twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒழுக்கம், மரியாதைக்கு பேர் போனது எங்க நிறுவனம் தான்.. ஏவிஎம் அருணா ஸ்பெஷல் பேட்டி!

    |

    சென்னை: ஏவிஎம் தயாரிப்பில் நடிகர் அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் தமிழ் ராக்கர்ஸ். இந்த படம் சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    சினிமாத்துறை பொறுத்தவரை ஒழுக்கம், மரியாதை, குடும்பம் ஆகிய மூன்றுக்கும் பெயர் போனது எங்கள் நிறுவனம் என்று ஏவிஎம் அருணா கூறியுள்ளார்.

    ஏவிஎம் நிறுவனம் பற்றியும், தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் சமீபத்தில் ஏவிஎம் அருணா நமது பிலிம்பீட் சேனலுக்கு அளித்த பேட்டியை இங்கு காணலாம்.

    தமிழ் தான் முக்கியம் என்றால் எங்களிடம் ஏன் வருகிறீர்கள்?..கோப்ரா டிரைலரால் கொந்தளிக்கும் ரசிகர்கள் தமிழ் தான் முக்கியம் என்றால் எங்களிடம் ஏன் வருகிறீர்கள்?..கோப்ரா டிரைலரால் கொந்தளிக்கும் ரசிகர்கள்

     பைரசியால் ஏற்படும் பாதிப்பு

    பைரசியால் ஏற்படும் பாதிப்பு

    கேள்வி: தமிழ் ராக்கர்ஸ் படத்தை நீங்கள் தயாரிக்க என்ன காரணம்?

    பதில்: நான் தயாரிப்பாளரின் பொண்ணு. எனக்கு பைரசி குறித்த விபரம் நன்றாக தெரியும். பைரசியால் ஏற்படுகின்ற விளைவுகள் என்ன என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அழுத்தமான கதையாக உருவானது தான் தமிழ் ராக்கர்ஸ். இந்த படத்தை எமோஷனலாக சொல்லி இருக்கோம். பைரசியால் ஏற்படும் பாதிப்பு குறித்து சினிமாத்துறையில் இருக்கின்றவர்களுக்கு நன்றாக தெரியும் என்றார்.

     ப்ரஷர் தெரியாது

    ப்ரஷர் தெரியாது

    கேள்வி: உங்கள் கொள்ளு தாத்தா உருவாக்கிய ஏவிஎம் பேனரில் நீங்கள் படம் தயாரிப்பதை எவ்வாறு கருதுகிறீர்கள்?

    பதில்: நான் சிறுவயதாக இருக்கும்பொழுதே ஏவிஎம் என்கின்ற பேனரின் பொறுப்பு, ஒழுக்கம் ஆகியவை எனக்கு நன்றாக தெரியும். தற்போது அந்த பொறுப்புணர்வு மிகவும் அதிகமாகியுள்ளது. தயாரிப்பாளராக எனக்கு ப்ரஷர் இருக்கிறது. ஆனால் அதை பேஷனாக செய்யும்பொழுது ப்ரஷர் தெரியாது என்றார்.

     வித்தியாசமானவர்கள்

    வித்தியாசமானவர்கள்

    கேள்வி: அபர்ணா, அருணா ஆகியோரில் யார் மூத்தவர்?

    பதில்: அபர்ணா, அருணா நாங்க இரண்டு பேரும் இரட்டையர்கள் . நான் தான் மூத்தவள். நான் வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான். ஸ்டெல்லா மேரிசில் படித்தேன். யு.கே. சென்று 2 வருடம் படித்தேன். நாங்க இரண்டு பேரும் வித்தியாசமானவர்கள். ஒரு சில விஷயங்களில் மட்டும் தான் ஒற்றுமையாக இருப்போம். வேலைகளை தனித்தனியாக பிரித்து தான் பார்ப்போம் என்றார்.

