For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நிலா முகம் சிவந்தால்... தலைப்பைப் பார்த்தவுடன் டமால் ஆகிப் போய் விடாதீர்கள். நிலாவின் பெஸ்ட் ஃபிரண்டைப் பத்திய செய்திதான் இது. தொடர்ந்துபோங்கோ...விர்ரென ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலா, இப்போது அமாவாசை இருட்டுப் போல சுருண்டு போய் விட்டார்.எல்லாம் ஜாம்பவான் புண்ணியம்தான். படப்பிலிருந்து பாதியிலேயே ஜகா வாங்கி, ஹோட்டல் பின்பக்கம் வழியாக வெளியேறிகாரிலேயே மதுரைக்குப் பறந்து அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் ஓடிப் போன நிலா,ஜாம்பவான் தயாரிப்பாளர்கள் மீது கற்பழிப்பு மிரட்டல் உள்பட சரமாரியாக உல்டா புல்டா புகார் பட்டியலை வாசித்தார்.மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழ்நாட்டுக்கே வர மாட்டேன் என்று சவால் விடுத்தார்.ஆனால், விசாரித்துப் பார்த்ததில் அதிக துட்டுக்கு ஆசைப்பட்டு தமிழ் சினிமா சூட்டிங்கில் இருந்து எஸ்கேப் ஆகி தெலுங்குபடத்தில் நடிக்கப் போனார் நிலா என்பது தெரியவந்தது. இதையடுத்து ஒழுங்கு மரியாதையாக ஜாம்பவான் படத்தில் நடித்துக்கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் ஆந்திராவிலும் தயாரிப்பாளர்களுடன் பேசி, இரு மாநிலங்களிலும் நடிக்க விடாமல்செய்துவிடுவோம் என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நிபந்தனை போட்டுள்ளனர்.அந்தப் பிரச்சினை அப்படியே இருக்கிறது. ஆனாலும் நிலா உற்சாகமாகத்தான் வலம் வருகிறார். தெலுங்குப் படத்தில்(இப்போதைக்கு) பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலாவிடம் இப்போதெல்லாம் அவரது பெஸ்ட் ஃபிரண்ட் குறித்துக்கேட்டால் பொசுக்கென்று கோபம் வந்து விடுகிறது.எஸ்.ஜே.சூர்யாவும், நீங்களும் காதலு... என்று லேசாக இழுத்தால் கூடப் போதும், கடுப்பாகி விடுகிறார் இந்த குட்டையழகி.ஜி.. எஸ்.ஜே.சூர்யா எனக்கு குரு. சினிமாவுக்கு நான் நடிக்க வந்தபோது, அதில் ஏபிசிடி கூட தெரியாது. எல்லாத்தையும்சூர்யாஜிதான் கற்றுக் கொடுத்தார். எப்படி நடிக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என எல்லாவற்றையும் சின்னப் புள்ளைக்குசொல்லித் தருவது போல சொல்லிக் கொடுத்தார். (எப்படி பிகேவ் பண்ணணும்னு சொல்லித் தரலையா?)அவர் போட்டுக் கொடுத்த பாதையில்தான் நான் ஹாயாக போய்க் கொண்டிருக்கிறேன். குரு ஸ்தானத்தில் வைத்திருக்கும்அவரைப் போய் தப்பாக இணைத்துப் பேசுகிறீர்களே என்று ஏகத்துக்கும் எகிறுகிறார்.சரி, அப்படின்னா சூர்யாஜியும் நீங்களும்... என்று மீண்டும் இழுத்தால் (விட மாட்டோம்ல), அதெல்லாம் உங்க கட்டுக் கதை.என்ன வேண்டுமானாலும் எழுதிக்கோங்கோ. நானோ இல்லை சூர்யாஜியோ அதைப் பத்தி கவலையேப் படப் போவதில்லை.அவர் எனக்கு குரு, நல்ல ஃபிரண்ட், அம்புட்டுத்தான் என்று மூக்கு சிவசிவக்க, முகம் படபடக்க கூறிப் போனார் நிலா.நிலாவுக்கு இம்புட்டு கோவம் வந்தாலும், சென்னையில் அவர் தங்குவது என்னவோ இன்னும் சூர்யாஜியின் ஆஃபிசில் தான்.ஜாம்பவான் படத்தில் இருந்து பாதியில் வெட்டிக் கொண்ட நிலாவால் படப்பிடிப்பு கொஞ்சம் நின்றது. இப்போது அவர் இல்லாதகாட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்னொரு ஹீரோயினாக நடிக்கும் மேக்னா நாயுடு, பிரசாந்த் ஆகியோரின் சீன்கள்எடுக்கப்படுகின்றன.நிலா கைவிட்டுவிடுவாரோ என அஞ்சும் தயாரிப்புத் தரப்பு மேக்னாவிடம் பேசி அவரது மேக்னானிமிட்டியால் கவர்ச்சியைவெளியே எடுத்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது.

  By Staff
  |

  தலைப்பைப் பார்த்தவுடன் டமால் ஆகிப் போய் விடாதீர்கள். நிலாவின் பெஸ்ட் ஃபிரண்டைப் பத்திய செய்திதான் இது. தொடர்ந்துபோங்கோ...

  விர்ரென ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலா, இப்போது அமாவாசை இருட்டுப் போல சுருண்டு போய் விட்டார்.எல்லாம் ஜாம்பவான் புண்ணியம்தான். படப்பிலிருந்து பாதியிலேயே ஜகா வாங்கி, ஹோட்டல் பின்பக்கம் வழியாக வெளியேறிகாரிலேயே மதுரைக்குப் பறந்து அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் ஓடிப் போன நிலா,

  ஜாம்பவான் தயாரிப்பாளர்கள் மீது கற்பழிப்பு மிரட்டல் உள்பட சரமாரியாக உல்டா புல்டா புகார் பட்டியலை வாசித்தார்.மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழ்நாட்டுக்கே வர மாட்டேன் என்று சவால் விடுத்தார்.


  ஆனால், விசாரித்துப் பார்த்ததில் அதிக துட்டுக்கு ஆசைப்பட்டு தமிழ் சினிமா சூட்டிங்கில் இருந்து எஸ்கேப் ஆகி தெலுங்குபடத்தில் நடிக்கப் போனார் நிலா என்பது தெரியவந்தது. இதையடுத்து ஒழுங்கு மரியாதையாக ஜாம்பவான் படத்தில் நடித்துக்கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் ஆந்திராவிலும் தயாரிப்பாளர்களுடன் பேசி, இரு மாநிலங்களிலும் நடிக்க விடாமல்செய்துவிடுவோம் என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நிபந்தனை போட்டுள்ளனர்.

  அந்தப் பிரச்சினை அப்படியே இருக்கிறது. ஆனாலும் நிலா உற்சாகமாகத்தான் வலம் வருகிறார். தெலுங்குப் படத்தில்(இப்போதைக்கு) பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலாவிடம் இப்போதெல்லாம் அவரது பெஸ்ட் ஃபிரண்ட் குறித்துக்கேட்டால் பொசுக்கென்று கோபம் வந்து விடுகிறது.

  எஸ்.ஜே.சூர்யாவும், நீங்களும் காதலு... என்று லேசாக இழுத்தால் கூடப் போதும், கடுப்பாகி விடுகிறார் இந்த குட்டையழகி.


  ஜி.. எஸ்.ஜே.சூர்யா எனக்கு குரு. சினிமாவுக்கு நான் நடிக்க வந்தபோது, அதில் ஏபிசிடி கூட தெரியாது. எல்லாத்தையும்சூர்யாஜிதான் கற்றுக் கொடுத்தார். எப்படி நடிக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என எல்லாவற்றையும் சின்னப் புள்ளைக்குசொல்லித் தருவது போல சொல்லிக் கொடுத்தார். (எப்படி பிகேவ் பண்ணணும்னு சொல்லித் தரலையா?)

  அவர் போட்டுக் கொடுத்த பாதையில்தான் நான் ஹாயாக போய்க் கொண்டிருக்கிறேன். குரு ஸ்தானத்தில் வைத்திருக்கும்அவரைப் போய் தப்பாக இணைத்துப் பேசுகிறீர்களே என்று ஏகத்துக்கும் எகிறுகிறார்.

  சரி, அப்படின்னா சூர்யாஜியும் நீங்களும்... என்று மீண்டும் இழுத்தால் (விட மாட்டோம்ல), அதெல்லாம் உங்க கட்டுக் கதை.என்ன வேண்டுமானாலும் எழுதிக்கோங்கோ. நானோ இல்லை சூர்யாஜியோ அதைப் பத்தி கவலையேப் படப் போவதில்லை.அவர் எனக்கு குரு, நல்ல ஃபிரண்ட், அம்புட்டுத்தான் என்று மூக்கு சிவசிவக்க, முகம் படபடக்க கூறிப் போனார் நிலா.


  நிலாவுக்கு இம்புட்டு கோவம் வந்தாலும், சென்னையில் அவர் தங்குவது என்னவோ இன்னும் சூர்யாஜியின் ஆஃபிசில் தான்.

  ஜாம்பவான் படத்தில் இருந்து பாதியில் வெட்டிக் கொண்ட நிலாவால் படப்பிடிப்பு கொஞ்சம் நின்றது. இப்போது அவர் இல்லாதகாட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்னொரு ஹீரோயினாக நடிக்கும் மேக்னா நாயுடு, பிரசாந்த் ஆகியோரின் சீன்கள்எடுக்கப்படுகின்றன.

  நிலா கைவிட்டுவிடுவாரோ என அஞ்சும் தயாரிப்புத் தரப்பு மேக்னாவிடம் பேசி அவரது மேக்னானிமிட்டியால் கவர்ச்சியைவெளியே எடுத்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது.


  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X