கொலவெறி பத்தி என்கிட்ட ஏன் கேக்குறீங்க? - கவிஞர் விவேகா

கடந்த ஆண்டில் அதிக ஹிட் பாடல்களை எழுதியவர் கவிஞர் விவேகா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே நண்பன் படத்தின் என் பிரண்ட போல யாரு மச்சான்... பாட்டு சூப்பர் ஹிட்டாகிவிட்டதால், அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிகின்றனவாம்.
இதுகுறித்து விவேகா கூறுகையில், "காதலைப் பற்றிப் பேச விவாதிக்க கொண்டாட குறிப்பிட்ட வயது என்கிற தகுதி தேவைப்படும். ஆனால், நட்பைப் பற்றிப் பேசவும் கொண்டாடவும் வயது வரம்பு தேவையில்லை. அதனால் தான் இன்று என் பிரண்டைப் போல போல யாரு மச்சான் பாடல் பட்டி தொட்டியெல்லாம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது
இந்த 'நண்பன்' படப்பாடல் நட்பு வட்டங்களில் நண்பர்கள் உலகத்தில் தேசிய கீதமாகிவிட்டது.
உரையாடல்கள், எஸ்.எம்.எஸ், காலர்ட்யூன், நெட் ஒர்க் விளம்பரம், ஃபேஸ்புக் என்று இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் கொண்டாடி வருகிறார்கள். சிறுவர்களும் முணு முணுக்கிறார்கள்.
நண்பன் படத்தில் நான் எழுதிய பாடலுக்கு இந்த பெருமையான பிரம்மாண்ட வெளிச்சம் பல மடங்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. இதுதான் உண்மை. அதற்காக இந்த பாடலை எழுத வாய்ப்பளித்த இயக்குனர் ஷங்கருக்கும் ஹாரிஸ் ஜெயராஜுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.
அவரிடம் தனுஷின் கொலவெறி பாட்டைப் பற்றி சில நிருபர்கள் திரும்ப திரும்ப கேட்டனர். உடனே அவர், "அந்தப் பாட்டுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. திரும்பத் திரும்ப அது பத்தி ஏன் கேக்கறீங்க?" என்றார்.
இப்போதைக்கு விவேகாவின் கைவசம் இப்போது எண்பதுக்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றனவாம்.
சூர்யா நடிக்கும் மாற்றான், சிங்கம்-2, கார்த்தி நடிக்கும் 'சகுனி', விக்ரம் நடிக்கும் 'கரிகாலன்', வசந்த பாலன் இயக்கத்தில் 'அரவான்', அறிவழகன் இயக்கும் 'வல்லினம்', விமல் நடிக்கும் 'சிலு சிலுன்னு ஒரு சந்திப்பு', 'இஷ்டம்', ஜெயம் ரவி நடிக்கும் 'பூலோகம்' உட்பட பல படங்களில் இவர் பாடல் எழுதுகிறார்.
'வேட்டைக்காரன்' படத்தில் இவர் எழுதிய 'ஒரு சின்னத் தாமரை..' பாடல் 2010 ஆண்டின் சிறந்த பாடல் - விஜய் டி வி விருது பெற்றது. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் தமிழ் சினிமாவின் சிறந்த 10 இளம் திறமையாளர்களுள் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது.


Click it and Unblock the Notifications











