சிம்புவுடன் திருமண வதந்தி.. சட்டென பதிலடி கொடுத்த நிதி அகர்வால்.. கன்னடத்தில் நடிக்காதது ஏன்?
சென்னை: பவன் கல்யாணின் ஹரி ஹர வீரமல்லு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நிதி அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திருமண வதந்தி குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். மேலும், மற்ற இளம் நடிகைகள் போல வருடத்துக்கு பல படங்கள் சைன் செய்து நடிக்கும் பிரஷர் தனக்கு இல்லை என்றும் அதை தான் விரும்புவதில்லை என்றும் கூறியுள்ளார்.
31 வயதாகும் நிதி அகர்வால் இதுவரை ஒட்டுமொத்தமாகவே 10 படங்களில் மட்டுமே ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகியும் ஏன் இவ்வளவு குறைவான படங்களில் நடித்துள்ளீர்கள் என்கிற கேள்விக்கும் அழகாக பதில் அளித்துள்ளார்.

பவன் கல்யாண், பிரபாஸ் படங்கள் அடுத்தடுத்து நிதி அகர்வால் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் நிலையில், அவருடைய மார்க்கெட் தற்போது ஜெட் வேகத்தில் உச்சத்துக்கு சென்றுள்ளது என்கின்றனர்.
நடிகையாக வேண்டும் என்று நினைத்தே வந்தேன்: பல நடிகைகள் சினிமாவுக்குத் தான் வந்ததே ஒரு விபத்து போன்ற நிகழ்வுதான் எனக் கூறுவார்கள். ஆனால், நடிகை நிதி அகர்வால் தான் ஒரு ஹீரோயின் ஆக வேண்டும் என்றே நடனத்தை எல்லாம் முறைப்படி கற்றுக் கொண்டு தொடர்ந்து சினிமாவுக்காக போராடி ஆடிஷன் எல்லாம் அட்டெண்ட் செய்து நடிகையாக மாறினேன் எனக் கூறியுள்ளார்.
மும்பையில் லட்சக் கணக்கானோர்: மும்பையில் தினமும் லட்சக் கணக்கானோர் சினிமாவில் எப்படியாவது ஒரு சின்ன வேடத்திலாவது நடித்து விட வேண்டும் என்கிற ஆசையுடன் ஆடிஷனில் பங்கேற்று வருகின்றனர். அப்படியொரு பெரிய போராட்ட கூட்டத்தில் போராடிய எனக்கு இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன் என்றும் கூறியுள்ளார். 2017ம் ஆண்டு வெளியான முன்னா மைக்கேல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்துக்காக பல டான்ஸ் ஆடிஷனில் பங்கேற்று தான் ஹீரோயினாக தேர்வானார் என்றார்.
விளம்பரங்களில் வாய்ப்புக் கிடைக்கவில்லை: பொதுவாக சினிமாவில் சான்ஸ் கிடைப்பதற்கு முன்பாக இளம் பெண்கள் மாடலிங்கில் ஈடுபட்டு விளம்பரங்களில் நடித்து வருவார்கள். அதை பார்த்துத் தான் அவர்களுக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கும். விளம்பரப் படங்களில் நடிக்க ஆடிஷனுக்கு சென்ற போதெல்லாம் தனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என்றும் முன்னா மைக்கேல் எனும் பாலிவுட் படத்தில் அதற்கு பதிலாக வாய்ப்புக் கிடைத்தது. ஏன் என்னை விளம்பர படங்களில் ரிஜெக்ட் செய்தார்கள் என்று கூட தெரியவில்லை என்றார்.
திருமண வதந்தி: நடிகர் ஜெயம் ரவியுடன் தமிழில் பூமி படத்தில் நடிக்க கமிட்டான சில நாட்களிலேயே சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த 2 படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. சினிமாவில் நடிகைகளாக வந்துவிட்டால் அவர்களை பற்றிய ஏகப்பட்ட வதந்திகள், குறிப்பாக திருமண வதந்திகள் வருவதெல்லாம் சகஜமான ஒன்று தான். மக்களுக்கும் அதன் மீது அதிக ஆர்வம் இருப்பதால் தான் அவையெல்லாம் பரவுகின்றன. ஆனால், அதையெல்லாம் நான் பொருட்படுத்த மாட்டேன் எனக் கூறியுள்ளார். நடிகர் சிம்புவை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் நிதி அகர்வால் என்கிற வதந்தி ஈஸ்வரன் படம் சமயத்தில் உலா வந்தது.
அதிக படங்களில் சைன் பண்ண மாட்டேன்: ஒரே வருடத்தில் 6 படங்களில் சைன் போட்டு நடித்து விட்டு, அதன் பின்னர் காணாமல் போக நான் நினைக்கவில்லை. பொறுமையாக காத்திருந்து நல்ல படங்களயும் பெரிய நடிகர்கள் படங்களிலும் நடித்து வருகிறேன். பவன் கல்யாண் உடன் ஹரி ஹர வீரமல்லு படம் வெளியாகிறது. அடுத்ததாக பிரபாஸ் உடன் ரொமாண்டிக் ஹாரர் படமான ராஜாசாப் படத்தில் நடித்து வருகிறேன். பொறுமையாக இருந்தால் தான் இதெல்லாம் கிடைக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











