சூது கவ்வும் பார்த்துட்டு கமல் சார் கூப்டாங்க.. அசோக் செல்வன் ஸ்பெஷல் பேட்டி!

Recommended Video

சூது கவ்வும் பாத்துட்டு கமல் சார் கூப்டாங்க | ACTOR ASHOK SELVAN INTERVIEW | FILMIBEAT TAMIL

சென்னை: காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி ஓ மை கடவுளே படம் ரிலீசாகிறது.

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது.

Oh My Kadavule hero Ashok Selvan special interview!

கெளதம் மேனன், இயக்குநர் கெளதம் மேனனாகவே இந்த படத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய்சேதுபதி கடவுள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக உருவாகி உள்ள ஓ மை கடவுளே படத்தின் நாயகன் அசோக் செல்வன், ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு இந்த பிரத்யேக பேட்டியை கொடுத்துள்ளார்.

சூது கவ்வும், தெகிடி, பிட்ஸா 2: வில்லா, சவாலே சமாளி மற்றும் கூட்டத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அசோக் செல்வன் நடிப்பில் செம்ம ரொமாண்டிக்காக ஓ மை கடவுளே படம் உருவாகி உள்ளது.

ஓ மை கடவுளே என்ற வார்த்தையை ஒவ்வொரு மனிதரும், துக்கம், சந்தோஷம், கோபம் என ஒவ்வொரு தருணங்களிலும் கூறி வருகின்றனர். இந்த டைட்டில் அது போன்ற ஒரு சூழ்நிலையில், படத்தின் திருப்பு முனையாக அமையும்.

சிறு வயதில் இருந்து நண்பர்களாக பழகி வரும் இருவரில், திடீரென ஒருவர் நாம கல்யாணம் பண்ணிக்கலாமா என கேட்க? அங்கே தொடங்கும் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும் தான் ஓ மை கடவுளே என நாயகன் அசோக் செல்வன் கூறியுள்ளார்.

மேலும், நடிகைகள் ரித்திகா சிங் குறித்தும், வாணி போஜன் குறித்தும் இந்த பேட்டியில் அசோக் செல்வன் மனம் திறந்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

விஜய்சேதுபதியின் சூது கவ்வும் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்ததை பார்த்து, அசோக் செல்வனை கமல் ஹாசன் நேரில் கூப்பிட்டு பாராட்டிய சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார். அது குறித்து தெரிந்து கொள்ள, இந்த வீடியோவை க்ளிக் செய்து கலகலப்பான அசோக் செல்வனின் அரட்டையை கண்டு ரசியுங்கள். வரும் காதலர் தினத்தன்று ரிலீசாகவுள்ள ஓ மை கடவுளே படத்தை தியேட்டரில் கண்டு மகிழுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X