மிஷ்கின் என் நட்பை துண்டித்து விட்டார்.. துப்பறிவாளன் பிரச்சனை.. பிரசன்னா ஓப்பன் டாக்!
சென்னை: துப்பறிவாளன் 2 படம் தொடர்பாக விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டது தான் தான் என நடிகர் பிரசன்னா தனது பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார்.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே படத்தில் அட்டகாசமான வில்லன் ரோலில் நடித்து தனது நடிப்புத் திறமையை முழுமையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு காட்டி மிரட்டி இருந்தார் பிரசன்னா.

அதன் பிறகு மிஷ்கினுடன் 7 ஆண்டுகளுக்கும் மேல் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்வதில்லை என நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.
பின்னர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியன துப்பறிவாளன் படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்திருந்தார்.
விஷால் நாயகனாக கணியன் பூங்குன்றன் கதாபாத்திரத்தில் நடித்த நிலையில், அவருக்கு உதவியாளர் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர் என்ற கேள்விக்கு, நல்ல ரோல் என மிஷ்கின் கூறினார், வேறு எதையும் தான் சிந்திக்கவில்லை. மிஷ்கினுக்காக செய்தேன் என்றார்.
துப்பறிவாளன் 2ம் பாகத்திலும் மீண்டும் அதே கூட்டணியில் இணைந்து நடித்துள்ள நடிகர் பிரசன்னா முதன் முறையாக விஷால் - மிஷ்கின் பிரச்சனை குறித்து மனம் திறந்து அளித்துள்ள பேட்டி தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்த பேட்டியில் சமூக பிரச்சனைகள் தொடர்பாக நடிகர் பிரசன்னா போடும் டிவீட்கள் பற்றியும், விஷால் - மிஷ்கின் பிரச்சனை தொடர்பாகவும், நேபாள பிரதமர் ராமர் பற்றி தெரிவித்த கருத்துக்கள் குறித்தும் விரிவாக பேசியுள்ளார்.
விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில், இருவருக்கும் நண்பராக இருந்த பிரசன்னாவுக்கு தான் கொலட்ரல் டேமேஜ் என்றும், தனது நட்பை உடனடியாக அப்படியே துண்டித்து விட்டார் மிஷ்கின் என பிரசன்னா வருத்தத்துடன் கூறியிருக்கும் முழுப் பேட்டியை காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











