என்னை பத்தி பேச யாருக்கும் ரைட்ஸ் இல்லை: வனிதா விஜயகுமார்

By Siva

Recommended Video

Bigg Boss Vanitha : Family Photos : வனிதா அக்கா இல்லாத Family photo-வா- வீடியோ

சென்னை: நான் இரண்டு முறை விவாகரத்தானவள் என்பதை வைத்து கிண்டல் செய்து மீம்ஸ் போடுவது சரி அல்ல என முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.

வனிதா விஜயகுமார் பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது பார்வையாளர்கள் முழுநேரமாக அவரை கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருந்தார்கள். அதிலும் குறிப்பாக அவருக்கு இரண்டு முறை விவாகரத்து ஆனதை வைத்து கலாய்த்து மீம்ஸ் போட்டனர்.

வனிதாவால் ஒரு புருஷனுடன் இருக்க முடியாது என்று எல்லாம் கேவலமாக கிண்டல் செய்யப்பட்டது.

மீம்ஸ்

மீம்ஸ்

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியே வந்த வனிதா சமூக வலைதளங்கள் பக்கம் போனபோது தன்னை பற்றிய மீம்ஸுகளை பார்த்து வருத்தப்பட்டுள்ளார். மேலும் பார்வையாளர்கள் தன்னை பஜாரி என்று குறிப்பிட்டு ட்வீட் செய்ததையும் பார்த்துள்ளார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து விமர்சிப்பது சரி அன்று என வனிதா தெரிவித்துள்ளார்.

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை

என் வாழ்வில் இரண்டு முறை விவாகரத்து நடந்துள்ளது உண்மை தான். அதை நான் ஒருபோதும் மறைத்தது இல்லை. மேலும் அதை நினைத்து வெட்கப்பட்டதும் இல்லை. என் திருமண வாழ்க்கை குறித்த மீம்ஸுகளை பார்த்தேன். என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் வனிதா.

வாழ்க்கைத் துணை

வாழ்க்கைத் துணை

அடிக்கடி விவாகரத்து நடக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விவாகரத்து பெறுவதற்கான காரணம் ஆளாளுக்கு மாறுகிறது. அனைவருக்கும் வாழ்க்கைத் துணை தேவை. சமீபகாலமாக ஒரே பாலினத்தில் கூட பார்ட்னரை தேர்வு செய்கிறார்கள். வாழ்க்கைத் துணை என்பது வெறும் செக்ஸுக்காக இல்லை. ஒருவருக்கு விவாகரத்தானது என்ற ஒரே காரணத்திற்காக அவரை பற்றி தரக்குறைவாக பேசுவது நியாயம் இல்லை என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 3

பிக் பாஸ் 3

வனிதா இல்லாத பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்க சகிக்கவில்லை. எங்க வனிதா அக்காவை ஒயில்டு கார்டு மூலம் மீண்டும் அழைத்து வாங்க பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வனிதா இருந்திருந்தால் இந்த கவின், லாஸ்லியா, சாக்ஷி ஆகியோரின் போலிக் காதலுக்கு ஒரு முடிவு கட்டியிருப்பார் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X