"கெட்டப்பய சார் இந்த கபாலி..", மனம் திறந்த இயக்குநர் ரஞ்சித்!

By Veera Kumar

சென்னை: கபாலி திரைப்படத்தில் ரஜினியின் கேரக்டர் எப்படிப்பட்டது, பஞ்ச் டயலாக்குகள் உள்ளனவா என்பது குறித்தெல்லாம், ஆங்கில பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் பேட்டியின் சில முக்கிய அம்சங்கள் இவைதான்: சவுந்தர்யா ரஜினிகாந்த் என்னை தொலைபேசியில் அழைத்து, ஸ்கிரிப்ட் கேட்டார். அவரிடம் 2 கதைக்கருக்களை தெரிவித்தேன். அதில் ஒன்றுதான் கபாலியாக உருவாகியுள்ளது. மெட்ராஸ் படம் பாத்துவிட்டு ரஜினி சார் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த முன்னுரையோடு, சவுந்தர்யா ரஜினி சாரிடம், என்னைப் பற்றி சொல்லி, கதையை கூறி சம்மதம் வாங்கிவிட்டார்.

வயதுக்கேற்றது

வயதுக்கேற்றது

கபாலி படத்தில் நடிக்க ரஜினி, சம்மதிக்க முக்கியமான காரணங்களில் ஒன்று, அவர் அதில் வெள்ளை தாடி கெட்-அப்பில் வருவதுதான். ரஜினியை பொறுத்தளவில் தனது உண்மையான வயதை காண்பிக்கும் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார். இந்த படம் அந்த விருப்பத்தை நிறைவேற்றிவிட்டது.

ரஜினியை பார்த்து பயம்

ரஜினியை பார்த்து பயம்

ரஜினிசாரை முதலில் பார்த்தபோது, உற்சாக உணர்வை தாண்டி பயம் என்னை சூழ்ந்துகொண்டது. ரஜினியை வைத்து எப்படி இயக்கப்போகிறோம் என்று அஞ்சினேன். நான் சூட்டிங் வரும்முன்பு, எனது ஸ்டைலில் கதையை நகர்த்தும்வகையில், ஹோம்வொர்க் நிறையவே செய்வேன். ஆனால் ரஜினிகாந்த்துக்கு உள்ள இமேஜையும் மனதில் வைத்துதான் கபாலி நகர்கிறது. கடந்த படங்களில் (அட்டகத்தி, மெட்ராஸ்) நான் செய்த சில தவறுகளை திருத்திக்கொண்டு இப்படத்திற்காக மெனக்கெடுகிறேன்.

மெசேஜ் கேரண்டி

மெசேஜ் கேரண்டி

மெட்ராஸ் திரைப்படத்தில், ஒரு சமூக கருத்து இருந்ததை போலவே, கபாலியிலும் இருக்கும். சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். அந்த சினிமாவை பார்த்துவிட்டு, ஜஸ்ட் லைக் தட் என மக்கள் கடக்க கூடாது. ஒரு விவாதத்தை சினிமா உருவாக்க வேண்டும். கபாலி மட்டுமல்ல, இனி வரும் எனது அனைத்து படங்களிலும் ஒரு மெசேஜ் கண்டிப்பாக இருக்கும்.

வடசென்னை ரவுடி

வடசென்னை ரவுடி

வடசென்னையில் ரவுடி என அழைக்கப்படுபவர்கள் உண்மையிலேயே கெட்டவர்கள் கிடையாது. மக்களுக்கு நல்லது செய்பவர்கள் அதிகம். அவர்கள் செயல்பாடு முரட்டுத்தனமாக வெளியில் தெரியும் அவ்வளவுதான். ரஜினிகாந்த் கேரக்டரும் கபாலியில் அப்படித்தான் இருக்கும். நான் இயக்குநர் மகேந்திரனின் மிகப்பெரிய விசிறி.

திரையில் ஒரு அனல்

திரையில் ஒரு அனல்

மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் திரைப்படத்தில் காளி கதாப்பாத்திரமாக நடித்த ரஜினியிடம் ஒரு முரட்டுத்தனம் இருக்கும். அந்த கேரக்டரில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன். ஒரு கையை இழந்த நிலையிலும், காளி கடும் கோபக்காரராகவே செயல்படுவார். திரையையே ஒரு அனலாக வைத்திருக்கும் காளி கதாப்பாத்திரம். அதுபோலத்தான் கபாலியில் ரஜினி கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேர கேட்டாலே அதிருமில்ல

பேர கேட்டாலே அதிருமில்ல

முள்ளும் மலரும் திரைப்படத்தில் காளி பேசும் ஒரு பஞ்ச் வசனம் "ரெண்டு கை, ரெண்டு காலு போனா கூட இந்த காளி பொழச்சிக்குவான் சார், கெட்ட பையன் சார், அவன்". கபாலியும் அப்படி ஒரு கேரக்டர்தான். கபாலியில் பஞ்ச் வசனம் என்று தனியாக எதுவும் வைக்கப்படவில்லை. கபாலி என்ற பெயரே பெரிய பஞ்ச்தான். கதை பஞ்ச் டயலாக்குக்கான, தேவையை உருவாக்கவில்லை. இவ்வாறு ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X