அந்த நடிகை ரொம்ப கேள்வி கேட்டாங்க.. இன்னொருத்தருக்கு எதுவுமே வரல.. பா. ரஞ்சித் ஓபன் பேட்டி!

சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள சியான் விக்ரமின் தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. பா. ரஞ்சித் படத்துக்கு போட்டியாக ரெட் ஜெண்ட் மூவிஸ் தயாரிப்பில் அருள்நிதி நடித்துள்ள டிமான்டி காலனி 2 திரைப்படம் வெளியாகிறது.

மேலும், கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா படமும் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் இந்த ஆண்டு தங்கலான் மற்றும் கங்குவா என இரண்டு பெரிய படங்கள் வெளியாகின்றன.

Thangalaan Pa Ranjith Malavika Mohanan


தங்கலான் படத்தின் புரோமோஷன் சூடு பிடித்துள்ள நிலையில், அந்த படத்தில் நடித்த பார்வதி குறித்தும் மாளவிகா மோகனன் குறித்தும் பா. ரஞ்சித் பேசியுள்ள பேட்டி வீடியோ தீயாக பரவி வருகிறது.

விக்ரமின் உழைப்பு: தங்கலான் படம் கோலார் தங்க வயலில் நடைபெற்ற படமாக உருவாகி உள்ளது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள நடிப்புக்கு அவருக்கு ஏகப்பட்ட விருதுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்து ஒவ்வொரு படத்திலும் நடித்து வரும் விக்ரம் இந்தப்படத்தில் அதுக்கும் மேல உழைப்பை போட்டு நடித்துள்ளார்.

பார்வதி ரொம்ப கேள்வி கேட்டாங்க:
தங்கலான் படத்தின் ஷூட்டிங்கின் போது பா. ரஞ்சித் என்னிடம் வந்து பேசக்கூட மாட்டாரு, அவரோட அசிஸ்டண்ட் டைரக்டர்கள் தான் ரொம்ப நல்லவங்க என பார்வதி பேச, உடனே பதிலளித்த பா. ரஞ்சித் தங்கலான் படத்தில் என்னிடம் அதிகம் கேள்விக் கேட்டதே பார்வதி தான். அதனால், தான் அவங்களிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிடுவேன். பூ படத்தில் இருந்தே அவங்க நடிப்பு பிடிக்கும். இந்த கேரக்டரில் அவங்க தான் நடிக்கணும் என நினைத்தேன். கச்சிதமாக நடித்துக் கொடுத்தார் என்றார்.

மாளவிகா மோகனன் ரொம்ப கஷ்டப்பட்டாங்க: ஆரத்தி கதாபாத்திரத்தில் நடிக்க மாளவிகா மோகனன் சரியாக இருப்பார் என நினைத்தேன். லுக் டெஸ்ட் எல்லாம் செய்தோம் நினைத்தது போலவே ஆரத்தியாக மாறி விட்டார். ஷூட்டிங் போன போது தான் அவருக்கு ஸ்டன்ட் காட்சிகளில் நடிப்பது சிரமம் என்பதே புரிந்தது. ரொம்பவே கொடூரமாக நடந்துக் கொண்டேன். கம்ப வச்சு சுத்துறாங்க, சண்டை போடுறாங்க, எதுவுமே சரியா வரல. ஆனால், அவங்களோட இன்வால்வ்மெண்ட் ரொம்பவே பிடித்தது.

சிலம்பம் பயிற்சி: சிலம்பம் வாத்தியாரை வரவழைத்து அந்த கதாபாத்திரத்துக்குத் தேவையான சிலம்பம் பயிற்சி மற்றும் சண்டை பயிற்சியை எல்லாம் கொடுத்து அவரை பிசிக்கலாக டிரெய்ன் பண்ண பிறகு தான் ஷூட்டிங் செய்தோம். அதன் பின்னர், நடிப்பில் மிரட்டி விட்டார் மாளவிகா மோகனன் என பா. ரஞ்சித் தங்கலான் படத்தில் நடித்த 2 நடிகைகளையும் பாராட்டித் தள்ளியுள்ளார்.

தங்கலான் தப்பிக்குமா?: சியான் விக்ரமுக்கும் மாளவிகா மோகனனுக்கும் இடையே தான் படத்தில் அதிக சண்டைக் காட்சிகள் இருக்குமா? என்கிற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் எழத்தான் செய்கிறது. பீரியட் கதையை மட்டுமே வைத்து படத்தை உருவாக்காமல் மக்களிடம் இருந்த Myth (புனைவு) கதைகளையும் மிக்ஸ் செய்து இந்த படத்தை உருவாக்கியிருப்பதாக பா. ரஞ்சித் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X