பணம் மட்டும் தான் பிரச்சனை, சம்பளம் இல்லை...நக்கலைட்ஸ் பிரசன்னா பாலசந்திரன் கடந்துவந்த பாதை!

சென்னை: பண கஷ்டத்திற்காக ஜாலியாக நடித்தேன். யூடியூப் மற்றும் திரைப்படங்களில் எனது அன்றாட நிஜ கதாபாத்திரமாக நான் நடிப்பதில்லை. எனக்கு வரும் வாய்ப்பை பொறுத்து அந்த கதாபாத்திரத்திற்குரிய குணத்தை மட்டும் வெளிப்படுத்துவேன் என திரைப்பட நடிகர் பிரசன்னா பாலசந்திரன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், எங்களது யூடியூப் சேனலில் இரட்டை அர்த்த வசனங்களோ, ஆபாசங்களோ, பெண்களை சீண்டுவது, உடல் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது போன்ற எதுவும் இடம் பெறாது என்றும் தெரிவித்தார்.

பிரசன்னா பாலசந்திரன் ரசிகர்கள் என்று நாளுக்கு நாள் அதிகம் ஆகி கொண்டே போகிறார்கள். இது குறித்து அவர் பிலிம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

இயக்குநர்களுக்கு நன்றி

இயக்குநர்களுக்கு நன்றி

கேள்வி: சேத்துமான் படத்தில் நடிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பு எப்படி கிடைத்தது?

பதில்: நக்கலைட்ஸ் யூடியூப்பில் நான் நடித்ததை பார்த்து, சேத்துமான், அம்முச்சி 2 போன்ற படங்களில் எனக்கு நடிக்கும் வாய்ப்பளித்த இயக்குநர்களுக்கு நன்றி. நான் எந்த வாய்ப்பிற்கும் தேடி அலைந்தது கிடையாது. இந்த கதாபாத்திரத்திற்கு இவர் சரியானவர் என்று இயக்குநர்கள் கணித்து என்னை அழைக்கிறார்கள் .

சேத்துமான் இயக்குநர் "தமிழ்" என்னையும், எனது மனைவியாக நடித்த சாவித்ரியையும் சேத்துமான் படத்தில் அறிமுகப்படுத்தினார். நாங்கள் இருவரும் கோயம்புத்தூர்காரர்கள். பின்னர் நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் நடிப்பதற்கு சாவித்ரியை தொடர்பு கொண்டோம். அங்கும் கணவன், மனைவியாக நடித்தோம். மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுமட்டுமின்றி நாங்கள் இருவரும் நான்கு படங்களில் நடித்து வருகிறோம் என்றார் பிரசன்னா .

கிழவிகளுடன் நட்பு

கிழவிகளுடன் நட்பு

கேள்வி: அம்முச்சி 2 படத்திற்கு சென்சாரில் ஏதாவது பிரச்சனை வந்ததா?

பதில்: நான் பொதுவாக நடிகன் கிடையாது. நான் நடிப்பதற்கு காரணம் ராஜேஷ் தான். நானும், ராஜேஷும் ஆண்டபரம்பரை குறும்படத்தை எடுத்தோம். பணப்பிரச்னை காரணமாக நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியவில்லை. அதனால் நானே நடிகனாக நடிக்கவேண்டியதாயிற்று. பஞ்சத்திற்காக தான் நடித்தேன். எனது நண்பர்களையும் நடிக்க வைத்தேன். நானும், ராஜேஷூம் எதை செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்று கருதினோம். நான் எழுதவதை முறையாக கற்றுக் கொண்டேன். பயிற்சியின்போது நடிப்பை கற்றுக்கொண்டேன். நான் எப்பொழுதும் கதாபாத்திரமாக நடிப்பதில்லை. அந்த கதாபாத்திரத்திற்குரிய குணத்தை மட்டும் வெளிப்படுத்துவேன் என்றார்.

பணப்பிரச்னை

பணப்பிரச்னை

கேள்வி: நீங்கள் எப்பொழுது நடிகனாக பரிணாமம் அடைந்தீர்கள்?

பதில்: நான் பொதுவாக நடிகன் கிடையாது. நான் நடிப்பதற்கு காரணம் ராஜேஷ் தான். நானும், ராஜேஷூம் ஆண்டபரம்பரை குறும்படத்தை எடுத்தோம். பணப்பிரச்னை காரணமாக நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியவில்லை. அதனால் நானே நடிகனாக நடிக்கவேண்டியதாயிற்று. பஞ்சத்திற்காக தான் நடித்தேன். எனது நண்பர்களையும் நடிக்க வைத்தேன். நானும், ராஜேஷூம் எதை செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்று கருதினோம். நான் எழுதவதை முறையாக கற்றுக் கொண்டேன். பயிற்சியின்போது நடிப்பை கற்றுக்கொண்டேன். நான் எப்பொழுதும் கதாபாத்திரமாக நடிப்பதில்லை. அந்த கதாபாத்திரத்திற்குரிய குணத்தை மட்டும் வெளிப்படுத்துவேன் என்றார்.

தயக்கமின்றி பார்க்கும் படம்

தயக்கமின்றி பார்க்கும் படம்

கேள்வி: திரைப்படத்தை இயக்கும் எண்ணம் உங்களுக்கு ஏதும் உண்டா?

பதில்: நானும், ராஜேசும் திரைப்படம் இயக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நல்ல திரைப்படமாகவும், வித்தியாசமாகவும், பொழுதுபோக்கு நிறைந்ததாகவும், குடும்பத்துடன் தயக்கம் இன்றி பார்க்கும் படமாக கண்டிப்பாக இருக்கும் என்றார்.

சம்பளம் வழங்கவில்லை

சம்பளம் வழங்கவில்லை

கேள்வி: நீங்கள் சினிமா பயணத்தில் அடைந்த சிரமங்கள் என்ன?

பதில்: எனது 37 வயதில், அதாவது 2013ம் ஆண்டு தொடங்கிய இந்த பயணத்தில், முதல் 5 வருடங்கள் பல பிரச்சனைகளை சந்தித்தோம். எனது மனைவி மற்றும் குடும்பத்தாரும் எனது நோக்கத்தை புரிந்து கொண்டு, முழு ஒத்துழைப்பு அளித்தனர். எனக்கும், ராஜேஷுக்கும் இருந்த ஒரே பிரச்சனை பணம் மட்டும் தான். நாங்கள் இந்தளவுக்கு உயருவதற்கு காரணம் எங்களுடைய டீம் தான். முதல் இரண்டு வருடங்கள் அவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. எங்களது நக்கலைட்ஸ் யூடியூப் வீடியோக்கள் 1 முதல் 2 மில்லியன் பார்வையாளர்களை சென்றடந்தபிறகு, எங்களுக்கு யூடியூப் மூலம் பணம் கிடைத்தது. அதற்கு பிறகு தான் அவர்களுக்கு சம்பளம் வழங்கினோம்.

ஆபாசம் கிடையாது

கேள்வி: உங்களது லட்சியம் என்ன?

பதில்: எங்களது யூடியூப் சேனலில் இரட்டை அர்த்த வசனங்களோ, ஆபாசங்களோ, பெண்களை சீண்டுவது, பெண்களின் அங்கங்களை காட்டுவது, குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது போன்ற எதுவும் இடம் பெறாது. இதனால் தான் ஐந்து வருடங்கள் மக்கள் எங்கள் சேனலுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். நல்ல கருத்துக்களை மக்களுக்கு வழங்கி நல்ல சமுதாயத்தை உருவாக்குவது எங்களது லட்சியம் என்றார்.

இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/0TNSGLPH2lo இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X