பாளையத்தம்மன் குழந்தை நட்சத்திரமா இது?.. அக்ஷயா ஜெய்ராம் இப்போ எப்படி இருக்காரு பாருங்க!
சென்னை: ராஜகாளியம்மன், பாளையத்தம்மன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அக்ஷயா ஜெயராம் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி தீயாக பரவி வருகிறது. பக்தி படங்களில் மட்டும் நடித்து வந்த அக்ஷயா ஜெயராம் அதன் பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
பல ஆண்டுகள் கழித்து அவரை தேடிப் பிடித்து யூடியூப்களில் பேட்டி எடுத்து வரும் நிலையில், பட்டாசு போல அவர் பேசுவதை பார்த்த இளைஞர்கள் அவரது இன்ஸ்டாகிராம் ஐடியை தேடி அலைய ஆரம்பித்து விட்டனர்.

மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வரும் அக்ஷயா ஜெய்ராம் இதற்கு மேல் சினிமாவில் நடிப்பீங்களா உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அந்த பேட்டியில் பதில் அளித்துள்ளார்.
ராமநாராயணன் படத்தில்: மூன்றரை வயதாக இருக்கும் போது தனது வீட்டில் செல்லப் பிராணிகள் அதிகம் இருந்ததாகவும் அதை கவனித்துக் கொண்ட டாக்டர் குடும்பத்துடன் பிக்னிக் போன போது எடுத்த போட்டோக்களை அந்த டாக்டரின் நண்பரான ராமநாராயணன் சார் பார்த்து விட்டு இந்த குழந்தையை ஸ்க்ரீன் டெஸ்ட் எடுக்க வைக்கலாம் என முடிவு செய்து பெற்றோர்களிடம் பேச, சாமி படம் தானே நடிக்கட்டும் என அனுமதிக்க அப்படித்தான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன் என அக்ஷயா ஜெய்ராம் அழகாக தனக்கு கிடைத்த சினிமா வாய்ப்பு குறித்து கூறியுள்ளார்.

தொடர்ந்து நடிக்காதது ஏன்?: ஆரம்பத்திலேயே பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என நினைத்து சில படங்களுக்குப் பிறகு வீட்டில் பெற்றோர்கள் குழந்தையை இதற்கு மேல் சினிமாவில் நடிக்க அனுப்ப வேண்டாம் என முடிவு செய்த நிலையில், படங்களில் நடிப்பதை விட்டு விட்டேன் எனக் கூறியுள்ளார்.

முதல் சம்பளம்: ஆரம்பத்தில் தனக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள் என தெரியாது. ஆனால், ஒரு கட்டத்தில் என்னுடைய பெற்றோர்களிடம் கேட்ட போது, அப்போது குழந்தை நட்சத்திரங்களுக்கு 15 ஆயிரம் சம்பளம் கொடுத்ததாக கூறினர். எனக்கும் 15 ஆயிரம் தான் சம்பளமாக வழங்கியுள்ளனர் என்றார்.

மீண்டும் நடிப்பீங்களா?: மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வரும் அக்ஷயா ஜெய்ராம் மீண்டும் சினிமாவில் நடிக்கும் எண்ணம் தனக்கு இல்லை எனக் கூறியுள்ளார். சினிமாவில் நடிக்க வைக்க சிலர் அப்ரோச் செய்தனர் என்றும் ஆனால், மீண்டும் நடிக்க வேண்டும் என தான் நினைக்கவில்லை என்றும் கூறிவிட்டார்.


Click it and Unblock the Notifications











