For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நிலாவுக்கு சேலை கட்டி... இது ஏதோ ஹைகூ கவிதையின் முதல் வரி என்று நினைத்துவிடாதீர்கள். இது நம்ம அ.. ஆ.. படத்தின் ஹீரோயினி(கோடம்பாக்கத்து பாஷையில்) நிலா பற்றிய விஷயம்.நாயகி நிலா (கொஞ்சம் ஜொள்ள தொடச்சுக்கறேளா!

  By Staff
  |

  இது ஏதோ ஹைகூ கவிதையின் முதல் வரி என்று நினைத்துவிடாதீர்கள். இது நம்ம அ.. ஆ.. படத்தின் ஹீரோயினி(கோடம்பாக்கத்து பாஷையில்) நிலா பற்றிய விஷயம்.

  நாயகி நிலா (கொஞ்சம் ஜொள்ள தொடச்சுக்கறேளா!) அந்தப் படத்தில் படு சூப்பராக கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருப்பதுபழைய சேதி. புச்சு என்ன தெரியுமா? அச்சு அசல் தமிழ்ப் பெண்ணாக சில காட்சிகளில் முழு நீள சேலையில்கலக்கியிருக்கிறாராம். இதை அவரே சொன்னார்.

  பொம்பளைஸ் சேலை கட்டுவதில் ஆச்சரியம் இல்லைதான், ஆனால் சேலைக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத நிலா, அதுவும்அழகாக சேலை கட்டி நடித்திருப்பது சர்ப்ரைஸ் விஷயம்தானே!. நிலாவுக்கு சேலை கட்டும் வேலையை எந்த காஸ்ட்யூமரும்செய்யவில்லை, சாட்சாத் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யாவே தான் அந்த வேலையை பொறுப்பாக கவனித்துக் கொண்டார்.

  ஏங்க, டைரக்டர் சேலை கட்டி விட்டாராமே என்று ஒன்னுமே தெரியாத மாதிரி நிலாவிடம் கேட்டோம்.


  மெல்லிய வெட்கப் புன்னகையுடன் (எதற்கோ!) ஆமாங்கோ என்று கொஞ்சு தமிழில் ஆமோதித்தவர், அதான் படமெல்லாம்வந்துச்சே அப்புறம் என்ன என்று எதிர் கேள்வி போட்டார் நிலா.

  மேலே சொல்லுங்கோ என்று நிலாவை ஊக்குவித்து மேட்டரைக் கறந்தபோது அவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

  அப்படியே இந்தி, தமிழ், ஆங்கிலம் என லிங்குஸ்டிக் மசாலா மிக்ஸ் செய்து நிலா சொன்னது,

  ஆக்சுவலா எனக்கு மாடர்ன் டிரஸ்தான் ரொம்பப் பொருத்தம். வட இந்தியாவிலும் சேலை அவ்வளவாகப் பிரபலம் கிடையாது.எங்க வீட்ல யாரும் சேலை கட்றது இல்லை. எனவே சேலையை நான் முழுசாகப் பார்த்ததே சென்னையில்தான்.


  படத்தில் எனக்கு மிகவும் நீளமான காஸ்ட்யூமே சேலைதான். பெரும்பாலான காட்சிகளில் நான் சிக் உடையில்தான் வருவேன்.மாடர்ன் டிரஸ் போடுவதில் பிரச்சினை வரவில்லை. ஆனால் இந்த சேலைதான் என்னை போட்டு வாங்கி விட்டது.

  நல்ல வேளையாக சூர்யா சார்தான் எனக்கு ஹெல்ப்பாக இருந்தார் (அடடே..). எட்டு முழ சேலை கட்டுவது எப்படி என்பதைநல்லாவே சொல்லிக் கொடுத்தார். அத்தோடு நிற்கவில்லை. அழகாக கட்டியும் விட்டார் (அடோடா..). கொசுவத்தை லாவகமாகமடித்து மடித்து அவர் எனக்கு கட்டி விட்டபோது, கொஞ்சம் கூச்சமாகத் தான் இருந்தது.

  நான் பட்ட கூச்சத்தையும், வெட்கத்தையும் பார்த்த சூர்யா சார், இப்பதான் தமிழ் பொண்ணு மாதிரி இருக்கே, இதுதான் தமிழ்உணர்வு என்று வாயை விட்டுப் பாராட்டினார் (அய்யோடா...).


  சேலை கட்டினால் அது தனி அழகுதான். எனது கிளாமர் கூடிப் போய் விட்டது. இருந்தாலும், இவ்வளவு பெரிய சேலையைஎப்படித்தான் தமிழ்நாட்டுப் பெண்கள் டெய்லி கட்டிக்கிட்டு பல வேலைகளையும் பாக்கிறாங்களோ? ஆச்சரியமா இருக்கு(சேலையையே ஆச்சரியமாக பார்க்கும் பொண்ணு தமிழ்ப் படத்தின் நாயகி. சூப்பர்பா..)

  சேலை மீது காதல் வந்து இப்போ சில சேலைகளை வாங்கி வைத்துள்ளேன். ப்ரீயா இருக்கும்போது கட்டிப் பழகனும்(முடியலேன்னா சூர்யா வருவார், டோண்ட் ஒர்ரி!)

  இப்படிப் போனது நிநலாவின் சேலை புராணம். நியூ படத்தில் இருந்ததை விட கொஞ்சம் தூக்கலாகவே கிளாமர் இருக்கிறதாம்அ..ஆ படத்தில். இப்போது நியூவுக்கு வந்த கதியைப் பார்த்து பீதியடைந்துள்ள சூர்யா, எங்கே இந்தப் படத்திற்கும் அடிவிழுமோ என்ற பயத்தில் கிளாமரைக் குறைக்கும் வேலையில் தீவிரமாகியுள்ளாராம்.

  பாரதிராஜா, ராமதாஸ் பராக் பராக்...


  Read more about: nila and saree
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X