கிளாமரே செட்டாகாது.. அடல்ட் படத்துக்கெல்லாம் சான்ஸே இல்லை.. நடிகை வெண்பாவின் க்யூட் சாட்!
சென்னை: கற்றது தமிழ், சிவகாசி, கஜினி, சத்யம் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள வெண்பா, தற்போது நாயகியாக வலம் வருகிறார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் தந்தை, மகள் பாசத்தை வெளிக்காட்டும் விதமாக வெளியான மாயநதி படத்தில் பள்ளி மாணவியாகவும் நாயகியாகவும் நடித்திருந்த வெண்பா, நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டின் வி கனெக்ட் ஷோவில் செய்துள்ள வீடியோ சாட் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ராம் இயக்கத்தில் ஜீவா, அஞ்சலி நடிப்பில் வெளியான கற்றது தமிழ் படத்தில், "நெசமாத்தான் சொல்றியா" என ஒவ்வொரு முறையும் கேட்கும் குட்டி அஞ்சலியாக நடித்திருப்பார் வெண்பா.
காதல் கசக்குதய்யா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரத்தில் இருந்து ஹீரோயினாக அப்கிரேட் ஆன இவர், இந்த லாக்டவுனில் அவரது சமூக வலைதள பக்கங்களில், சேலை, பாவாடை தாவணி என அம்சமாக உடை அணிந்த புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
மற்ற நடிகைகளை போல, வொர்க்கவுட் வீடியோக்களையும் கிளாமர் புகைப்படங்களையும் பதிவிடும் எண்ணம் இல்லையா என்ற கேள்விக்கு, எப்போதுமே தனித்துவமாக இருக்கவே தனக்கு பிடிக்கும் என்றும், நமக்கு எது செட் ஆகுமோ? அதையே செய்யலாமே என்றும் சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
தளபதி விஜய்யின் சிவகாசி படத்தில் குட்டிப் பெண்ணாக நடித்த இவர், மீண்டும் அவரை சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
இத்தனை படங்களில் நடித்திருக்கும் நடிகை வெண்பா, கிளாமர் ரோல் தனக்கு செட் ஆகாது என்றும், அடல்ட் படங்கள் பக்கம் போகவே மாட்டேன் என குட் கேர்ளாக க்யூட்டாக பதில் அளித்திருக்கும் வீடியோவை பார்த்து மகிழுங்கள்!


Click it and Unblock the Notifications











