என்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்
சென்னை: தயாரிப்பாளர் ஆவது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
ரகுல் ப்ரீத் சிங் கார்த்தியுடன் தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே. ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தேவ் பட விளம்பர நிகழ்ச்சிகளில் ரகுல் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரகுல் கூறியதாவது,

கார்த்தி
தேவ் படத்தில் எனக்கு வெயிட்டான கதாபாத்திரம். நானும், கார்த்தியும் நேர் எதிரானவர்கள். அப்படிப்பட்ட நாங்கள் எப்படி சேர்கிறோம் என்பது தான் கதை. இந்த படத்தில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு பயணப் பாடலை படமாக்க பல ஊர்களுக்கு சென்றோம்.

சூர்யா
சூர்யாவின் தீவிர ரசிகையான நான் அவருடன் சேர்ந்து என்.ஜி.கே. படத்தில் நடித்துள்ளேன். சூர்யாவும் சரி, கார்த்தியும் சரி திறமையானவர்கள், பழக இனிமையானவர்கள். செல்வராகவன் இயக்கத்தில் நடித்ததை மறக்கவே முடியாது. நடிகர்களுக்குள் இருக்கும் முழுத் திறமையையும் வெளிக்கொண்டு வந்துவிடுவார் அவர்.

ஜிம்
நான் ஹோட்டல் துவங்கப் போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஹைதராபாத், விசாகப்பட்டினத்தில் 2 ஜிம் திறந்துள்ளேன். அனைவரும் தினமும் ஒரு மணிநேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். நம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடல்நலம் மிகவும் முக்கியம்.

தயாரிப்பாளர்
படத்தை இயக்கவோ, தயாரிக்கவோ ஐடியா இல்லை. படம் தயாரிக்கும் அளவுக்கு என்னிடம் பணமும் இல்லை. நான் ஒரு நடிகையாக கேமராவுக்கு முன்பு இருக்கவே விரும்புகிறேன். வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.


Click it and Unblock the Notifications











