twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேய் படத்துல இருந்து எஸ்கேப் ஆகிட்டேன்.. நிசப்தம் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பேட்டி!

    |

    சென்னை: இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஓவியா நடிப்பில் வெளியான மெரினா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன்.

    2012ம் ஆண்டு வெளியான அந்த படத்திற்கு இசையமைத்த "வணக்கம் வாழ வைக்கும் சென்னை" பாடலுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் புரொமோஷன் செய்து இருந்ததை இன்னமும் மறக்க முடியாது.

    Nishabdham music director Girishh Gopalakrishnan interview!

    தற்போது நிசப்தம் படத்திற்கு இசையமைத்துள்ள கிரிஷ் தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி இரு பாகங்களாக வெளியாகி வைரலாகி வருகின்றன.

    மெரினா, விடியுமுன், சதுரம் 2, கல்கி, அவள், இருட்டு, நிசப்தம் உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

    கோபி சுந்தர் ஏற்கனவே அந்த படத்திற்கு இசையமைத்து முடித்த நிலையில், சில பிரத்யேக கலவைகளை சேர்க்க நிசப்தம் படத்தின் இயக்குநர் ஹேமந்த் மதுக்கர் இவரை அணுகியதாகவும், பத்து நாட்களில் எப்படி முடிக்கப் போகிறோம் என பயந்ததாகவும், இசை நன்றாக வரவேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் நிசப்தம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்ததாகவும் கூறியுள்ளார்.

    அதன் பின்னர் கொரோனா லாக்டவுன் வந்து ஏகப்பட்ட மாதங்கள் தள்ளி வைக்கப்பட்ட வரும் அக்டோபர் 2ம் தேதி அனுஷ்கா, மாதவன், அஞ்சலி நடித்த நிசப்தம் படம் ரிலீசாக உள்ளது.

    சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான அவள் மற்றும் சுந்தர்.சியின் இருட்டு படங்களுக்கு இசையமைத்த இவர், தற்போது பேய் படங்களில் இருந்து தப்பித்து உள்ளேன் எனக் கூறியுள்ளார்.

    அடுத்ததாக நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் மற்றும் நெற்றிக்கண் படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Nishabdham music composer Girishh Gopalakrishnan interview goes viral. He spoke lot about his upcoming movie Nishabdham and also his debut movie Marina.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X