கீர்த்தி சுரேஷின் அம்மாவுடன் காதல்? 45 வருட ரகசியத்தை சொன்ன ஒரு தலை ராகம் சங்கர்!

சென்னை: டி.ராஜேந்தர் இயக்கிய முதல் திரைப்படமான ஒரு தலை ராகம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் ஷங்கர். இவர் நடித்த முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். மோகன்லால் அறிமுகமான மஞ்ச விரிச்ச பூக்கள் படத்தில் ஹீரோவாக நடித்து புகழின் உச்சிக்கு சென்ற ஒரு தலை ராகம் படம் குறித்து பல விஷயத்தை பேசி உள்ளார்.

Behind woods யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அவர், டி.ராஜேந்தர் இயக்கிய ஒரு தலை ராகம் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணமே அதிர்ஷ்டம் தான். அந்தப் படத்தில் நடிப்பதற்காக மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்கள். கடைசியில், டி ராஜேந்திரன் அவர்களின் என்னை தேர்வு செய்தார். அதற்கு காரணம் என்னுடைய நடை தான். நான் நடந்து வந்த போது, ராஜா போல இருந்ததால் இந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியாக வருவேன் என்று என்னை தேர்வு செய்தார். ஏனென்றால் ஒரு தலை ராகம் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ராஜா. ஒரு தலை ராகம் படத்தின் கதையை கூறிவிட்டு பாடலையும் பாடி காண்பித்தார்.

oruthalai ragam Shankar Keerthy suresh
Photo Credit:

ஒரு தலை ராகம் ஷங்கர்: முதல் திரைப்படமே எனக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்று கொடுத்தது அந்த படத்திற்காக நான் முதன் முதலில் வாங்கிய சம்பளம் 2500 ரூபாய். அந்தப் படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் நான் நடித்தேன். அந்த படங்களும் எனக்கு நல்ல பயிரை பெற்றுக் கொடுத்தன. அந்த காலத்திலேயே ஒரு தலை ராகம் நல்ல வசூலை அள்ளி 2 கோடியை வசூலித்தது என்று சொன்னார்கள். இந்த காலத்தில் அந்த படம் வந்து இருந்தால் வசூல் 500 கோடியாக இருந்து இருக்கும் என்றார்.

காதல் கிசுகிசு: தொடர்ந்து பேசிய ஷங்கர், நான் பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்து இருக்கிறேன். ஆனால், அனைவருடனும் 2,3 படத்தில் தான் நடித்து இருக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவுடன் 30 படத்திற்கு மேல் நடித்து இருக்கிறேன். இதனால், எனக்கும் அவருக்கும் காதல், விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று கிசுகிசு பரவியது. ஆனால், மேனகா, என் நெருங்கிய நண்பர் சுரேசை திருமணம் செய்துகொண்டார். இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

வில்லன் ரோல் : அதே போலத்தான் ஒரு தலை ராகம் படத்தில் என்னுடன் நடித்த ரூபாவுடன் காதல் என்று கிசு கிசு வந்தது. இதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவே இல்லை. என்னுடைய திருமணமும் காதல் திருமணம் தான். முதலில் காதலித்தோம் பின், பெற்றோரிடம் சொல்லி திருமணம் நடந்தது. என் மனைவி லண்டனில் டான்ஸ் ஸ்கூல் வைத்து இருப்பதால், நான் சில ஆண்டுகள் சினிமாவில் பிரேக் எடுத்துவிட்டு அங்கு சென்றுவிட்டேன். இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். நான் எல்லாவிதமான ரோலிலும் நடித்து விட்டேன். இப்போது, நெகட்டிவ் ரோலில் அதாவது வில்லன் கதாபாத்திரம் கிடைத்தால், உடனே ஓகே சொல்லிவிடுவேன் என ஒரு தலை ராகம் பட நடிகர் ஷங்கர் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X