     5 லட்சம் பேர்

    5 லட்சம் பேர்

    கேள்வி: தமிழ் ராக்கர்ஸ் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: தமிழ் ராக்கர்ஸ் படத்தை டிஜிட்டல் இன்டஸ்ட்ரியாக காட்டியிருக்கோம். படத்தை எவ்வாறு வெளியிடுகிறார்கள் என்பது குறித்த கதை அல்ல. சினிமாத்துறையில் தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர், ரசிகன் ஆகியோர் பைரசியால் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அழுத்தமாக காட்டியிருக்கிறோம். படத்தில் எந்த இடத்திலும் சினிமாட்டிக் இருக்காது. எமோஷன் மூலம் ரசிகர்களை சென்றடைந்துள்ளோம் என்றார். இன்னும் சொல்லப்போனால் எந்த ஒரு தயாரிப்பாளரையும் குறிப்பிட்டு காட்டாமல், பொதுவாக தயாரிப்பாளர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தை காட்டியுள்ளார். இந்த காட்சியில் நடிகர் அழகம்பெருமாள் அருமையாக நடித்துள்ளார் என்றார்.

    ஒரு நல்ல கதையை, சிறந்த டெக்னாலஜியுடன் நாங்கள் தயாரிக்கிறோம். அந்த முழு டெக்னாலஜியும் ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு பகலாக நாங்கள் அனைவரும் உழைக்கிறோம். பணத்தை முதலீடு செய்கிறோம். ஒரு படம் தியேட்டரில் வெளியாகிறது என்றால் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும். ஒடிடி தளத்தில் வெளியானால் ஒடிடியில் பார்க்க வேண்டும். அப்போது சினிமாத்துறையில் உள்ள 5 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றார்.

     மெட்ரோ ரயில்

    மெட்ரோ ரயில்

    கேள்வி: ஏவிஎம் குளோப் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: எங்கள் பெரிய தாத்தா தயார் செய்த குளோப்பை, இத்தனை வருட காலமாக அப்பா பராமரித்து வந்தார். எங்களுக்கும் அதே பொறுப்பும், மரியாதையும் இருக்கிறது. காலத்திற்கேற்ப சென்னையும் வளர்ந்து வருகிறது. எங்கள் ஸ்டூடியோவை சுற்றி மெட்ரோ பாதை வருகிறது. இதுவும் வரவேற்கக்கூடியதாகும்.

    மிக்க நன்றி

    கேள்வி: ஏவிஎம் ஸ்டூடியோ இருந்த இடத்தில் சில கட்டிடங்கள் உருவாகியுள்ளதே...அது குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: எங்கள் தாத்தாவுடன் உடன் பிறந்தவர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மாற்றி விட்டார்கள். ஆனால் நாங்கள் இன்றும் அதே இடத்தில் ஸ்டூடியோ வைத்துள்ளோம். தயாரிப்பு பணியையும் மேற்கொண்டு வருகிறோம். சினிமாத்துறை பொறுத்தவரை ஒழுக்கம், மரியாதை, குடும்பம் ஆகிய மூன்றுக்கும் பெயர் போனது ஏவிஎம். நாங்களும் அதை செய்ய ஆசைப்படுகிறோம். தொடர்ந்து ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். அதற்கு மிக்க நன்றி என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

    English summary
    AVM Aruna Exclusive Interview: ஏவிஎம் தயாரிப்பில் நடிகர் அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் தமிழ் ராக்கர்ஸ். இந்த படம் சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சினிமாத்துறை பொறுத்தவரை ஒழுக்கம், மரியாதை, குடும்பம் ஆகிய மூன்றுக்கும் பெயர் போனது எங்கள் நிறுவனம் என்று ஏவிஎம் அருணா கூறியுள்ளார். ஏவிஎம் நிறுவனம் பற்றியும், தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் சமீபத்தில் ஏவிஎம் அருணா நமது பிலிம்பீட் சேனலுக்கு அளித்த பேட்டியை இங்கு காணலாம்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X