கமல் படம்... என்னத்தச் சொல்றது போங்க! - ஓவியா கடுப்பு

By Shankar

Oviya
'பெரிய நடிகர், பெரிய பேனர், பெரிய படம்... நமக்கும் நல்ல ரோல் இருக்கும்னுதான் நடிச்சேன்.... ஆனால் இப்போ... ஏன் அந்தப் படத்துல நடிச்சேன்னு துக்கம் விசாரிக்கிறாங்க... என்னத்தச் சொல்றது போங்க!' என்கிறார் ஓவியா.

களவாணி படம் மூலம் பிரபலமானவர் ஓவியா. அப்படத்துக்கு பின் நிறைய பட வாய்ப்புகள் வந்தன. கமலின் மன்மதன் அம்பு படத்தில் நடிக்கவும் அழைப்பு வந்தது. கமல் படம் என்பதால் உடனே சம்மதித்தார். வேறு பட வாய்ப்புகளை அப்புறம் பார்க்கலாம் என்று கூறி நிறுத்தியும் வைத்தார்.

ஓவியாவை வைத்து நிறைய காட்சிகள் எடுத்திருக்கிறார்கள். அதனால் இந்தப் படம் தனக்கு பெரிய பெயர் வாங்கித் தரும் என்று கூறிவந்தார் ஓவியா.

ஆனால் படம் ரிலீசான போது அவர் நடித்த பெரும் பகுதி காட்சிகள் இல்லை. வெட்டி நீக்கப்பட்டு இருந்தன. ஒரு காட்சியில் மாதவனைப் பார்த்து, பஜ்ஜி சாப்பிடறீங்களா என்று கேட்பார். இதுதான் அவரது காட்சி. இது ஒன்றுதான் படத்தில் அவர் பேசிய வசனம்!

இதனால் ஏமாற்றம் அடைந்தார். நெருக்கமானவர்கள் எல்லாம் அவரிடம் ஏன் இப்படி ஆச்சு என துக்கம் விசாரிக்கிறார்களாம்.

இதுபற்றி அவரிடம் கேட்டபோதுதான் முதல் பாராவில் நீங்கள் படித்ததைச் சொல்லி புலம்பினார்.

இனி இந்த மாதிரி பெரிய படங்களைப் பார்த்து ஏமாறாமல், தனக்கான பாத்திரத்தைத் தேர்வு செய்ய இந்த அனுபவம் உதவும் என்றார். அதுதான் சினிமா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X