twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் சாரை இயக்க ஆசைதான்... ஆனால்.. மனம் திறந்த ஓ மணப்பெண்ணே இயக்குநர்!

    |

    சென்னை: நடிகர் விஜய்யை இயக்குவது குறித்து ஓ மணப்பெண்ணே படத்தின் இயக்குநர் கார்த்திக் சுந்தர் மனம் திறந்து பேசியுள்ளார்.

    Recommended Video

    Oh Manapenne வந்தது இப்படி தான் | Harish Kalyan | Priya Bhavani Shankar

    பிரியா பவானி சங்கர், ஹரீஷ் கல்யாண் லீடிங் ரோலில் நடிக்க கடந்த 22ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியான படம் ஓ மணப்பெண்ணே.

    சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் தாமதமாக காரணம் இதுதான்... தீயாய் பரவும் தகவல்! சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் தாமதமாக காரணம் இதுதான்... தீயாய் பரவும் தகவல்!

    இந்தப் படத்தில் வேணு அரவிந்த், அபிசேக் குமார், அன்புதாசன், சித்தாந்த், அஸ்வின் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    சில மாற்றுங்களுடன்

    சில மாற்றுங்களுடன்

    தெலுங்கில் தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவும் ரீத்து வர்மாவும் நடித்து வெளியான 'பெல்லி சூப்புலு' படத்தின் ரீமேக்தான் இந்த ஓ மணப்பெண்ணே திரைப்படம். ஆனால் அந்த படத்தை போன்று இல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப சில மாற்றங்களுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    கார்த்திக் சுந்தர் நேர்காணல்

    கார்த்திக் சுந்தர் நேர்காணல்

    ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் பாஸிட்டிவான விமர்சனங்களை குவித்து வருகிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் இந்தப் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்திருக்கலாம் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுந்தர் தமிழ் பிலிமி பீட் தளத்துக்கு நேர்காணல் அளித்துள்ளார்.

    என்ன செய்தால் நல்லா இருக்கும்?

    என்ன செய்தால் நல்லா இருக்கும்?

    அதில் ஓ மணப்பெண்ணே படம் குறித்து பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி தெலுங்கில் ரிலீஸ் ஆன பெல்லி சுப்புலு படத்தில் விஜய் தேவரகொண்டா செய்ததை செய்ய தாங்கள் முயற்சி செய்யவில்லை என்றும்

    ஹரீஷ் கல்யாண் பிரியா பவானிஷங்கருக்கு என்ன வரும்? என்ன செய்தால் நல்லா இருக்கும் என்பதையே ஓ மணப்பெண்ணே படத்தில் செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

    ஹீரோவுக்கு ஏன் கார்த்திக் என்று பெயர்?

    ஹீரோவுக்கு ஏன் கார்த்திக் என்று பெயர்?

    படத்தின் இசை குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுந்தர். இசை தொடர்பான வேலையில் லாக்டவுன் ரொம்ப ஹெல்ப் பண்ணியதாக கூறிய கார்த்திக் சுந்தர், பிஜிஎம்முக்காக மட்டும் 6 மாதம் வேலை பார்த்ததாக கூறியுள்ளார். மேலும் படத்தில் ஹீரோவுக்கு கார்த்தி என பெயர் வைத்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் கார்த்திக் சுந்தர், கார்த்தி என்ற பெயர் தமிழ் சினிமாவில் ரொமான்டிக் கனெக்ட் என்பதால் வைத்ததாக கூறினார். தன் பெயர் என்பதால் வைக்கவில்லை என்றும் கூறினார் கார்த்திக் சுந்தர்.

    விஜய்க்கு போட்டு காட்டினாரா?

    விஜய்க்கு போட்டு காட்டினாரா?

    இந்தப் படம் உரையாடல்கள் நிறைந்த படம் என்றும் எமோஷன்களுக்கான படம் என்றும் கூறியுள்ளார்.

    பெல்லி சுப்புலு படம் உண்மை கதைதான் என்ற கார்த்திக் சுந்தர் நம்ம படமும் உண்மை கதைதான் என்றார். மேலும் நடிகர் விஜய்யுடன் தலைவா படத்தில் பணியாற்றியுள்ள கார்த்திக் சுந்தர் இந்தப் படத்தை விஜய்க்கு போட்டுக்காட்டினாரா என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.

    ஆசைதான்.. பார்க்கலாம்..

    அதாவது விஜய் சாரிடம் படத்தை போட்டு காட்டும் போது பதட்டமாக இருந்தது அவர் படத்தை பார்த்துவிட்டு நல்லா இருக்கு என்று கூறியதாக கூறினார். தமிழ் சினிமாவில் இயக்குநராவது அவ்வளவு ஈஸி இல்லை என்ற கார்த்திக் சுந்தர் என் குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார். நடிகர் விஜய்யை டைரக்ட் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த கார்த்திக் சுந்தர், ஆசை உள்ளது, இப்போதுதான் முதல் படம் பண்ணியிருக்கிறேன்.. பார்க்கலாம்.. என கூறியுள்ளார்.

    English summary
    Oh Manappenne director Karthik Sundar opens up about making of the film. He is willing to direct actor Vijay.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X