»   »  உருக எல்லாம் முடியாது: பத்மப்பி>யா

உருக எல்லாம் முடியாது: பத்மப்பி>யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் என்னால் உருகி உருகி ஹீரோவை காதலித்துக் கொண்டிருக்க முடியாது என்கிறார் பத்மப்பிரியா.

தவமாய் தவமிருந்து, பட்டியல் என இரண்டு படங்களோடு காணாமல் போய் விட்ட பத்மப்பிரியா இப்போதுமலையாளத்தில் நிறையப் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் கிளாமர் பாதைக்கு மாற பட்டியல் மூலம் .ன்னோட்டம் பார்த்தார் பத்மா. ஆனால் அவர் எதிர்பார்த்ததுபோல வரவேற்பு கிடைக்கவில்லை, மாறாக விமர்சனங்களே எழுந்தது.

இதனால் தமிழில் புதுப் பட வாய்ப்பு வராமல் போகவே, தனது தாய் மொழியான மலாையளத்துக்குத்தாவிவிட்டார். அங்கு விதம் விதமான வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்த பத்மா, மலையாளத்தில்கூடுதல் கிளாமரோடு நடிப்பதாக செய்தி கிளம்பியது.

என்ன மேட்டர் என்று கேட்க பத்மாவைப் பிடித்தோம். மலையாளத்தில் ஓவர் கிளாமராமே என்று கேட்கஆரம்பித்தவுடனேயே, தனது டிரேட் மார்க் மூக்கு விடைக்கும் புன்னகையுடன் மறுத்தார்.

அப்படியெல்லாம் கிடையாதுப்பா. தமிழிலும் சரி, மலையாளத்திலும் சரி கிளாமரை தனி டிராக்காக செய்யும்எண்ணம் எனக்கு இல்லை. கேரக்டரோடு சேர்ந்த கிளாமர் என்றால் எனக்கு ஓ.கே. அப்படித்தான் இதுவரைநடித்து வருகிறேன் என்கிறார் பத்மா.

மலையாளத்தில் மாடர்ன் பொண்ணாக நடித்துள்ளேன். அதை கிளாமர் ரோல் என்று கூற முடியாது. அந்தந்தமொழியின் கலாச்சாரம் கெடாமல் நடிப்பதுதான் எனக்குப் பிடிக்கும். அப்படித்தான் நடிக்கிறேன்.

சரி தமிழுக்கு மறுபடியும் எப்போ விஜயம் என்றால், நிறையக் கதைகளைக் கேட்டு விட்டேன். ஒன்றுமேபிடிக்கவில்லை. எல்லாக் கதையிலும், ஹீரோவை விரட்டி விரட்டி காதலித்தும் உருகும்படியான கேரக்டர்கள்தான்வருகின்றன. அதில் எனக்கு உடன்பாடில்லை.

அதை விட முக்கியமாக தேவையில்லாமல் கிளாமரைத் திணித்து விடுகிறார்கள். அப்படியெல்லாம் என்னால்நடிக்க முடியாது. இப்போது சத்தம் பாடாதே என்ற படத்தில் நடித்து வருகிறேன். இதில் எனக்கு வித்தியாசமானவேடம் என்றார் பத்மா.

பத்மாவின் அடுத்த இலக்கு டைரக்ஷனாம். ஏற்கனவே தவமாய் தவமிருந்து படத்தில் நடித்தபோது சேரனிடமும்,பின்னர் பட்டியல் படத்தில் நடித்தபோது, விஷ்ணுவர்த்தனிடமும் டைரக்ஷன் குறித்த நுனுக்கங்களை கற்றுக்கொண்டாராம்.

இப்போது தனியாகவும் பல மேட்டர்களை கற்று வைத்துள்ளாராம். மதலில் குறும்படம் ஒன்றை இயக்கப்போகிறாராம். அதற்குக் கிடைக்கும் வரவேற்பு பிளஸ் அனுபவத்தை வைத்து பெ>ய படத்தை இயக்கப்போகிறாராம்.

அழகான இயக்குனர், படமும் அழகாத்தான் இருக்கும்..!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil