரிப்பு மையத்தை நடத்துவது போன்று நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











