காதலர் தினத்துக்கு ஹேப்பியா இருக்கணுமா.. ஓ மை கடவுளே பாருங்க.. ரித்திகா சிங், அஸ்வத் எக்ஸ்க்ளூசிவ்!
Recommended Video
சென்னை: ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் உருவாகி உள்ள ஓ மை கடவுளே திரைப்படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகிறது.
காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இந்த ரொமான்டிக் ஃபேண்டஸி காமெடி திரைப்படத்தில் இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் விஜய்சேதுபதி ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுத்துள்ளனர்.

ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் நாயகி ரித்திகா சிங் ஒன் இந்தியா தமிழ் பிலிம் பீட் நேயர்களுக்காக பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர்.
பிளைட்டுக்கு கிளம்பும் நேரத்திலும் நாயகி ரித்திகா சிங், க்யூட்டாக வந்து, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு செல்லமாக ஒரு ஹக் செய்து விட்டு, ஓ மை கடவுளே படத்தை பார்த்தா இந்த காதலர் தினத்துக்கு ஹேப்பியா இருப்பீங்க என சொல்லிவிட்டு சிட்டாக பறந்து விட்டார்.
இயக்குநர் அஸ்வத் அளித்த பேட்டியில், இயக்குநர் கெளதம் மேனன் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
மேலும், கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தில் வருவது போல, தானும், தனது காதலியை காண விமானம் ஏறி சென்றதாகவும், ஆனால், அதன் கிளைமேக்ஸ் பிரேக்கப்பில் முடிந்ததாகவும், தனது சொந்த ஓ மை கடவுளே கதையையும் கூறியுள்ளார்.
திருப்பாச்சி படத்தில் வரும் கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சி பாடலில் நடிகர் விஜய் பாடும் ஓ மை கடவுளே வரிகள் தான் தனக்கு இந்த படத்துக்கான இன்ஸ்பிரேஷன் என்று கூறிய அஸ்வத், மேலும், தளபதி விஜய் குறித்து கூறியுள்ள சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை க்ளிக் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications