twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லா சொத்தையும் பாகிஸ்தான் கிட்ட விட்டுட்டோம்.. வருத்தத்தில் நிக்கி கல்ராணி!

    |

    சென்னை: தமிழில் டப்பிங் பேசுவதற்கு பயமாக உள்ளது என்று நடிகை நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார்.

    நடிகை ஜோதிகா போல் சினிமாத்துறையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஜெயிப்பது என்பது பெருமைப்படக்கூடிய விஷயம் என்று கூறியுள்ளார் நிக்கி கல்ராணி.

    நடிகர் ஆதிக்கும் & நடிகை நிக்கி கல்ராணிக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் இடியட் படத்தின் புரோமேஷன் நிகழ்ச்சியில், நமது பிலீம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி:

    மயக்க மாத்திரை கொடுத்து பலாத்காரம் செய்தார்..மலையாள நடிகர் மீது இளம் நடிகை பாலியல் புகார்!மயக்க மாத்திரை கொடுத்து பலாத்காரம் செய்தார்..மலையாள நடிகர் மீது இளம் நடிகை பாலியல் புகார்!

     பேயாக நான் வாழவில்லை

    பேயாக நான் வாழவில்லை

    கேள்வி: இடியட் படத்தின் வரவேற்பு எப்படியிருக்கிறது?

    பதில்: படத்தின் வரவேற்பு நன்றாக உள்ளது. இந்த படத்தை அனைவரும் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும் என்பது எனது விருப்பம். இந்த படத்தில் நான் மனநோயாளிக்கு சிகிச்சை பார்க்கும் டாக்டராக நடித்துள்ளேன். சிவா, கிங்ஸ்லி போன்றோர் நோயாளிகள். இந்த படத்தில் சின்ன எபிசோடில் படத்திற்கு திருப்புமுனையாக நான் பேயாக மாறுவேன். டார்லிங் படம் போன்று பேயாக நான் வாழவில்லை.

     பேய் என்பது கற்பனை

    பேய் என்பது கற்பனை

    கேள்வி: உங்களுடைய அழகான முகத்தை மேக்கப்மேன் பேயாக மாற்றும்பொழுது நீங்கள் வருத்தப்பட்டது உண்டா?

    பதில்: இல்லை. பேயாக மேக்கப் போட்டு நடிப்பது என்பது நடிப்பின் ஒரு பகுதி. பேய் என்பதற்கு ஒரு வடிவமோ, உருவமோ கிடையாது. நாம் யாரும் பேயை பார்த்ததில்லை. அது ஒரு கற்பனை நிறைந்த கதாபாத்திரம். இயக்குனர் என்ன மாதிரி நினைக்கிறாரோ அது மாதிரி நடிக்க வேண்டும். இது போன்று நடிப்பது தான் ரொம்ப கஷ்டம். இந்த நடிப்பு ரொம்ப எக்சைஸ்மென்ட் ஆக இருக்கும். மேக்கப் எல்லாம் ஒரு பிரச்னை கிடையாது.

     அஜித் & ஷாலினியை பிடிக்கும்

    அஜித் & ஷாலினியை பிடிக்கும்

    கேள்வி: திரையுலகில் உங்களை கவர்ந்த தம்பதியினர் யார்?

    பதில்: சூர்யா & ஜோதிகா, அஜித் & ஷாலினி, ரஜினிகாந்த் & லதா, மகேஷ்பாபு &அமிர்தா ஆகியோரை எனக்கு ரொம்ப பிடிக்கும். இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். ஜோதிகா போன்றோர் திருமணத்திற்கு பிறகு தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமாத்துறையிலும் சாதிப்பது என்பது ரொம்ப பெருமைப்படக்கூடிய விஷயமாகும்.

     காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்க்க ஆசை

    காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்க்க ஆசை

    கேள்வி: சமீபத்தில் எந்த திரைப்படம் பார்த்தீர்கள்?

    பதில்: தற்போது நிறைய ஒடிடி தளங்கள் உள்ளன. நிறைய படங்கள் வெளிவருகிறது. சில படங்களுக்கு நல்ல ரிவ்யூ வருகிறது. அவ்வாறு வரக்கூடிய படங்களை தவறாமல் பார்த்து விடுகிறேன். தற்போது ஆர்ஆர்ஆர் படம் பார்த்தேன். நன்றாக இருந்தது. காஷ்மீர் பைல்ஸ் படம் நான் இன்னும் பார்க்கவில்லை. எனது அம்மா, அப்பா பார்த்து விட்டார்கள். படம் சென்னையில் ரிலீசாகவில்லை. அந்த படத்தை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இந்தியா & பாகிஸ்தான் பிரிவினையின்போது சிந்தி பகுதியில் இருந்து எனது தாத்தா & பாட்டி இருவரும் அனைத்து சொத்துக்களையும் பாகிஸ்தானிடம் விட்டு விட்டு இந்தியாவிற்கு வந்தனர். அதன் வலி எவ்வாறு இருக்கும் என்பதை பல தடவை என்னிடம் கூறியுள்ளனர். காஷ்மீர் பைல்ஸ் படத்தின் டிரைய்லர் பார்த்தேன். அப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக உழைத்துள்ளார்கள்.

     இடியாட்டிக் கேரக்டர்

    இடியாட்டிக் கேரக்டர்

    கேள்வி: இடியட் படத்தில் இடியட் என்று நீங்கள் யாரை கூற விரும்புகிறீர்கள்?

    பதில்: நான் சொல்ல மாட்டேன். சொல்லவும் முடியாது. அப்படி நான் சொல்லவும் கூடாது. இந்த கதையில் எல்லா கதாபாத்திரத்திலும் ஏதோ ஒரு இடியாட்டிக் கேரக்டராக இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு அவர்களுடைய பழக்கவழக்கம், நடவடிக்கை போன்றவைகளில் இடியாட்டிக் காணப்படும். அதனால் தான் படத்திற்கு இடியட் என்று தலைப்பு வைத்துள்ளோம் என்றார்.

    கேள்வி: இயக்குனர் ராம்பாலா குறித்து நீங்கள் கூற விரும்புவது

    பதில்: இயக்குனர் ராம்பாலா ரொம்ப பாவம். அவர் தொப்பி போட்டுக் கொண்டு சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் நடப்பது காமெடியாக இருக்கும். அவர் டென்ஷனில் வேலையை பார்த்து விட்டு அப்படியே போய் விடுவார். ரொம்ப அமைதியானவர். இனிமையானவர், ஜாலியானவர்.

     தமிழ் நன்றாக பேசுகிறேன்

    தமிழ் நன்றாக பேசுகிறேன்

    கேள்வி: படத்தில் வசனம் பேசும்பொழுது எங்கு நீங்கள் சிரமப்பட்டீர்கள்?

    பதில்: முன்பு மாதிரியெல்லாம் நான் கிடையாது. இப்பொதெல்லாம் நான் நன்றாகவே தமிழில் பேசுகிறேன். ஆனால் டப்பிங் பேசுவதற்கு தான் பயமாக உள்ளது. தமிழ் பேசி தவறாகி விடுமோ என்ற பயமும், நம்பிக்கை இல்லாதது தான் காரணம். டப்பிங்கில் நான் சொதப்பினால் எனது நடிப்பு வீணாகி விடும். அதனால் நான் டப்பிங் பேசுவதில்லை. எனக்கு ரவீணா டப்பிங் நன்றாக பேசுகிறார்.

    33 படங்கள் நடித்த விட்டேன்

    கேள்வி: உங்களது திரைப்பயணம் குறித்து...

    பதில்: நான் முதன்முதலில் 1983 என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தேன். தற்போது இடியட் படத்தில் நடித்ததுடன் சேர்த்து 33 படங்கள் நடித்து விட்டேன். எந்தவொரு எதிர்பார்ப்பு இல்லாமல், ஓடிக் கொண்டிருக்கிறேன். நூறு சதவீதம் உழைத்து இருக்கிறேன். இதை நினைத்து பார்க்கும்பொழுது ரொம்ப பெருமையாகவும், சந்தோஷமாகவும் உள்ளது என்றார்.

    இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/pqzbQwBQAyc இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

    English summary
    Our family lost properties after the India-Pakistan Seperation Says Nikki Galrani in Exclusive Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X