»   »  பயப்பிரியா!

பயப்பிரியா!

Subscribe to Oneindia Tamil

தெனாலி கமலுக்கு கண்டெதல்லாம் பயம். அதே போல பத்மப்பிரியாவுக்கு விருதுன்னாலே ரொம்பப் பயமாம்!

சேரனின் சிறப்பான கண்டுபிடிப்பு பத்மப்பிரியா. முதல் படத்திலேயே அடடே என்று ஆச்சரியப்பட வைத்த பத்மப்பிரியா, 2வது படமானபட்டியலில் கெட்ட ஆட்டம் போட்டு ரசிகர்களின் மனங்களில் ரகளை செய்தார்.

இரண்டுக்கு மேல் வேண்டாம் என்ற வாசகத்தை வேறு மாதிரியாக நினைத்துக் கொண்டாரோ என்னவோ தமிழில் 2 படங்களுடன் காணாமல்போனார் பத்மப்ரியா.

தமிழில் வாய்ப்பிழந்த பத்மா, மலையாளத்திற்குத் தாவினார். அங்கு அமோக வரவேற்பு. நடிப்போடு, சரிவிகித சமானத்தில் கிளாமரையும் கலந்துபத்மா கொடுத்த காக்டெயிலுக்கு வல்லிய வரவேற்பு மலையாளத்தில்.

இதனால் தொடர்ந்து மலையாளப் படங்களில் நடித்தார் பத்மா. மம்முட்டியுடன் கருத்த பக்ஷிகள், எஸ்.யுவர் ஆனர், வடக்குநாதன் ஆகியபடங்களில் அடுத்தடுத்து நடித்தார். 3 படங்களிலும் அவருக்கு நிறைய விருதுகளும் கிடைத்தன. கடந்த ஆண்டுக்கான கேரள விமர்சகர்கள் விருதும்பத்மாவுக்கு கிடைத்தது.

சின்ன இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் தமிழ் பக்கம் வந்துள்ளார் சத்தம் போடாமல். படத்தின் பெயரும் சத்தம் போடதே. வசந்த்படத்தை இயக்குகிறார். பத்மாவுக்கு நல்ல நடிப்புக்கான வாய்ப்பு இப்படத்தில் உள்ளதாம்.

ஒரு ஃபைன் மார்னிங் ஷூட்டிங் ஸ்பாட்டில் கும்மென அமர்ந்திருந்த பத்மாவைப் பார்த்து அப்புறம் என்றோம். நல்லா இருக்கேன் என்று நீண்டவாய் விரிய வரவேற்றார் பத்மா. மலையாளத்தில் மட்டும்தான் விருது வேட்டையா, தமிழில் எண்ணம் இல்லையா என்றோம்.

விருது கிடைப்பதில் சந்தோஷம்தான். ஆனால் மறுபக்கம் பயந்து வருகிறதே! விருது கிடைத்த பின்னர் நம்மிடம் நிறைய எதிர்பார்ப்பார்கள்.விருதுக்குரியவளாக தக்க வைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும்.

மலையாளத்தில் விருது பெற்றவர்களுக்கு தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் தமிழில் அப்படி இல்லையே!

விருது பெற்றவர்களுக்கு இங்கு கமர்ஷியல் வாய்ப்புகள் வராது. ஆர்ட் படங்களில் நடிக்கத்தான் கூப்பிடுவார்கள். இதனால்தான் தமிழில் விருதுஎன்றாலே பயமாக இருக்கிறது என்கிறார்.

மலையாளத்தில் நான் நடித்த கருத்த பக்ஷிகள் படத்தில் காமெடியுடன், சோகமும் கலந்து நடித்திருந்தேன். இப்போது சத்தம் போடாதே படத்திலும்எனக்கு நல்ல கேரக்டர். உண்மையில் சொன்னால் விருதுக்குரிய கேரக்டர்தான்.

எனக்கு நிச்சயம் விருது உண்டு என்று யூனிட்டார் பாராட்டுகிறார்கள். கிடைத்தால் சந்தோஷம்தான் என்று புன்னகை மலர்ந்தார் பத்மா.

கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து நடிங்க மேடம்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil