தாய்மொழி தெலுங்கு தான்.. தமிழில் நடிப்பதையே விரும்புகிறேன்.. புதுமுகம் சந்திரிகா!

சென்னை: ''நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை. படிச்சது ஃபேஷன் டிசைனிங். சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வம் சிறுவயதிலேயே இருந்தது. நான் வசிக்கும் பகுதியில் ஏராளமான சினிமாக்காரர்கள் இருந்தார்கள்.

அவர்களுடன் சில சினிமா நிகழ்ச்சிகளுக்கு செல்வேன். அப்படித்தான் எனக்குள் சினிமா ஆசை வந்தது. நான் வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் கொஞ்சம் செல்லம் அதிகம். என்னுடைய அம்மா டீன் ஏஜ்ஜாக இருந்தபோது அவருக்கு சினிமா வாய்ப்பு வந்ததாம்.

சினிமா

சினிமா

ஆனால் அப்போது அவருக்கு அரசு வேலை கிடைத்த காரணத்தால் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையாம். இப்போது நான் சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்ததும் வீட்டிலிருந்துதான் எனக்கு முதல் சப்போர்ட் கிடைத்தது.

விடாமுயற்சி இருந்தால்

விடாமுயற்சி இருந்தால்

சினிமாவில் இப்போது போட்டி அதிகம் என்றாலும் இந்தச் சூழ்நிலையில் நடித்து பெயர் வாங்கும் போதுதான் ஜெயிக்க வேண்டும் என்ற வெறித்தனம் உண்டாகும். விடாமுயற்சி இருந்தால் சினிமாவில் ஜெயிக்க முடியும் என்று நம்புகிறேன். சினிமாவில் அதிர்ஷ்டம் தாண்டி திறமை, உழைப்பு முக்கியம். ‘இன்புட்' என்ன கொடுக்கிறோமோ அதுதான் ‘அவுட்புட்'டாக வரும். எனது தாய் மொழி தெலுங்குதான் இருந்தாலும் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதையே நான் மிகவும் விரும்புகிறேன்.

முன் உதாரணமாக

முன் உதாரணமாக

தற்போது சினிமாவில் வுமன் சென்ட்ரிக் கதைகள் வர ஆரம்பித்துள்ளது. அதுபோன்ற கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.சினிமாவில் எனக்கு ஜோதிகா, நயன்தாரா மேடம் இருவரையும் பிடிக்கும். இருவரும் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்தக் கேரக்டராக மாறி என்னைப் போன்ற வளரும் நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறார்கள்.

ரசிகர்களை மகிழ்வித்து

ரசிகர்களை மகிழ்வித்து

நடிகர்களில் விஜய்சேதுபதியைப் பிடிக்கும்'' என்று சொல்லும் சந்திரிகா இந்த கொரோனா காலத்திலும் ஜூம் ஆப் மூலம் கதை கேட்டு இரண்டு படங்களை ஓ.கே.செய்துள்ளாராம். பல விதமான போட்டோ ஷூட்ஸ் அவ்வப்போது நடத்தி தன் ரசிகர்களை மகிழவைப்பது உண்டு . சந்திரிகா பல விதமான ஆசைகளுடன் சினிமா கனவுகளுடன் பல முயற்சிகள் செய்து வருகிறார். தமிழ் சினிமா இயக்குனர்கள் இவரை எப்படி பயன் படுத்த போகிறார்கள் என்பதை இந்த லாக் டவுன் முடிந்தவுடன் தான் தீர்மானமாக தெரிய வரும் . பொறுத்து இருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X