என் லிப் டூ லிப் காட்சியை வைத்து விளம்பரம் தேடியது வேதனை: ஜீவா பட நடிகை குமுறல்

By Siva

Recommended Video

லிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ

திருவனந்தபுரம்: நான் நடித்த லிப் டூ லிப் காட்சியை வைத்து படத்திற்கு விளம்பரம் தேடியது வேதனையாக இருந்தது என்று நடிகை ஹனி ரோஸ் தெரிவித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த ஹனி ரோஸ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து வருகிறார். முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அவர் ஒன் பை டூ என்ற மலையாள படத்தில் ஹீரோவுக்கு லிப் டூ லிப் கொடுக்கும் காட்சியில் நடித்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

இயக்குனர்

இயக்குனர்

லிப் டூ லிப் காட்சி பற்றி இயக்குனர் அருண்குமார் முன்கூட்டியே என்னிடம் கூறவில்லை. கதைக்கு அது முக்கியம் என்று அவர் பின்னர் தெரிவித்தார். எனக்கும் அது சரி என்று பட்டதால் நான் நடித்தேன்.

வேதனை

வேதனை

கதைக்கு முக்கியம் என்பதால் நான் நடித்த லிப் டூ லிப் காட்சியை படத்தின் விளம்பரத்திற்கு பயன்படுத்திவிட்டனர். அது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அது மார்கெட்டிங் யுக்தியாக இருக்கலாம் ஆனால் அது எனக்கு பிடிக்கவில்லை.

எதிர்காலம்

எதிர்காலம்

இனி வரும் காலத்தில் லிப் டூ லிப் காட்சிகளில் நடிக்கும்போது கவனமாக இருப்பேன். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் அதை ஏற்பதும், ஏற்காததும் நம் கையில் தான் உள்ளது.

போராட்டம்

போராட்டம்

நடிக்க வந்த புதிதில் அனைவருமே போராட வேண்டியுள்ளது. அந்த நேரத்தில் சிலர் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நம்மை மூளைச்சலவை செய்யப் பார்ப்பார்கள். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

ஆதரவு

ஆதரவு

என் பெற்றோர் எப்பொழுதுமே என்னுடன் இருப்பதால் என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை. எனக்கு வரும் போன் அழைப்பை கூட என் அம்மா தான் எடுத்துப் பேசுவார். அவர் எப்பொழுதுமே என்னுடன் இருப்பார் என்கிறார் ஹனி ரோஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X