பத்மப்ரியா.. கிளாமருக்கு ரெடி தவமாய் தவமிருந்து படத்தில் பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி பாவம் காட்டிய பத்மப்ரியா படு வெரமான பார்ட்டியாக இருப்பார்போலிருக்கிறது. அடுத்து கிளாமரிலும் புகுந்து விளையாடத் தயாராகி வருகிறார்.அக்மார்க் தமிழ்ப் பெண்ணான பத்மப்ரியா பெங்களூரில் வளர்ந்தவர். இவரது பெற்றோர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.அதனால் தமிழில் பேசத் தெரியும். ஆனால் கேரளா, கர்நாடகா என வேறு இடங்களில் வளர்ந்து விட்டதால் தமிழ் எழுதப்,படிக்கத் தெரியாதாம்.தமிழ் தவிர, பெங்காலி, இந்தி, தெலுங்கு, பஞ்சாபி என பல மொழிகளும் இவருக்கு அத்துப்படி. (தவமாய் தவமிருந்து படத்தில்இவரே டப்பிங்கும் பேசியுள்ளார்).இவரது தாத்தா ராமசுப்ரமணிய அய்யர், புகழ்பெற்ற இசைக் கலைஞர். சில இந்திப் படங்களுக்கு மியூசிக் போட்டவராம். அவர்வழி வந்த இசைப் பயிற்சியால் கொஞ்சம் நல்லாவே பாடுவாராம் பத்மா.எம்.பி.ஏ. படித்துள்ள பத்மாவுக்கு படிப்பை முடித்தவுடன் தெலுங்கில் உருவான தமிழ்ப் படமான காசியின் ரீ-மேக்கில் நடிக்கவாய்ப்பு வந்ததாம். அது தான் இவரது முதல் படம்.அப்புறம் மலையாளத்தில் மம்முட்டியுடன் காழ்ச்சா என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து அவருடன் ராஜ மாணிக்கம் என்றபடத்திலும் நடிக்க, அதுவும் சூப்பர் ஹிட். இப்படியாக மலையாளத்தில் முதல் இரு படங்களிலேயே மிக நளினமாக நடித்த பத்மா,சேரனின் கண்ணில் பட தவமாய் தவமிருந்து ஹீரோயின் ஆகிவிட்டார்.இந்தப் படத்தின் சூட்டிங்கின்போதே பத்மப்ரியா கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.பெரிய ரவுண்டு வருவார் என்று ஆருடம் கூறினார்கள். அதை நிரூபிப்பது போல, தவமாய் தவமிருந்து படம் வெளியாகிஅவருக்கு மிக நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.படம் தந்த பிரபலத்தால் மளமளவென்று புதிய வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன. அதில் இப்போது பட்டியல் என்றஒரு தமிழ்ப் படத்தில் மட்டும் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளார் பத்மா. மோகன்லாலுடன் வடக்கும் நாதன் என்ற மலையாளப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பத்மாவைதமிழின் இரு பெரிய நிறுவனங்களும் அணுகியுள்ளன.நடிப்பு தவிர இவரது இன்னொரு ஆர்வம் இயக்கமாம். விரைவிலேயே ஒரு குறும்படத்தை இயக்கப் போகிறாராம். இதற்கு சேரன்தான் உதவபி போகிறாராம். இதற்காக சேரனிடம் ஒரு படத்தில் அஸிஸ்டெண்டாக ஒர்க் பண்ணவும் திட்டமிட்டிருக்கிறாராம்பத்மப்ரியா.இதற்கிடையே ஹோம்லி ரோல்கள் மட்டுமல்ல, கிளாமராகவும் நடிக்க நான் தயார் என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்பத்மப்ரியா.கிளாமர் காட்டாவிட்டால் போட்டியை சமாளிக்க முடியாது என்று சிலர் அட்வைஸ் தந்துள்ளதால், கவர்ச்சியாக நடிக்க நான் ரெடிஎன படு தெம்பாக கூறி, சக போட்டியாளினிகளை மிரட்டியிருக்கிறார் பதமப்ரியா.எல்லாம் சரி பத்மா, இம்புட்டு குண்டா இருக்கீங்களே என்று இழுத்தால், அது ஒன்னும் பிரச்சினை இல்லை. நாளைக்கே என்னால்வெயிட்டை குறைத்து விட முடியும். கொஞ்சம் குண்டாத்தான் இருக்கேன், இதை நான் சொல்லவில்லை, மத்தவங்கதான்சொல்றாங்க. அவங்களுக்காக (!!

By Staff
தவமாய் தவமிருந்து படத்தில் பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி பாவம் காட்டிய பத்மப்ரியா படு வெரமான பார்ட்டியாக இருப்பார்போலிருக்கிறது. அடுத்து கிளாமரிலும் புகுந்து விளையாடத் தயாராகி வருகிறார்.

அக்மார்க் தமிழ்ப் பெண்ணான பத்மப்ரியா பெங்களூரில் வளர்ந்தவர். இவரது பெற்றோர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.அதனால் தமிழில் பேசத் தெரியும். ஆனால் கேரளா, கர்நாடகா என வேறு இடங்களில் வளர்ந்து விட்டதால் தமிழ் எழுதப்,படிக்கத் தெரியாதாம்.

தமிழ் தவிர, பெங்காலி, இந்தி, தெலுங்கு, பஞ்சாபி என பல மொழிகளும் இவருக்கு அத்துப்படி. (தவமாய் தவமிருந்து படத்தில்இவரே டப்பிங்கும் பேசியுள்ளார்).

இவரது தாத்தா ராமசுப்ரமணிய அய்யர், புகழ்பெற்ற இசைக் கலைஞர். சில இந்திப் படங்களுக்கு மியூசிக் போட்டவராம். அவர்வழி வந்த இசைப் பயிற்சியால் கொஞ்சம் நல்லாவே பாடுவாராம் பத்மா.

எம்.பி.ஏ. படித்துள்ள பத்மாவுக்கு படிப்பை முடித்தவுடன் தெலுங்கில் உருவான தமிழ்ப் படமான காசியின் ரீ-மேக்கில் நடிக்கவாய்ப்பு வந்ததாம். அது தான் இவரது முதல் படம்.

அப்புறம் மலையாளத்தில் மம்முட்டியுடன் காழ்ச்சா என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து அவருடன் ராஜ மாணிக்கம் என்றபடத்திலும் நடிக்க, அதுவும் சூப்பர் ஹிட். இப்படியாக மலையாளத்தில் முதல் இரு படங்களிலேயே மிக நளினமாக நடித்த பத்மா,சேரனின் கண்ணில் பட தவமாய் தவமிருந்து ஹீரோயின் ஆகிவிட்டார்.

இந்தப் படத்தின் சூட்டிங்கின்போதே பத்மப்ரியா கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.

பெரிய ரவுண்டு வருவார் என்று ஆருடம் கூறினார்கள். அதை நிரூபிப்பது போல, தவமாய் தவமிருந்து படம் வெளியாகிஅவருக்கு மிக நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.

படம் தந்த பிரபலத்தால் மளமளவென்று புதிய வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன. அதில் இப்போது பட்டியல் என்றஒரு தமிழ்ப் படத்தில் மட்டும் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளார் பத்மா. மோகன்லாலுடன் வடக்கும் நாதன் என்ற மலையாளப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பத்மாவை

தமிழின் இரு பெரிய நிறுவனங்களும் அணுகியுள்ளன.

நடிப்பு தவிர இவரது இன்னொரு ஆர்வம் இயக்கமாம். விரைவிலேயே ஒரு குறும்படத்தை இயக்கப் போகிறாராம். இதற்கு சேரன்தான் உதவபி போகிறாராம். இதற்காக சேரனிடம் ஒரு படத்தில் அஸிஸ்டெண்டாக ஒர்க் பண்ணவும் திட்டமிட்டிருக்கிறாராம்பத்மப்ரியா.

இதற்கிடையே ஹோம்லி ரோல்கள் மட்டுமல்ல, கிளாமராகவும் நடிக்க நான் தயார் என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்பத்மப்ரியா.

கிளாமர் காட்டாவிட்டால் போட்டியை சமாளிக்க முடியாது என்று சிலர் அட்வைஸ் தந்துள்ளதால், கவர்ச்சியாக நடிக்க நான் ரெடிஎன படு தெம்பாக கூறி, சக போட்டியாளினிகளை மிரட்டியிருக்கிறார் பதமப்ரியா.

எல்லாம் சரி பத்மா, இம்புட்டு குண்டா இருக்கீங்களே என்று இழுத்தால், அது ஒன்னும் பிரச்சினை இல்லை. நாளைக்கே என்னால்வெயிட்டை குறைத்து விட முடியும். கொஞ்சம் குண்டாத்தான் இருக்கேன், இதை நான் சொல்லவில்லை, மத்தவங்கதான்சொல்றாங்க. அவங்களுக்காக (!!)கொஞ்சம் போல வெயிட்டைக் குறைக்கப் போகிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X