»   »  வீராசாமி வில்லி பத்மா!

வீராசாமி வில்லி பத்மா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வீராசாமியில், ஜகஜால ராஜேந்தரை எதிர்த்து அட்டகாசமாக வில்லத்தனம் செய்த, பத்மா நாராயணன்,ஹீரோயின், வில்லி என எந்த கேரக்டர் கொடுத்தாலும் பின்னி எடுக்க ரெடி என்று அனாயசமாக கூறுகிறார்.

கும் உயரம், கன் அழகு என அழகிய ராட்சசியாக இருக்கிறார் பத்மா. வடக்கத்தி அப்பாவுக்கும், தெக்கத்திஅம்மாவுக்கும் பிறந்தவர் பத்மா. சாப்ட்வேட் என்ஜீனியரான பத்மா, மாடலிங் செய்து கொண்டு சமர்த்தாகஇருந்தவர்.

50க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்து நடிப்பில் கொஞ்சம் போல கொட்டை போட்டவர். இத்தனைவிளம்பரங்களில் நடித்திருந்தாலும் கூட சினிமா மீது இந்த ஜில் அழகிக்கு ஈடுபாடு வரவில்லையாம்.அப்போதுதான் ராஜேந்தரிடமிருந்து அழைப்பு வந்ததாம்.

பத்மா, வீராசாமியில் நடிக்க ரெடியா, சூப்பர் வில்லி வேடம், ஓ.கே.வா என்று தலையைச் சிலுப்பியபடி கேட்டராஜேந்தருக்கு மறுப்பு தெரிவிக்கும் தைரியம் பத்மாவுக்கு இல்லையாம்.

சரி என்று கூறிய அவர் ராஜேந்தரை நேரில் பார்த்து தனது கேரக்டர் குறித்து கேட்டாராம். அதற்கு ராஜேந்தர்,எல்லா வில்லிகளும் வயசானவங்களாதான் இருக்காங்க. ஆனால் அசத்தல் அழகோடு உள்ள நீ என் படத்தில்வில்லியாக நடித்தால் சூப்பராக பிக்கப் ஆகிடுவாய் என்று கூறியுள்ளார் ராஜேந்தர்.

அவர் பேசியதைக் கேட்ட பத்மாவுக்கு தனது கேரக்டர் மீது நம்பிக்கை வந்து விட்டதாம். நீங்க எப்படி நடிக்கச்சொன்னாலும் நான் ரெடி சார் என்று கூறி விட்டாராம்.

வீராசாமி கொஞ்சம் லேட்டாக வந்து விட்டது. திமிரு படத்துக்கு முன்பு வந்திருந்தால் ஷ்ரேயா ரெட்டியைத்தூக்கிச் சாப்பிட்டிப்பேன் என்று ஏக்கத்தோடு கூறுகிறார், எக்குத்தப்பாக இருக்கும் பத்மா.

ராஜேந்தரை எப்படிச் சமாளித்தீர்கள் (ஷூட்டிங்கில்தான்!)

அய்யோ, அத்தனை வேலையையும் ராஜேந்தர் சாரே இழுத்துப் போட்டுச் செய்கிறார். அவருக்கு டென்ஷன்வந்தால் அவ்வளவுதான். அந்த நேரத்தில் தாறுமாறாக திட்டி விடுவார். ஆனால் அடுத்த விநாடியே குழந்தைபோல மாறி நம்மிடம் சமாதானமாகப் பேசிடுவார்.

ஆனால் பத்மா ஒரு நாள் கூட ராஜேந்தரிடம் திட்டு வாங்கியதில்லையாம்.

வசனம் பேசும்போதுதான் கொஞ்சம் தடுமாறி விட்டாராம் பத்மா. காரணம், ராஜேந்தரின் அடுக்கடுக்கானவசனங்கள். இருந்தாலும் அம்மாவிடம் கொஞ்சம் கொஞ்சம் தமிழில் பேசிய அனுபவம் இருந்ததால்,எப்படியோ சமாளித்து விட்டாராம். ராஜேந்தர்தான் தமிழை எப்படிப் பேச வேண்டும் என்றும் சொல்லிக்கொடுத்தாராம்.

பத்மாவுக்கு இன்னொரு பெயரும் உண்டாம். அதாவது சோனா என்பதுதான் அவரது ஒரிஜினல் பெயராம்.நல்லா பாடுவாராம், வீணையை எடுத்தால் பின்னி எடுத்து விடுவாராம். இளையராஜா பாட்டு என்றால்உயிரையே விட்டு விட ரெடியாம்.

அம்மணிக்கு பிடித்த இன்னொரு விஷயம். நாய்! நடிகைகளுக்கு நாய்களைப் பிடிப்பதில் ஆச்சரியம்இல்லைதான். ஆனால் பத்மாவோ பெரிய நாய் வெறியையாம். இதுவரை 45 நாய்களை வளர்த்துள்ளாராம்.எல்லா நாய்களுமே பத்மா மீது உயிராக இருந்தனவாம்.

அடுத்தடுத்து வில்லிதானா? அய்யோ அப்படியெல்லாம் இல்லை சார். ராஜேந்தர் சாரே தனது அடுத்த படத்துலஎன்னை ஹீரோயினாக்குறதா சொல்லியிருக்காரு. நானும் வில்லி, ஹீரோயின் என எதையும் விடுவதாகஇல்லை.

அடுத்து நான் உனது விழியிலே, இது காதலாகிறது என இரு படங்களில் நடிக்கப் போகிறேன், டாக்ஸ் ஆர்கோயிங் ஆன் என்கிறார் பத்மா.

பத்மாவுக்கு கிளாமர் காட்டுவதில் கொஞ்சம் கூட தயக்கம் கிடையாதாம். தேவைப்பட்டால் கும்மாக கவர்ச்சிகாட்ட நான் ரெடி! ஆனாலும் அதில் அசிங்கம் இருக்காது என்று கிளப்பலாக கூறுகிறார் பத்மா.

பப்பப்பா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil