ஒரு பக்க கதை பற்றி பேசும் பாவக் கதைகள்’ ஹீரோ காளிதாஸ் மற்றும் ’96’ இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா!
சென்னை: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'ஒரு பக்க கதை' ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அந்த படத்தின் நாயகன் காளிதாஸ் மற்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா கலந்து கொண்ட பேட்டி வைரலாகி வருகிறது.
சமீபத்தில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜியில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான தங்கம் படத்தில் சத்தார் கதாபாத்திரத்தில் நடித்த காளிதாஸுக்கு சமூக வலைதளத்தில் மிகப்பெரிய வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது.

நடிகை மேகா ஆகாஷுடன் காளிதாஸ் நடித்துள்ள ஒரு பக்க கதை திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகி பாராட்டுக்களை அள்ளி வருகிறது.
96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, இசையில் இந்த படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலமான போது ஒரு நாள் முழுவதும் அவருக்காக அழுத நினைவுகளை கோவிந்த் வசந்தா நம்முடன் பகிர்ந்துள்ளார்.
சிறு வயதில் அப்துல் கலாம் கையால் விருது வாங்கிய போது கோர்ட் பாக்கெட்டில் கை விட்டதும், கமோண்டக்கள் தன்னை பார்த்து நடுங்கிய நினைவுகளையும், பேப்பர் எடுத்து அப்துல்கலாமிடம் ஆட்டோகிராஃப் வாங்கியதையும் இந்த பேட்டியில் காளிதாஸ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











