எம்.ஜி.ஆரை தவிர வேற எந்த நடிகருக்கும் அந்த கதை செட் ஆகாது.. தயாரிப்பாளர் கலைஞானம் பேட்டி!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பைரவி, சிவாஜியின் மிருதங்க சக்கரவர்த்தி, காதல் படுத்தும் பாடு உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் கலைஞானம் அய்யாவின் பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.
எம்.ஜி.ஆர் பற்றியும் சிவாஜி குறித்தும் ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்து கொண்ட முத்தான பொக்கிஷத் தகவல்களை வீடியோவில் பார்த்து மகிழுங்கள்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு 'கொடுத்து சிவந்த கை' என்ற கதையை சொன்னேன். கேட்டதும் உடனே அதை படமாக எடுக்க ஆர்.எம். வீரப்பனிடம் சொன்னார்.
அந்த டைட்டிலும் அந்த கதையும் அவரைத் தவிர வேறு யாருக்கும் பொருந்தாது. ஆனால், கே.ஆர். விஜயா அந்த டைட்டிலை வாங்கி படமாக எடுக்க ஆரம்பித்ததால், அந்த படத்தை எடுக்க முடியாமல் போனது என்றார்.
அதன் பின்னர் சிவாஜியை வைத்து அவர் தயாரித்த மிருதங்க சக்கரவர்த்தி படம் உருவான விதத்தையும், அந்த படத்தின் கதையை சிவாஜிக்கு சொல்ல போன இடத்தில் தனது உள்ளங்கை எல்லாம் வியர்த்துப் போய், நாக்கெல்லாம் வறண்டு விட்ட அனுபவங்களையும் கலைஞானம் இந்த பேட்டியில் நம்முடன் பகிர்ந்துள்ளார்.
எம்.ஜி.ஆர் கையால் பரிசு வாங்கும் போது, அதற்கு சிவாஜி பாராட்டி கை தட்டிய புகைப்படத்தையும் தயாரிப்பாளர் கலைஞானம் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார். எத்தனை கோடி கொடுத்தாலும், இது போன்ற ஒரு நிகழ்வு யாருக்கும் வாய்க்காது என்றார்.

வெளியே தான் ரசிகர்கள், எம்.ஜி.ஆர்., சிவாஜி என அடித்துக் கொள்வார்கள். ஆனால், அவங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பியாத்தான் கடைசி வரை பழகி வந்தார்கள்.
கே.பி. சுந்தராம்மாள் இறந்த போது, உடனே எம்.ஜி.ஆருக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னேன். அப்ப நான் அங்கே தான் இருந்தேன். உடனே ஓ அப்படியா, சரி நான் ஆர்.எம். வீரப்பனிடம் சொல்லி எல்லா வேலைகளையும் பார்க்க சொல்கிறேன் என்றார். நான் உடனே நீங்க எப்போ வரீங்க என கேட்டுட்டேன். இப்போ நான் முதல்வர், அப்படியெல்லாம் உடனே வந்துட முடியாதுன்னு போனை வச்சிட்டார் என்றும் மறக்க முடியாத அனுபவங்களை இந்த பேட்டியில் சொல்லி உள்ளார்.


Click it and Unblock the Notifications











