திருமணத்திற்கு முன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.. பிரேக்-அப் குறித்து பேசிய ஸ்வாசிகா!
சென்னை: தமிழில் 'வைகை' படம் மூலம் அறிமுகமாகி, பின்னர் கோரிப்பாளையம், மைதானம் போன்ற படங்களில் நடித்தவர் ஸ்வாசிகா. தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் மலையாள சினிமாவுக்குச் சென்ற அவர், சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் தமிழில் அதிரடி கம்பேக் கொடுத்துள்ளார். தற்போது மாமன், கருப்பு, நூறு சாமி என அடுத்தடுத்துப் பல தமிழ்ப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு, ஸ்வாசிகாவுக்கும் பிரபல நடிகரும் மாடலுமான பிரேம் ஜேக்கப்பை திருமணம் செய்து கொண்டார். 'நூறு சாமி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள ஸ்வாசிகா, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்: அதில், திருமணத்திற்கு முன்பு நான் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். நான் ஒன்றும் ஒரு தவறான நபரைத் தேர்வு செய்து காதலிக்கவில்லை. அவர் மிகவும் அன்பானவர், எனக்கு மரியாதை கொடுப்பவர், அழகானவர் என எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக அவருடைய குடும்பத்தில் சில பணப் பிரச்சினைகள் ஏற்பட்டன. அதே நேரத்தில் அவருடைய அப்பாவும் இறந்துவிட்டார். இந்தத் தொடர் சோகங்களால் மனமுடைந்த அவர், இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் மெல்ல மெல்ல என்னிடமிருந்து விலகத் தொடங்கிவிட்டார். அதனால் தான் அந்த காதல் முறிந்தது.
காதல் திருமணம்: அதன் பின் தான் என் வாழ்க்கையில் பிரேம் ஜேக்கப் வந்தார். நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த போது இருவருமே செம்ம பிஸியாக நடித்துக் கொண்டிருந்தோம். அவர் விஜய் டிவியில் ஒரு சீரியலில் கமிட் ஆகியிருந்தார், நான் ஒரு தெலுங்குப் படத்தில் பிஸியாக இருந்தேன். நாங்கள் இருவரும் கல்யாணம் செய்துகொள்ள மேடைக்கு வந்ததே வெவ்வேறு ஷூட்டிங் லொகேஷன்களில் இருந்துதான். திருமணம் முடிந்த அடுத்த நாளே அவர் சீரியல் ஷூட்டிங்கிற்காகச் சென்னைக்குக் கிளம்பிவிட்டார். நான் தெலுங்குப் பட ஷூட்டிங்கிற்காக ராஜமுந்திரிக்குக் கிளம்பிவிட்டேன். திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்துத்தான் நாங்கள் இருவருமே நேரில் சந்தித்துக் கொண்டோம்.
நாங்கள் நேரில் பார்ப்பதை விட போனில் தான் அதிக நேரம் பேசிக் கொள்வோம். ஆனால், ஏதோ ஒப்புக்கு பேசாமல் இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் முயற்சியைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருப்போம். அப்படி இருந்தால் தான் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணத்திற்கு முன் நான் சமைத்ததே இல்லை. ஆனால், இப்போது நாங்கள் இருவரும் வீட்டில் ஒன்றாக இருக்கும் நேரத்தில், அவருக்குப் பிடித்த உணவுகளை நானே ஆசை ஆசையாகச் சமைத்துக் கொடுக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications