இந்த வருசம் பூரா எனக்கு ஓய்வே இல்லீங்க!- விமல் Exclusive
களவாணி வெற்றிக்குப் பிறகு பெரிய ரேஞ்சில் வர வேண்டிய விமல், ரேஸில் சற்று தடுக்கினார். இப்போது மன்னர் வகையறாவுக்குப் பிறகு அடுத்த இன்னிங்ஸில் வேகம் பிடித்துள்ளார்.
ஆக்சன், ரொமான்ஸ், சென்டிமென்ட் இவை அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பப்பாங்கான கதைகளில் மின்னக்கூடிய அளவுக்கு இப்போதுள்ள நட்சத்திரம் விமல்தான் என்பது இயக்குநர்கள் கணிப்பு.

அந்த முடிவுக்கு வந்ததால்தான் இயக்குநர்கள் எழில், சுராஜ் போன்றவர்கள் விமலிடம் வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
வரப்போகும் உங்கள் படங்கள் பற்றி...
எல்லாமே எதிர்ப்பார்ப்புக்குரிய படங்கள்தான். முன்னணி இயக்குநர்கள். எல்லாம் மன்னர் வகையறா தந்த வாய்ப்புகள்.
இயக்குநர் எழில் டைரக்சனில் மீண்டும் ஒரு படம். சுராஜ் டைரக்சனில் போலீஸ் அதிகாரிகளாக நானும் வடிவேலுவும் நடிக்கிறோம். மருதமலை பாணியில் கலக்கலாக உருவாகவுள்ளது.
இதுதவிர 'வெற்றிவேல்' இயக்குனர் வசந்தமணி, 'தமிழன்' பட இயக்குனர் மஜித், ஆகியோரின் படங்களில் அடுத்தடுத்து நடிக்கிறேன்.
'மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கிறேன்.
கன்னிராசி படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடக்கின்றன. இதில் எனக்கு ஜோடி வரலட்சுமி. சற்குணம் இயக்கத்தில் களவாணி 2 படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த வேலை நிறுத்தம் சமயத்தில் கிடைத்த 3௦ நாட்கள்தான் எனக்குக் கிடைத்த ஒய்வு நாட்கள்.. ஆம்.. இனி வரும் நாட்களில் எனக்கு ஓய்வே கிடையாது," என்றார்.
இவை எல்லாமே காமெடிப் படங்கள்தானா?
பெரும்பாலும் காமெடிப் படங்கள்தான். சில ஆக்ஷன் ரொமான்ஸ் கலந்தவை. நமக்கு செட்டாகிற கதைகளில்தான் நடிக்கணும். இது கடந்த காலங்களில் கற்ற பாடம்," என்கிறார் விமல்.


Click it and Unblock the Notifications











