twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லாக்டவுன சமாளிக்க முடியல.. முதல்ல நிறைய பேர் கொடுத்தாங்க.. இப்போ யாருமே கண்டுகல.. வையாபுரி வருத்தம்

    |

    சென்னை: கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நிலையில், பல நடிகர்களும் ஆரம்பத்தில் அரிசி, பருப்புன்னு உதவி செஞ்சாங்க, இப்போ யாரும் கண்டுகல என நடிகர் வையாபுரி வருத்தத்துடன் பேட்டி கொடுத்துள்ளார்.

    தியேட்டர்களில் 100 நாட்கள் படம் ஓடிய நிலை மாறி, தற்போது, 100 நாட்களாக தியேட்டர்களே திறக்கப்படாத நிலை வந்திருப்பதாக பரவும் வாட்ஸப் மெசேஜில் எவ்வளவு வலி இருக்கிறது என்பதை உணர்த்தி இருக்கிறார் நடிகர் வையாபுரி.

    No celebrities not ready to help nowadays – Actor Vaiyapuri interview

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல முன்னணி நடிகர்களும் ஆரம்பத்தில், நடிகர்களுக்கு அரிசி மூட்டைகளும், மளிகை சாமான்களையும் கொடுத்து வந்தனர். ஆனால், தொடரும் லாக்டவுனால், தற்போது யாரும், தன்னை போன்ற கடைநிலை கலைஞர்களை கவனிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் என தனது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.

    கொரோனா பரவல் காரணமாக எல்லோரும் தற்போது மாஸ்க் போட்டு வரும் நிலையில், ஆரம்ப காலத்தில் இருந்தே, தலையில் தொப்பியும் முகத்தில் மாஸ்க்கும் அணிந்து காற்று மாசு மற்றும் கிருமிகள் அண்டாமல் ஆரோக்கியமாக பார்த்துக் கொண்ட நடிகர் வையாபுரி, கொரோனா கால லாக்டவுனில் சினிமாவை தவிர்த்து வேறு வேலையோ தொழிலோ இல்லாத தன்னை போல இருக்கும் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளதை நமது ஒன் இந்தியாவின் தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

    முன்னணி நடிகரின் திரைப்படங்கள்... நேரடியாக ஓடிடியில்..புது அப்டேட் !முன்னணி நடிகரின் திரைப்படங்கள்... நேரடியாக ஓடிடியில்..புது அப்டேட் !

    உங்கள் பிரச்சனைகளை தீர்க்க தற்போது, எதை திறந்தால் நல்லா இருக்கும் என்ற கேள்விக்கு, சினிமா தொழிலை என்று கூட சொல்லாமல், கோயில்களை திறந்தால் போதும், கடவுள் நம்மை நிச்சயம் காப்பார். பெரிய கோயில்களுக்கு பதிலாக வீதிகளில் இருக்கும் சிறு கோயில்களை திறந்து யாகங்கள் நடத்தினால், கிருமிகள் ஒழியும் எனக் கூறியுள்ள அவரது முழு பேட்டியை காண வீடியோ லிங்கை க்ளிக் செய்யுங்க!

    English summary
    Comedy actor Vaiyapuri talks about daily wages cinema people suffered lot nowadays. In the beginning more celebrites, give freebies like Rice bags and vegetables to the cinema workers. But, now they stopped the freebies after so many lockdown continued.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X