twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காமெடிக்கு மாறியது ஏன்? - சொல்கிறார் ஊர்வசி

    By Shankar
    |

    Oorvasi
    நகைச்சுவை வேடங்கள் சவாலானவை. என்னுடைய நகைச்சுவை நடிப்பு மக்களுக்கு பிடித்துவிட்டதால்தான், கதாநாயகியாக இருந்தபோதே, நகைச்சுவை வேடங்களை ஏற்று நடித்தேன், என்கிறார் நடிகை ஊர்வசி.

    முந்தானை முடிச்சு மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. தொடர்ந்து பல வெற்றிப் படங்களின் நாயகியாக வலம் வந்தவர், திடீரென காமெடி ரூட்டைப் பிடித்தார்.

    மைக்கேல் மதன காமராஜன், வனஜா கிரிஜா, இரட்டை ரோஜா, மகளிர் மட்டும் படங்களில் ஹீரோயின் மற்றும் காமெடி வேடங்களில் கலக்கினார்.

    ஒரு இடைவெளிக்குப்பிறகு, அவர் அம்மா வேடங்களில் நடித்தார். ஆனால் அதிலும் நகைச்சுவையே பிரதானமாக அமைந்ததால் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    உதாரணம், வாமனன், சிவா மனசுல சக்தி.

    இப்போது, பேச்சியக்கா மருமகன் படத்தில் நடித்து வருகிறார். இதில் தருண் கோபிக்கு மாமியாராக நடித்துள்ளார் ஊர்வசி. மலையாளம் தாய்மொழி என்றாலும், மதுரைத் தமிழ் பேசி நடித்துள்ளார் ஊர்வசி.

    தனது சினிமா அனுபவம், நகைச்சுவைக்கு மாறியது குறித்து அவர் கூறுகையில், "400 படங்களில் கதாநாயகியாக நடித்த பின் நகைச்சுவை வேடம் விட்டேன். அதன்பிறகு நகைச்சுவை வேடங்களிலும், குணச்சித்ர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறேன். நகைச்சுவையாக நடிப்பது ஏன்? என்று நிறைய பேர் கேட்கிறார்கள்.

    நகைச்சுவை நடிப்பில், ஆச்சி மனோரமாவுடன் வேறு யாரையும் ஒப்பிட முடியாது. அவருடைய இடத்தை யாரும் நிரப்ப முடியாது. பொதுவாகவே சினிமாவில் பெண்கள் நகைச்சுவை வேடங்களில் நடிப்பது, குறைவாக இருக்கிறது.

    கதாசிரியர்கள், பெண்கள் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகள் எழுதுவதில்லை. எனக்கு 'மாயாபஜார்,' வனஜா கிரிஜா,' இரட்டை ரோஜாக்கள்' ஆகிய படங்கள் திருப்பமாக அமைந்தன. மைக்கேல் மதன காமராஜன்,' மகளிர் மட்டும்' படங்களுக்கு கிடைத்த வரவேற்பு, நகைச்சுவை வேடங்களில் நடிப்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தின.

    இடையில், கொஞ்ச காலம் படங்களில் நடிப்பதை தவிர்த்தேன். 'பேச்சியக்கா மருமகன்' படம், தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை தந்திருக்கிறது," என்றார்.

    Read more about: oorvasi ஊர்வசி
    English summary
    Actress Oorvasi is playing as mother in law role in Tharun Gopi's new film Pechiyakka Marumagan. Speaking on her role as comedy artist after completed 400 films as heroine, the actress told that the overwhelming response from the audience forced her to choose the role.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X