பல்லு படாம பாத்துக்க.. ஆமாங்க அடல்ட் காமெடிதான்.. விஜய் வரதராஜின் பிரத்யேக பேட்டி!
சென்னை : டேம்பில் மங்கிஸ் என்ற ஒரு யூடுயூப் சேனல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் வரதராஜின் மற்றும் ஷரா இவர்களது முதல் திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. படத்தை பற்றியும் மற்றும் அதில் நடித்த நடிகர், நடிகைகள் பற்றியும் நமது பிலிமி பிட் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர்
Recommended Video
பல்லு படாம பாத்துக்க படத்தை பற்றி முதலில் கூறுங்கள்
பல்லு படாம பாத்துக்கோ ஒரு அடல்டு ஜாம்பி காமெடி இதில் தினேஷ், சஞ்சிதா ஷெட்டி, சாஷரா, ரிஷி, அப்துல் போன்ற பலர் இதில் நடித்துள்ளனர். படம் ரொம்ப ரகளையாக வந்துள்ளது சென்சார் முடிந்துவிட்டது மார்ச் 13 ஆம் தேதி படம் வெளியாகும் என கூறினார் இயக்குனர் விஜய் வரதராஜன்.

எதனால் இந்த கதை தாமதம்?
நாங்கள் கதை எழுதிய காலம் வேறு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்த காலம் வேறு அதனால் தான் இந்த தாமதம் பல வீடியோக்கள் செய்தோம் அது நாடு முழுக்க வைரல் ஆனது.

ஜெகன் பற்றி அவரது கதாபாத்திரம் அமைப்பு?
ஜெகன் இதில் வேறு ஒரு ஜெகன் தான் அவர் நடித்த கதாபாத்திரம் ஒரு கெ (ஒரே பாலினம் சார்ந்தவர்கள்) அவர்களை இந்த படத்தில் நாங்கள் பாசிட்டிவாக காட்டியுள்ளோம். ஒரு ஐந்து நபர்களை சுற்றி நகரும் கதை இது. அவருடைய ஜோக்குகள் அனைத்தும் இதில் நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும். படத்தில் பல வசனங்கள் கண்டிப்பாக டிரெண்ட் ஆகும் அதில் முழு நம்பிக்கை உள்ளது, இது படமே ஒரு மீம் கன்டன்ட் தான்.

உங்கள் குடும்பத்தினர் படத்தின் டீசரை பார்த்து என்ன கூறினார்கள்?
எங்கள் வீட்டில் மிக தெளிவாக இருந்தனர் தங்களது மகன் இது போன்ற அடல்டு படம் தான் இயக்கப்போகிறான் என்று, சில விஷயங்களை இப்படி கூறினால் தான் புரியும் என்று நான் கூறுவேன் அவர்களும் சரி என ஒத்து கொள்வார்கள். டீசரில் என் பெயர் வரும் அதனை எங்கள் வீட்டில் எனக்கு காண்பித்தனர் எனக்கு அது மிகவும் சந்தோஷத்தை கொடுத்து, மேலும் இருவருக்கும் வீட்டில் இருந்த சப்போட் தான் நாங்கள் இவ்வளவு தூரம் வளர காரணம் என இயக்குனர் தெரிவித்தார்.
சஞ்சிதா ஷெட்டி உங்கள் படத்தில் நடித்ததை பற்றி?
நாங்கள் நிறைய ஹீரோயின்களிடம் கதை கூறினோம், படம் நன்றாக உள்ளது கதையும் நன்றாக உள்ளது ஆனால் படத்தின் தலைப்பை மாற்றுங்கள் என கூறினார்கள். எங்களால் படத்தின் தலைப்பை மாற்ற முடியாது, சஞ்சிதா ஷெட்டியிடம் சென்று முழு கதையை அவருக்கு எடுத்துரைத்தோம். நான் நடிக்கிறேன் என்று அவர் கூறினார் அவருக்கு தான் எங்கள் மனமார்ந்த நன்றி, படத்தில் அவர் தான் முக்கியமான கதாபாத்திரம், பெயருக்கு வருவதும் போவதுமாக இருக்கும் கதாபாத்திரம் கிடையாது.


Click it and Unblock the Notifications











